0122. வெளிநாடு செல்லும் வாய்ப்பு வேலை
மேஷம் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் ராகு நிற்பதால் சிலருக்கு அயல்நாட்டில்
வேலைக் கிடைக்கும்.
மேஷம் ராகு 11ம் வீட்டுக்கு வந்திருக்கிறார்.
இதனால் வெளிநாட்டில் உத்யோகம் கிடைக்கும்.
ஏற்கனவே வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு
பதவியும் சம்பளமும் உயரும்.
வெளிநாட்டிலுள்ள உறவினர் மற்றும் நண்பர்கள் நல்ல முறையில்
உதவுவார்கள்.
மிதுனம் பத்தாம் வீட்டிற்கு ராகுவின் பார்வை இருப்பதால் வெளிநாட்டு
உத்யோகம் வெளிநாட்டு வியாபாரம் கிடைக்கும்/ பெருகும்.
கடகம் இரண்டாம் வீட்டில் ராகு இருப்பதால் நீங்களோ அல்லது
கணவரோ அல்லது குடும்ப நபர்களோ வெளிநாட்டிற்குச் செல்ல
வாய்ப்பு உள்ளது.
வெளிநாட்டு வாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் குடும்பத்தாருக்கு அதில்
வெற்றி கிடைக்கும்.
குடும்பத்தில் யாராவது வேலை அல்லது படிப்பு காரணமாக
வெளிநாட்டிற்குச் செல்ல நேரிடும்.
கடகம் சனிபகவான் 7ம் வீட்டை பார்ப்பதால் வெளிநாட்டு நிறுவனங்களின்
வாய்ப்புகளும் வரும்.
கடகம் மூன்றிலுள்ள ராகு சகோதர, சகோதரிகளுக்கு வெளிநாட்டு
உத்யோகம்/கல்வி கிடைக்க உதவுவார்.
கன்னி சனியும், செவ்வாயும் வலுவாக 3-ம் இடத்தில் நிற்பதால் அயல்நாடு
தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும்.
துலாம் உங்கள் பாக்யாதிபதியும்-விரயாதிபதியுமான புதனின் கேட்டை
நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் வெளிநாட்டில் வேலை கிடைக்கும்.
துலாம் குருவும், ராகுவும் 11-ம் வீட்டில் வலுவாக நிற்பதால் மகனுக்கு
அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும்.
விருச்சிகம் உங்கள் அஷ்டம-லாபாதிபதியான புதனின் கேட்டை
நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் விசா கிடைக்கும்.
விருச்சிகம் பத்தாம் வீட்டு ராகுவும், அந்த வீட்டைப் பார்க்கும் கேதுவும்
வெளிநாட்டு உத்யோகத்திற்கு வழிகாட்டுவார்கள்.
அல்லது உள்ளூரிலுள்ள வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
அலுவலக சொந்த விஷயமாக வெளிநாடு போக வாய்ப்பு உள்ளது.
இதனால் வெளிநாட்டில் வேலை கிடைக்கும்.
தனுசு உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் குரு வந்தமர்வதால் அயல்நாடு
தொடர்புடைய நிறுவனத்திலும் வேலைக் கிடைக்க
வாய்ப்பிருக்கிறது.
தனுசு குருபகவான் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் நுழைவதால் வெளிநாட்டில்
சிலருக்கு வேலை அமையும்.
தனுசு குருபகவான் 10-ம் வீட்டில் தொடர்வதால் சிலர் மனைவி, பிள்ளைகளை
விட்டுப் பிரிந்து அயல்நாடு சென்று வேலைப் பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும்.
மகரம் சனிபகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் அயல்நாடு தொடர்புடைய
நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் செய்வதன் மூலம் உங்கள்
நிறுவனத்தின் புகழ் கூடும்.
மகரம் இரண்டாம் வீட்டில் கேது இருப்பதால் குடும்பத்தில் யாராவது
வெளிநாட்டில் வேலை கிடைத்தோ அல்லது படிப்பதற்காகவோ
செல்ல நேரிடும்.
கும்பம் ஏழாம் வீட்டில் ராகு இருப்பதால் வாழ்க்கைத் துணைவருக்கு
வெளிநாட்டு உத்யோகம் அல்லது பயணத்திற்கான வாய்ப்பு கிடைக்கும்.
கும்பம் 10ம் வீட்டில் சனி வந்தமர்வதால் சிலருக்கு அயல்நாட்டு
நிறுவனங்களில் புது வாய்ப்புகள் வரும்
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக