சனி, 26 டிசம்பர், 2015

0125. சனி பலம் திசை

0125. சனி பலம் திசை

சனிதிசை மொத்தம் 19 வருடங்கள் நடைபெறும்.
நவகிரகங்களில் சனி ஆயுள் காரகன் என்பதால் சனி பலம் பெற்று அமைந்திருந்தால் நல்ல உடலமைப்பு சிறப்பான ஆரோக்கியம் யாவும் அமையும்.

சனி திசை சனிபுக்தி
சனிதிசை சனி புக்தியானது 3 வருடங்கள் 3 நாட்கள் நடைபெறும். 

சனிபலம் பெற்று அமைந்திருந்தால் இரும்புப் பொருட்கள் மற்றும் வண்டி வாகனங்களால் அனுகூலங்கள், அரசு வழியில் அனுகூலம், பெயர் புகழ் உயரும் வாய்ப்பு, ஆடை ஆபரண சேர்க்கை, பகைவரும் நட்பாக மாறும் அமைப்பு, உற்றார் உறவினர்களால் உதவி, மனைவி பிள்ளைகளுடன் ஒற்றுமை, ஆசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் போன்ற யாவும் உண்டாகும்.

சனிதிசை புதன் புக்தி
சனிதிசையில் புதன் புக்தியானது 2வருடம் 8 மாதம் 9 நாட்கள் நடைபெறும்.

புதன் பலம் பெற்றிருந்தால்  திருமண சுப காரியங்கள் கை கூடும் வாய்ப்பு, உற்றார் உறவினர் மற்றும் பங்காளிகளிடையே சமுகமான நிலை, நல்ல அறிவாற்றல், ஞாபக சக்தி புத்தி சாலிதனம், கல்வியில் ஏற்றம், கணக்கு கம்பியூட்டர் துறைகளிலும், கலை துறைகளிலும் ஈடுபாடு உண்டாகும்.
ஏஜென்ஸி கமிஷன் மூலம் அனுகூலம் உண்டாகும்.
கவிதை கட்டுரை எழுத்து துறையில் ஆர்வம் ஏற்படும்.
தாய் மாமன் வழியில் அனுகூலம் உண்டாகும்.
பொருளாதார நிலையும் உயரும்.

சனி திசை கேதுபுக்தி
சனி திசை கேது புக்தியானது 1 வருடம் 1 மாதம் 9 நாட்கள் நடைபெறும். 

கேது நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் வண்டி வாகன யோகம், மனைவிப் பிள்ளைகளால் மேன்மை, நண்பர்களின் உதவி ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்க்கொள்ளும் வாய்ப்பு உணடாகும்.
உத்தியோகத்திலும் உயர்வுகள் கிட்டும்.
சேமிப்பு பெருகும். 

சனிதிசை சுக்கிர புக்தி
சனிதிசையில் சுக்கிரபுக்தி 3வருடம் 2மாதம் நடைபெறும். 

சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, இல்லற வாழ்வில் இனிமை, அழகிய குழந்தை பாக்கியம், புதிய வீடு மனை, வண்டி வாகன யோகம், ஆடை ஆபரண சேர்க்கை, உறவினர்களால் உதவி, அரசாங்கத்தால் அனுகூலம், கலைத்துறையில் ஈடுபாடு, தொழில் வியாபார நிலையில் மேன்மை உண்டாகும்.
சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் கிடைக்கும்.

சனிதிசை சூரிய புக்தி
சனிதிசையில் சூரிய புக்தி 11 மாதம் 12 நாட்கள் நடைபெறும்.

சூரியன் பலம் பெற்று அமைந்திருந்தால் அரசு வழியில் அதிகார மிக்க பதவிகளை பெறும் அமைப்பு, ஆடை ஆபரண சேர்க்கை, பிதுர் வழியில் சிறப்பு உறவினர்களால் உதவி எடுக்கும் காரியங்களில் வெற்றி, உடல் நிலையில் சிறப்பு, தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்களும் உயர்வுகளும் உண்டாகும்.

சனிதிசையில் சந்திர புக்தி
சனி திசையில் சந்திர புக்தியானது 1 வருடம் 7 மாதங்கள் நடைபெறும். 

சந்திரன் பலம் பெற்றிருந்தால் பயணங்களால் அனுகூலம், ஜலதொடர்புடைய தொழில்களால் லாபம், அசையும் அசையா சொத்துக்களால் லாபம், குடும்பத்தில் ஒற்றுமை, மனைவி பிள்ளைகளால் அனுகூலம், ஆடை ஆபரண மற்றும் வண்டி வாகன சேர்க்கைகள், ஆலய தரிசனம் செய்ய கூடிய வாய்ப்பு, தாய் தாய் வழி உறவுகளால் அனுகூலங்கள் போன்ற நற்பலன்கள் உண்டாகும்.

