0123. புதன் பலம் திசை
புதன் திசை மொத்தம் 17 வருடங்களாகும்.
புதன் பகவான் கல்விகாரகன் ஞானகாரன் தாய் மாமனுக்கு காரகனாக விளங்குகிறார்.
கணக்கு, கம்பியூட்டர் சம்மந்தப்பட்டவைகளுக்கும், கமிஷன் ஏஜென்ஸி போன்றவற்றிற்கும் காரகனாகிறார்.
நல்ல ஞாபக சக்தி, நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் நரம்பு தொடர்புடைய பிரச்சனைகளுக்கும் காரகம் வகுக்கிறார்
புதன் சுப கிரக சேர்க்கை பெற்றால் சுபராகவும், பாவிகள் சேர்க்கைப் பெற்றால் பாவியாகவும் செயல்படுவார்.
புதன்தசா புதன்புக்தி
புதன் திசையில் புதன் புக்தியானது 2 வருடம் 4 மாதம் 27 நாட்கள் நடைபெறும்.
புதன் பலம் பெற்று அமைந்திருந்தால் நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், உயர்வான அதிகாரம் பெற்று வாழம் அமைப்பு, மனைவி பிள்ளைகளால் அனுகூலம், குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும் வாய்ப்பு, புத்திர வழியில் பூரிப்பு, புதுமையான வீடு, ஆடை ஆபரண கேர்க்கை போன்ற நற்பலன்கள் உண்டாகும்.
புதன்திசா கேதுபுக்தி
புதன் திசையில் கேது புக்தியானது 11மாதம் 27நாட்கள் நடைபெறும்.
கேது பலம் பெற்று நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் வண்டி வாகன யோகம், வியாபாரத்தில் மேன்மை, மனைவி பிள்ளைகளால் மகிழச்சி, பூமி மனை வாங்கும் யோகம், தாராள தனவரவு, பெண்களால் அனுகூலம் நவீன பொருட்கள் சேரும் யோகம், ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு, தெய்வ தரிசனங்களுக்காக பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.
புதன்திசா சுக்கிர புக்தி
புதன் திசையில் சுக்கிர புக்தியானது 2வருடம் 10மாதம் ந¬பெறும்.
சுக்கிர பகவான் பலமாக அமைந்திருந்தால் தான தருமங்கள் செய்யும் வாய்ப்பு, வீடு மனை வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் புத்திர பாக்கியம் உண்டாகும் வாய்ப்பு, குடும்பத்தில் சுபிட்சம், அதிகாரமுள்ள பதவிகள் அடையும் யோகம் ஊதிய உயர்வுகள், நண்பர்களால் உதவி, முதலாளிகளிடையே ஒற்றுமை, பெண்களால் அனுகூலம் ஆடை ஆபரண சேர்க்கை யாவும் உண்டாகும்.
புதன்திசை சூரிய புக்தி
புதன் திசையில் சூரிய புக்தியானது 10மாதம் 6நாட்கள் நடைபெறும்.
சூரியன் பலம் பெற்றிருந்தால் அரசியலில் பெயர் புகழ் கௌரவம் உயரக்கூடிய வாய்ப்பு, எடுக்கும் காரியங்களில் வெற்றி, பகைவரை வெற்றி கொள்ள கூடிய வலிமை வல்லமை தந்தை, தந்தை வழி உறவுகளால் அனுகூலம் மனைவி பிள்ளைகளால் மகிழச்சி உண்டாகும்.
அரசு வழியில் அனுகூலங்கள் கிட்டும்.
புதன் திசையில் சந்திரபுக்தி
புதன் திசையில் சந்திர புக்தியானது 1 வருடம் 5 மாதங்கள் நடைபெறும்.
சந்திரன் பலம் பெற்றிந்தால் அனுகூலமான பயணங்கள், வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்பு உண்டாகும்.
திருமண சுபகாரியங்கள் கைகூடும் யோகம், பணவரவுகளில் மகிழ்ச்சி எடுக்கும் காரியங்களில் வெற்றி, அரசு வழியில் அனுகூலம், ஆடை ஆபரண சேர்க்கை, பூமி மனையால் யோகம், ஆடம்பரமான உணவுகளை உண்ணும் யோகம், நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். ஜலதொடர்புடைய தொழில் ஏற்றம் ஏற்படும்.
புதன்திசையில் செவ்வாய் புக்தி
புதன் திசையில் செவ்வாய் புக்தியானது 11 மாதம் 27நாட்கள் நடைபெறும்.
செவ்வாய் பலம் பெற்றிருந்தால் பூமி மனை யோகம், வண்டி வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு, அரசு வழியில் அனுகூலம், நல்ல நிர்வாகத்திறன், தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்பு, உடல் நலத்தில் சிறப்பு, எதிரிகளை வெல்லும் ஆற்றல் உண்டாகும்.
புதன் திசையில் ராகுபுக்தி
புதன் திசையில் ராகுபுக்தியானது 2&வருடம் 6&மாதம் 18&நாட்கள் நடைபெறும்.
ராகு பலம் பெற்று நின்ற வீட்டதிபதியும் பலம் பெற்றிருந்தால் அரசு வழியில் மேன்மை, உயர் பதவிகளை வகுக்கும் யோகம் புதுமையான விஷயங்களில் ஈடுபாடு வீடு மனை ஆடை ஆபரண சேர்க்கை, புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதல் பகைவரை வீழ்த்தும் பலம் உண்டாகும்.
புதன் திசையில் குருபுக்தி
புதன் திசையில் குருபுக்தியான 2வருடம் 3மாதம் 6நாட்கள் நடைபெறும்.
