0162. ராகுவும், கேதுவும்
மிதுனம் ராகுவும் 4-ம் இடத்திலும், கேது 10-லும் தொடர்வதால்
வேலைச்சுமையால் அவ்வப்போது சோர்வடைவீர்கள்.
சின்ன சின்ன கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழக் கூடும்.
சிலர் உங்களுக்கு உதவுவதாக சொல்லி கடைசி நேரத்தில் கைவிட
வாய்ப்பிருக்கிறது
எனவே மற்றவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.
கன்னி ராசிக்குள் ராகு, 7ல் கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால்
உள்மனதில் ஒருபயம், சின்ன சின்ன போராட்டம் வந்துப் போகும்.
மற்றவர்கள் தன்னை ஏளனமாக பார்க்கிறார்களோ என்று நீங்களே
நினைத்துக் கொள்ள வேண்டாம்.
தனுசு ராகுவும் 10ம் இடத்திலும், கேது 4-லும் சாதகமாக இல்லாததால்
அடுத்தடுத்த வேலைகளால் ஓய்வெடுக்க முடியாமல் போகும்.
தாயாருக்கு கை, கால், மூட்டு வலி, நெஞ்சு வலி வந்துப் போகும்.
கும்பம் ராசிக்குள் கேதுவும், 7-ல் ராகுவும் நிற்பதால்
உணர்ச்சிவசப்படுவீர்கள்.
இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
மற்றவர்களின் அறிவுரைகளை முழுமையாக நம்பி அதிரடியான
முடிவுகளை எடுக்க வேண்டாம்.
அரசாங்க விஷயம் இழுபறியாகும்.
திடீர் பயணங்கள் உண்டு.
அவ்வப்போது தூக்கம் குறையும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக