திங்கள், 28 டிசம்பர், 2015

0129. மத்திம வயதில் சனி பலமிழந்திருந்து திசை

0129. மத்திம வயதில் சனி பலமிழந்திருந்து திசை

சனி பலமிழந்து மத்திம வயதில் நடைபெற்றால் சோம்பேறி தனம் கெட்ட
பழக்க வழக்கங்களுக்கு ஆளாக கூடிய நிலை, அடிமை தொழில் அமையும்.

சனி பலமின்றி அமைந்திருந்தால் தனித்து சொத்துகள் வாங்குவதோ, கடன்கள்
வாங்குவதோ கூடாது.
பேச்சில் நிதானமுடன் செயல் படுவது நல்லது. 

சனி திசை சனிபுக்தி
சனிதிசை சனி புக்தியானது 3 வருடங்கள் 3 நாட்கள் நடைபெறும். 

சனி பலமிழந்திருந்தால் தொழில் வியாபாரத்தில் நஷ்டம், வேலையாட்களால்
நிம்மதி குறைவு, மறைமுக எதிர்ப்புகளும் பகைவர்களும் அதிகரிக்க கூடிய
நிலை, தேவையற்ற மனசஞ்சலம், பணநஷ்டம் மனைவி புத்திரர்களால்
கடன் படும் நிலை, சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை,
எலும்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகள், வீண்பழிகளை சுமக்கும் நிலை, சிறை
செல்லும் அமைப்பு போன்றவை ஏற்படும்.

சனிதிசை புதன் புக்தி
சனிதிசையில் புதன் புக்தியானது 2வருடம் 8 மாதம் 9 நாட்கள் நடைபெறும்.

புதன் பலமிழந்திருந்தால் உறவினர்களிடம் பகைமை, மனைவி பிள்ளை
களிடையே கருத்து வேறுபாடு கலகம், பகைவரால் பயம், ஞாகசக்தி
குறைவு, தலைவலி, நரம்பு தளர்ச்சி, இடம் விட்டு இடம் மாறும் நிலை,
கல்வியில் ஈடுபாடு குறைவு, தாய் வழி உறவுகளிடையே பிரச்சனை ஏற்படும்.

சனி திசை கேதுபுக்தி
சனி திசை கேது புக்தியானது 1 வருடம் 1 மாதம் 9 நாட்கள் நடைபெறும். 

கேது நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் சொந்த பந்தங்களுடன் விரோதம்
பெண்களால் பிரச்சனை, கலகம், பிரயாணங்களில் எதிர்பாராத விபத்து,
இல்வாழ்வில் ஈடுபாடற்ற நிலை, பணவிரயம், உடல் நிலையில் பாதிப்பு,
இடம் விட்டு இடம் சென்று வாழ வேண்டிய நிலை, மனநிலை பாதிப்பு,
உத்தியோகத்தில் எதர்பாராத மாற்றம் போன்றவை உண்டாகும்.

சனிதிசை சுக்கிர புக்தி
சனிதிசையில் சுக்கிரபுக்தி 3வருடம் 2மாதம் நடைபெறும். 

சுக்கிரன் பலமிழந்திருந்தால் பல பெண்களுடன் தொடர்பு கொள்ளும் அவல
நிலை, அவமானம், இடமாற்றம், உற்றார் உறவினர்களிடையே வீண் பழி
வறுமை, பயம், குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, கடன் பிரச்சனைகள்,
சர்க்கரை நோய், சிறு நீரக கோளாறு வண்டி வாகனம், வீடு மனை
போன்றவற்றை இழக்கும் அவலநிலை உண்டாகும்.

சனிதிசை சூரிய புக்தி
சனிதிசையில் சூரிய புக்தி 11 மாதம் 12 நாட்கள் நடைபெறும். 

சூரியன் பலமிழந்திருந்தால் தந்தைக்கு தோஷம், தந்தை வழி உறவுகளிடையே
பகை குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, கண்களில் பாதிப்பு, இருதய கோளாறு,
அரசு வழியில் பிரச்சனைகள், பணவிரயம் தொழில் வியாபாரத்தில் லாபமற்ற
நிலை ஏற்படும்.

சனிதிசையில் சந்திர புக்தி
சனி திசையில் சந்திர புக்தியானது 1 வருடம் 7 மாதங்கள் நடைபெறும். 

சந்திரன் பலமிழந்திருந்தால் தேவையற்ற மனக்குழப்பங்கள், மனநிலை பாதிப்பு,
அரசு வழியில் பிரச்சனைகள் ஜலத்தால் கண்டம், பயணங்களால் அனுகூலமற்ற
நிலை, குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, நாடு விட்டு நாடு சென்று அலையும்
அவல நிலை, வயிறு மற்றும் சிறு நீரக பிரச்சனைகள் ஏற்படும்.

சனிதிசையில் ராகு புக்தி
சனி திசையில் ராகு புக்தியானது 2வருடம் 10மாதம் 6நாட்கள் நடைபெறும்.

ராகு நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் மன கவலை, எதிர்பாராத
விபத்துக்களால் கண்டம், வயிறு கோளாறு, விஷத்தால் கண்டம், உண்ணும்
உணவே விஷமாகும் நிலை, விஷ பூச்சிகளால் பாதிப்பு, ஜீரம், தோல் நோய்,
குடும்பத்தில் பிரச்சனை மேலிருந்து தவறி கீழே விழும் நிலை, தவறான
பெண் தொடர்பு, இடம் விட்டு இடம் சென்று திரியும் அவலநிலை உண்டாகும்.

சனிதிசையில் குரு புக்தி
சனிதிசையில் குருபுக்தி 2வருடம் 6மாதம் 12நாட்கள் நடைபெறும். 

குரு பலமிழந்திருந்தால் தன தான்யம் நலிவடையும், பெரியோர்களிடம் வீண்
சண்டை சச்சரவு பிராமணர்களின் சாபம், பிள்ளைகளால் மனசஞ்சலம்,
கருசிதைவு, அரசு வழியில் அவமானங்கள் கொடுக்கல் வாங்களில்
பிரச்சனைகள் ஏற்படும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

0128. சகடயோகம் திருமனம் பகுதி = II (F)

0128. சகடயோகம் திருமனம் பகுதி = II (F)

குருவிற்கு 6, 8, 12ஆம் வீடுகளில் சந்திரன் அமர்ந்திருந்தால், அது சகட யோகத்தைக்
கொடுக்கும் ஒருவனுக்கு எட்டில் இன்னொருவன் என்றால், அவனுக்கு, இவனுடைய
இடம் 6ஆம் இடம் ஒருவனுக்கு ஆறில் இன்னொருவன் என்றால், அவனுக்கு,
இவனுடைய இடம் 8ஆம் இடம் திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது குருவிற்கு
6,8ல் சந்திரன் இருந்தால் கணவர் / மனைவி அமைவார் சந்திரனுக்கு 6,8ல்
சந்திரன் வரும் ஜாதகர்தான் அமையும்.

VII. துலாம் = iii. விசாகம் நட்சத்திரம்
துலாத்திற்கு ஆறாம் இடம் மீனம் வீடு.
துலாத்திற்கு எட்டாம் வீடு ரிஷபம் வீடு.
துலாத்திற்கு கன்னி பன்னிரெண்டாம் வீடு.
இதில் குரு அஷ்டம  சஷ்டம நிலை இருந்தால் 6,8 என்பர்.

அவர்கள் A. ஆண் என்றால், a. ரிஷபம் ராசி ரோஹிணி,மிருகசீரிஷம்
நட்சத்திரம்
b. விருச்சிக ராசி விசாகம் நட்சத்திரம்
b. கன்னி ராசி ஹஸ்தம்,சித்திரை நட்சத்திரம்
c. துலாம் ராசி சித்திரை,சுவாதி நட்சத்திரம்
c. கும்பம ராசி அவிட்டம்,சதயம் நட்சத்திரம்
c. மிதுனம் ராசி மிருகசீரிஷம்,திருவாதிரை நட்சத்திரம்

B. பெண் என்றால், a. ரிஷபம் ராசி ரோஹிணி,மிருகசீரிஷம் நட்சத்திரம்
b. தனுசு ராசி மூலம் நட்சத்திரம்
b. சிம்மம் ராசி மகம் நட்சத்திரம்
c. மகரம் ராசி திருவோணம்,அவிட்டம் நட்சத்திரம்
c. மேஷம் ராசி அஸ்விணி நட்சத்திரம்
c. கடகம் ராசி பூசம்,ஆயில்யம்,பூசம் நட்சத்திரம்
பொருத்தம் உடையவைகள் இவர்கள் திருமணம் செய்யலாம்.

VIII. விருச்சிகம் = i. விசாகம் நட்சத்திரம்
விருச்சிகத்திற்கு ஆறாம் இடம் மேஷம் வீடு.
விருச்சிகத்திற்கு எட்டாம் வீடு மிதுனம் வீடு.
விருச்சிகத்திற்கு துலாம் பன்னிரெண்டாம் வீடு.
இதில் குரு அஷ்டம  சஷ்டம நிலை இருந்தால் 6,8 என்பர்.

அவர்கள் A. ஆண் என்றால், a. மேஷம் ராசி அஸ்விணி நட்சத்திரம்
a. மிதுனம் ராசி மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரம்
b. தனுசு ராசி மூலம் நட்சத்திரம்
b. துலாம் ராசி சித்திரை,சுவாதி,விசாகம் நட்சத்திரம்
c. விருச்சிக ராசி விசாகம் நட்சத்திரம்
c. கடகம் ராசி பூசம்,ஆயில்யம் நட்சத்திரம்

B. பெண் என்றால், a. மேஷம் ராசி அஸ்விணி நட்சத்திரம்
a. மிதுனம் ராசி மிருகசீரிஷம் நட்சத்திரம்
b. மகரம் ராசி திருவோணம்,அவிட்டம் நட்சத்திரம்
b. கன்னி ராசி சித்திரை நட்சத்திரம்
c. கும்பம ராசி அவிட்டம் நட்சத்திரம்
c. ரிஷபம் ராசி ரோஹிணி,மிருகசீரிஷம் நட்சத்திரம்
c. சிம்மம் ராசி மகம் நட்சத்திரம்
பொருத்தம் உடையவைகள் இவர்கள் திருமணம் செய்யலாம்.

VIII. விருச்சிகம் = ii. அனுஷம் நட்சத்திரம்
விருச்சிகத்திற்கு ஆறாம் இடம் மேஷம் வீடு.
விருச்சிகத்திற்கு எட்டாம் வீடு மிதுனம் வீடு.
விருச்சிகத்திற்கு துலாம் பன்னிரெண்டாம் வீடு.
இதில் குரு அஷ்டம  சஷ்டம நிலை இருந்தால் 6,8 என்பர்.

அவர்கள் A. ஆண் என்றால், a. மேஷம் ராசி கார்த்திகை,அஸ்விணி
நட்சத்திரம்
a. மிதுனம் ராசி மிருகசீரிஷம்,புனர்பூசம் நட்சத்திரம்
b. தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம்
b. துலாம் ராசி சித்திரை,சுவாதி,விசாகம் நட்சத்திரம்
c. விருச்சிக ராசி விசாகம்,கேட்டை நட்சத்திரம்
c. மீனம் ராசி பூரட்டாதி,ரேவதி நட்சத்திரம்
c. கடகம் ராசி புனர்பூசம்,ஆயில்யம் நட்சத்திரம்

B. பெண் என்றால், a. மேஷம் ராசி கார்த்திகை,அஸ்விணி நட்சத்திரம்
a. மிதுனம் ராசி மிருகசீரிஷம்,புனர்பூசம் நட்சத்திரம்
b. மகரம் ராசி திருவோணம்,உத்திராடம் நட்சத்திரம்
b. கன்னி ராசி உத்திரம்,ஹஸ்தம்,சித்திரை நட்சத்திரம்
c. கும்பம ராசி சதயம்,பூரட்டாதி நட்சத்திரம்
c. ரிஷபம் ராசி கார்த்திகை,ரோஹிணி,மிருகசீரிஷம் நட்சத்திரம்
c. சிம்மம் ராசி உத்திரம்,மகம் நட்சத்திரம்
பொருத்தம் உடையவைகள் இவர்கள் திருமணம் செய்யலாம்.

VIII. விருச்சிகம் = iii. கேட்டை நட்சத்திரம்
விருச்சிகத்திற்கு ஆறாம் இடம் மேஷம் வீடு.
விருச்சிகத்திற்கு எட்டாம் வீடு மிதுனம் வீடு.
விருச்சிகத்திற்கு துலாம் பன்னிரெண்டாம் வீடு.
இதில் குரு அஷ்டம  சஷ்டம நிலை இருந்தால் 6,8 என்பர்.

அவர்கள் A. ஆண் என்றால், a. மேஷம் ராசி கார்த்திகை,பரணி நட்சத்திரம்
a. மிதுனம் ராசி மிருகசீரிஷம்,புனர்பூசம் நட்சத்திரம்
b. தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம்
b. துலாம் ராசி சுவாதி,விசாகம் நட்சத்திரம்
c. விருச்சிக ராசி விசாகம்,அனுஷம் நட்சத்திரம்
c. மீனம் ராசி உத்திரட்டாதி நட்சத்திரம்
c. கடகம் ராசி புனர்பூசம்,பூசம் நட்சத்திரம்

B. பெண் என்றால், a. மேஷம் ராசி கார்த்திகை,பரணி நட்சத்திரம்
a. மிதுனம் ராசி மிருகசீரிஷம்,புனர்பூசம் நட்சத்திரம்
b. மகரம் ராசி திருவோணம்,உத்திராடம் நட்சத்திரம்
b. கன்னி ராசி உத்திரம்,ஹஸ்தம் நட்சத்திரம்
c. கும்பம ராசி சதயம் நட்சத்திரம்
c. ரிஷபம் ராசி கார்த்திகை,ரோஹிணி,மிருகசீரிஷம் நட்சத்திரம்
c. சிம்மம் ராசி உத்திரம்,பூரம் நட்சத்திரம்
பொருத்தம் உடையவைகள் இவர்கள் திருமணம் செய்யலாம்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

0127. மரணம்

0127. மரணம்

மனைவி ஜாதகத்தில் லக்னத்திற்கு 8ம் வீடு, கணவர் ஜாதகத்தில்
லக்னத்திற்கு 2ம் வீடாக வந்தால் கணவருக்கு மரணம் ஏற்படும்.
Example : 01. எனனிடம் வந்த பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்திற்கு 8ம்
வீடு கடகம், கணவர் ஜாதகத்தில் கடகம் லக்னத்திற்கு 2ம் வீடாக வந்தால்
கணவருக்கு மரணம் ஏற்படும்.
இருவருக்கும் திருமணம் 07/04/2003ல் நடந்தது.
அந்த பெண்ணின் கணவருக்கு 05/10/2015ல் மரணம் ஏற்பட்டது.
Example : 02. எனனிடம் வந்த பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாயை சூரியன்
கேது பார்கிறது.

சூரியன் தந்தைக்குக் காரகன்
செவ்வாய் சகோதர காரகன்
கேது மோட்சத்திற்கு உரியவன்

அதனால் அந்த பெண்ணிற்க்கு செவ்வாய் தசையில் கேது புத்தி
நடக்கும் பொழுது தந்தையின் சகோதரனுக்கு மரணம் ஏற்படும்.
வாக்கிய பஞ்சாங்கத்தியில் செவ்வாய் தசையில்
கேது புத்தி 18/03/2009 to 15/08/2009
அந்த பெண்ணின் தந்தையின் சகோதரனுக்கு 19/05/2009ல் மரணம்
ஏற்பட்டது.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.