குருபகவான் பலம் பெற்றிருந்தால் தாராள தனவரவு, குடும்பத்தில் சுப காரியம் கைகூடும் அமைப்பு, உற்றார் உறவினர்களின் ஆதரவு, ஆடை ஆபரண சேர்க்கை பூமி மனை, வண்டி வாகனங்கள் சேரும் யோகம் குடும்பத்தில் சுபிட்சம், புத்திர வழியில் பூரிப்பு, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, பூர்வீக சொத்துகளால் லாபம் பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.
புதன் திசையில் சனி புக்தி
புதன் திசையில் சனி புக்தியானது 2&வருடம் 8&மாதம் 9&நாட்கள் நடைபெறும்.
சனி பகவான் பலம் பெற்றிருந்தால் தொழில் வியாபாரம் முலம் லாபம், இரும்பு சம்பந்தபட்ட தொழிலில் அனுகூலம் நிறைய வேலையாட்களை வைத்து வேலை வாங்கும் வாய்ப்பு, தன தான்ய விருத்தி, ஆடை ஆபரணம் சேரும் அமைப்பு, புண்ணிய தீர்த்த யாத்திரை, தெய்வ பக்தி உண்டாகும் அமைப்பு, தாய் தாய் வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
வெள்ளி, 25 டிசம்பர், 2015
0122. வெளிநாடு செல்லும் வாய்ப்பு வேலை
0122. வெளிநாடு செல்லும் வாய்ப்பு வேலை
மேஷம் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் ராகு நிற்பதால் சிலருக்கு அயல்நாட்டில்
வேலைக் கிடைக்கும்.
மேஷம் ராகு 11ம் வீட்டுக்கு வந்திருக்கிறார்.
இதனால் வெளிநாட்டில் உத்யோகம் கிடைக்கும்.
ஏற்கனவே வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு
பதவியும் சம்பளமும் உயரும்.
வெளிநாட்டிலுள்ள உறவினர் மற்றும் நண்பர்கள் நல்ல முறையில்
உதவுவார்கள்.
மிதுனம் பத்தாம் வீட்டிற்கு ராகுவின் பார்வை இருப்பதால் வெளிநாட்டு
உத்யோகம் வெளிநாட்டு வியாபாரம் கிடைக்கும்/ பெருகும்.
கடகம் இரண்டாம் வீட்டில் ராகு இருப்பதால் நீங்களோ அல்லது
கணவரோ அல்லது குடும்ப நபர்களோ வெளிநாட்டிற்குச் செல்ல
வாய்ப்பு உள்ளது.
வெளிநாட்டு வாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் குடும்பத்தாருக்கு அதில்
வெற்றி கிடைக்கும்.
குடும்பத்தில் யாராவது வேலை அல்லது படிப்பு காரணமாக
வெளிநாட்டிற்குச் செல்ல நேரிடும்.
கடகம் சனிபகவான் 7ம் வீட்டை பார்ப்பதால் வெளிநாட்டு நிறுவனங்களின்
வாய்ப்புகளும் வரும்.
கடகம் மூன்றிலுள்ள ராகு சகோதர, சகோதரிகளுக்கு வெளிநாட்டு
உத்யோகம்/கல்வி கிடைக்க உதவுவார்.
கன்னி சனியும், செவ்வாயும் வலுவாக 3-ம் இடத்தில் நிற்பதால் அயல்நாடு
தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும்.
துலாம் உங்கள் பாக்யாதிபதியும்-விரயாதிபதியுமான புதனின் கேட்டை
நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் வெளிநாட்டில் வேலை கிடைக்கும்.
துலாம் குருவும், ராகுவும் 11-ம் வீட்டில் வலுவாக நிற்பதால் மகனுக்கு
அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும்.
விருச்சிகம் உங்கள் அஷ்டம-லாபாதிபதியான புதனின் கேட்டை
நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் விசா கிடைக்கும்.
விருச்சிகம் பத்தாம் வீட்டு ராகுவும், அந்த வீட்டைப் பார்க்கும் கேதுவும்
வெளிநாட்டு உத்யோகத்திற்கு வழிகாட்டுவார்கள்.
அல்லது உள்ளூரிலுள்ள வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
அலுவலக சொந்த விஷயமாக வெளிநாடு போக வாய்ப்பு உள்ளது.
இதனால் வெளிநாட்டில் வேலை கிடைக்கும்.
தனுசு உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் குரு வந்தமர்வதால் அயல்நாடு
தொடர்புடைய நிறுவனத்திலும் வேலைக் கிடைக்க
வாய்ப்பிருக்கிறது.
தனுசு குருபகவான் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் நுழைவதால் வெளிநாட்டில்
சிலருக்கு வேலை அமையும்.
தனுசு குருபகவான் 10-ம் வீட்டில் தொடர்வதால் சிலர் மனைவி, பிள்ளைகளை
விட்டுப் பிரிந்து அயல்நாடு சென்று வேலைப் பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும்.
மகரம் சனிபகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் அயல்நாடு தொடர்புடைய
நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் செய்வதன் மூலம் உங்கள்
நிறுவனத்தின் புகழ் கூடும்.
மகரம் இரண்டாம் வீட்டில் கேது இருப்பதால் குடும்பத்தில் யாராவது
வெளிநாட்டில் வேலை கிடைத்தோ அல்லது படிப்பதற்காகவோ
செல்ல நேரிடும்.
கும்பம் ஏழாம் வீட்டில் ராகு இருப்பதால் வாழ்க்கைத் துணைவருக்கு
வெளிநாட்டு உத்யோகம் அல்லது பயணத்திற்கான வாய்ப்பு கிடைக்கும்.
கும்பம் 10ம் வீட்டில் சனி வந்தமர்வதால் சிலருக்கு அயல்நாட்டு
நிறுவனங்களில் புது வாய்ப்புகள் வரும்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)