சனி திசையில் செவ்வாய் புக்தி
சனி திசையில் செவ்வாய் புக்தி 1வருடம் 1மாதம் 9மாதங்கள் நடைபெறும். 

செவ்வாய் பலம் பெற்றிருந்தால் அரசு வகையில் ஆதரவு, பெரிய உயர்பதவிகளை வகுக்கும் யோகம், சகோதர வழியில் அனுகூலம், மனை பூமி வீடு, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
தொழில் வியாபார நிலையில் உயர்வு, தன தான்ய விருத்தி, எதிரிகளை வெல்லும் ஆற்றல், தைரியம் துணிவு யாவும் உண்டாகும்.

சனிதிசையில் ராகு புக்தி
சனி திசையில் ராகு புக்தியானது 2வருடம் 10மாதம் 6நாட்கள் நடைபெறும்.

ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்று அமைந்திருந்தால் வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு, அரசு வழியில் அனுகூங்கள், பதவி உயர்வு, தாராள தன வரவு, தெய்வ அருளை பெறும் வாய்ப்பு, ஆடை ஆபரண சேர்க்கை, கமிஷன் ஏஜென்ஸி மூலம்  அதிகம் சம்பாதிக்கும் அமைப்பு கொடுக்கும்.

சனிதிசையில் குரு புக்தி
சனிதிசையில் குருபுக்தி 2வருடம் 6மாதம் 12நாட்கள் நடைபெறும். 

குரு பகவான் பலம் பெற்றிருந்தால் எடுக்கும் காரியங்களில் வெற்றி, மனைவி பிள்ளைகளால் அனுகூலம், திருமண சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்பு, அழகிய புத்திர பாக்கியம் உண்டாகும் யோகம், புத்திர வழியில் பூரிப்பு, பெரிய மனிதர்களில் தொடர்பு உயர் பதவிகளை வகுக்கும் ஆற்றல், செல்வம் செல்வாக்கு உயரும் நிலை, தெய்வீக ஆன்மீக  பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

0124. குடும்பத்தினரோடு கருத்து வேறுபாடு

0124. குடும்பத்தினரோடு கருத்து வேறுபாடு

மேஷம் குடும்ப ஸ்தானத்தை ராசிநாதனான செவ்வாய், பாக்கிய
விரயாதிபதியான குரு, தொழில் லாபாதிபதியான சனி ஆகியோர்
பார்ப்பதால் கணவன், மனைவிக்கிடையே மனவேற்றுமை உண்டாகலாம்.
மேஷம் குருவின் 9ம் பார்வையால் குடும்பத்தினரோடு கருத்து
வேறுபாடு தோன்றும்.
மேஷம் குடும்ப ஸ்தானத்தை ராசிநாதனான செவ்வாய், பாக்கிய
விரயாதிபதியான குரு, தொழில் லாபாதிபதியான சனி ஆகியோர்
பார்ப்பதால் குடும்பத்தில் சிறு பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.
ரிஷபம் கண்டகச் சனி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் கணவன்&
மனைவிக்குள் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் வரும்.
கடந்த கால தவறுகள், குற்றங்கள், ஏச்சுப் பேச்சுகளையெல்லாம்
இப்போது நினைவுக்கூர்ந்து புதிய பிரச்னைகளை உருவாக்காதீர்கள்.
மறப்போம், மன்னிப்போம் என்றிருப்பது நல்லது.
மிதுனம் சுக்ரன் 6-ல் மறைவதால் பிள்ளைகளிடம் அதிக கண்டிப்பு
காட்ட வேண்டாம்.
மிதுனம் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் ராகுபகவான் செல்வதால் 
குடும்பத்தில் கூச்சல், குழப்பங்களை ஏற்படுத்த சிலர் முயற்சி
செய்வார்கள்.
சிலரின் துரோகங்களை நினைத்து வருந்துவீர்கள்.
கடகம் உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 10-ல் செவ்வாயும் உலவுவதால்
தந்தையால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும்.
கடகம் கன்னி ராசிக்கு குரு பகவான் அதிசாரமாகச் செல்கிறார்.
அதன் பார்வை 7, 9, 11 ஆகிய இடங்களில் பதிகின்றது.
கொடிகட்டிப் பறந்த குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாக மாறும்.
கடகம் கன்னி ராசிக்கு குரு பகவான் அதிசாரமாகச் செல்கிறார்.
அதன் பார்வை 7, 9, 11 ஆகிய இடங்களில் பதிகின்றது.
தந்தை வழி பகை மாறும்.
கடகம் 2-ல் குரு இருப்பதால் கணவன்-மனைவிக்குள் கருத்து
வேறுபாடுகள் ஏற்படாமல் இருக்க, விட்டுக் கொடுத்துச் செல்வது
நல்லது.
தனுசு சனிபகவான் 2-ம் வீட்டைப் பார்ப்பதால் குடும்பத்தில் 
நிம்மதியற்றப் போக்கு நிலவும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.