வெள்ளி, 21 ஜனவரி, 2011

043. சுபநிகழ்ச்சிகள்

043. சுபநிகழ்ச்சிகள்

மேஷம் குடும்ப ஸ்தானத்தை ராசிநாதனான செவ்வாய், பாக்கிய
விரயாதிபதியான குரு, தொழில் லாபாதிபதியான சனி ஆகியோர்
பார்ப்பதால் வீட்டில் சுபநிகழ்ச்சிகளுக்கான வேலைகளைத்
தொடங்குவீர்கள்.
மேஷம் உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம்
முதல் பாதத்தில் ராகுபகவான் செல்வதால் வீட்டில் தள்ளிப் போன
சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடைபெறும். 
மேஷம் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் சந்திரன் வீட்டில் தள்ளிப்போய் 
கொண்டிருந்த சுபவிசேஷங்கள் சிறப்பாக முடியும்.
மேஷம் குருபகவான் தனது 7ம் பார்வையால் உங்களின் 12ம் வீட்டை பார்ப்பதால்
திருமணம், சீமந்தம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும்.
மேஷம் குருபகவான் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் வந்தமர்வதால் திருமணம்,
சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.
ரிஷபம் சனி ஜென்ம  ராசிக்கு 7ல் சஞ்சரிப்பதால் திருமண சுப  காரியங்கள் கைகூடி
மகிழ்ச்சி அளிக்கும்.
ரிஷபம் உங்கள் ராசிக்கு 2-ல் புதனும்; சுக்கிரனும், 10-ல் கேதுவும் உலவுவது நல்லது.
குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும்.
ரிஷபம் உங்களுடைய ராசிக்கு 5ம் வீட்டில் குருபகவான் வக்ரமாகி அமர்வதால் 
வீட்டில் தடைப்பட்டிருந்த சுபநிகழ்ச்சிகளெல்லாம் இந்த வருடம் நடந்தேறும். 
கடகம் இரண்டாம் வீட்டில் குரு இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சத்தையும்
ஒற்றுமையையும் சுப காரியங்களையும் அதிகரிப்பார்.
திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால்
வீடு களைக்கட்டும்.
கன்னி சூரியன் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் சுப நிகழ்ச்சிகளில்
கலந்துக் கொள்வீர்கள்.
தனுசு குருபகவான் 2-ம் வீட்டை பார்ப்பதால் அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு
களைக்கட்டும்.
தனுசு உங்களின் பூர்வ புண்யாதிபதி செவ்வாய் வலுவாக இருப்பதால்
சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.
மீனம் இரண்டாம் வீட்டிற்கு குரு பார்வை இருப்பதால் குடும்பத்தில் சுப
நிகழ்ச்சி நடக்கும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

042. தசை மற்றும் புக்தி பகுதி = II

042. தசை மற்றும் புக்தி பகுதி = II

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் புதன் தசை நடக்க உள்ளது.
புதன் ராசி கட்டத்தில் லக்னத்திற்கு 7ல் அதாவது தனுசு ராசியில் உள்ளது.
அம்ச கட்டத்தில் புதன் லக்னத்தில் அதாவது மிதுன அம்ச கட்டத்தில்
உள்ளது.

அந்தப் பெண்ணிற்கு புதன் தசை 17 வருடம் நடக்கும் பொழுது 70%
நன்மை ; மிதி 30% தீமை தரும்.

புதன் தசையில் வரும் புத்தி காலத்தில் நன்மை ; தீமை மாறுபடும்.

அதுபோல் புதன் தசையில் வரும் புத்தியில் வரும் அந்தர காலத்திலும்
நன்மை ; தீமை மாறுபடும்.

Example : 01. அவருடைய புதன் தசை புத்தி நடப்புக் கணக்கு (70%) சமம்

நாட்கள் மாதங்கள் வருடம்

09 - 10 - 2015 புதன் தசை
27 - 04 - 0002 புதன் புத்தி (70%) சமம்
---------------------
06 - 03 - 2018
27 - 11 - 0000 கேது புத்தி (60%) சமம்
---------------------
03 - 03 - 2019
00 - 10 - 0002 சுக்கிரன் புத்தி (70%) ஆட்சி
---------------------
03 - 01 - 2022
06 - 10 - 0000 சூரியன் புத்தி (60%) நட்பு
---------------------
09 - 11 - 2022
00 - 05 - 0001 சந்திரன் புத்தி (65%) சமம்
---------------------
09 - 04 - 2024
27 - 11 - 0000 செவ்வாய் புத்தி (50%) பகை
---------------------
06 - 04 - 2025
18 - 06 - 0002 ராகு புத்தி (25%) நீச்சம்
---------------------
24 - 10 - 2027
06 - 03 - 0002 குரு புத்தி (60%) நட்பு
---------------------
30 - 01 - 2030
09 - 08 - 0002 சனி புத்தி (90%) உச்சம்
---------------------
09 - 10 - 2032
============

Example : 02. அவருடைய புதன் தசை புத்தி அந்தரம் நடப்புக் கணக்கு
(70%) சமம்.

நாழிகை நாட்கள் மாதங்கள் வருடம்

00 - 09 - 10 - 2015 புதன் தசை புதன் புத்தி
491/2 - 02 - 04 - 0000 புதன் அந்தரம் (70%) சமம்
---------------------
011/2 - 12 - 02 - 2016
341/2 - 20 - 01 - 0000 கேது அந்தரம் (60%) சமம்
---------------------
36 - 02 - 04 - 2016
30 - 24 - 04 - 0000 சுக்கிரன் அந்தரம் (70%) ஆட்சி
---------------------
18 - 27 - 08 - 2016
21 - 13 - 01 - 0000 சூரியன் அந்தரம் (60%) நட்பு
---------------------
39 - 10 - 10 - 2016
15 - 12 - 02 - 0000 சந்திரன் அந்தரம் (65%) சமம்
---------------------
06 - 23 - 12 - 2016
341/2 - 20 - 01 - 0000 செவ்வாய் அந்தரம் (50%) பகை
---------------------
401/2 - 13 - 02 - 2017
03 - 10 - 04 - 0000 ராகு அந்தரம் (25%) நீச்சம்
---------------------
431/2 - 23 - 06 - 2017
36 - 25 - 03 - 0000 குரு அந்தரம் (60%) நட்பு
---------------------
31 1/2 - 19 - 10 - 2017
16 1/2 - 17 - 04 - 0000 சனி அந்தரம் (90%) உச்சம்
---------------------
48 - 06 - 03 - 2018
=================

இந்த (%) இந்த பெண்ணின் ஜாதகத்திற்கு மட்டும்தான்.
அவரவர் ராசி : அம்சத்தில் உள்ள கிரகத்தை வைத்து தான் (%) மாறுபடும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.