0121. வாகனங்கள்
மேஷம் உங்கள் தனாதிபதி சுக்ரன் வலுவாக நிற்பதால் பழுதாகிக் கிடந்த
வாகனத்தை தந்து புது வண்டி வாங்குவீர்கள்.
மேஷம் குடும்ப ஸ்தானத்தை ராசிநாதனான செவ்வாய், பாக்கிய
விரயாதிபதியான குரு, தொழில் லாபாதிபதியான சனி ஆகியோர்
பார்ப்பதால் புதியதாக வாகனம் வாங்குவதற்கு அனுகூலமாக கைக்கு
பணம் வந்து சேரும்.
மேஷம் ராகுபகவான் உங்கள் தன - சப்தமாதிபதியான சுக்கிரனின் பூரம்
நட்சத்திரத்தில் செல்வதால் நெடுநாள் கனவான இருந்த வாகனம் வாங்கும்
ஆசை நிறைவேறும்.
மேஷம் குரு 5-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் வாகனம் வாங்குவீர்கள்.
ரிஷபம் சனிபகவான் 4-ம் வீட்டை பார்ப்பதால் வாகனத்திற்கான லைசன்ஸ்சை
புதுப்பிக்க தவறாதீர்கள்.
சிறுசிறு அபராதம் கட்ட வேண்டி வரும்.
ரிஷபம் உங்கள் ராசிநாதன் சுக்ரன் ராசிக்கு 6-ம் வீட்டில்
மறைந்திருப்பதால் வாகனத்தில் கவனம் தேவை.
ரிஷபம் உங்களின் சுகாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் முதல்
பாதத்தில் ராகுபகவான் செல்வதால் பழுதாகிக் கிடந்த வாகனத்தை
மாற்றுவீர்கள்.
ரிஷபம் ராகு 4ம் வீட்டில் அமர்வதால் வாகனத்தில் செல்லும்போது
ஆர்.சி. புக், லைசென்சை மறக்காதீர்கள்.
சின்னச் சின்ன அபராதம் கட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
சொந்த வாகனத்தில் இரவு நேரத்தில் நீண்ட தூரப் பயணங்களை
தவிர்ப்பது நல்லது.
ரிஷபம் சிம்மம் குரு புது வாகனங்கள் வாங்குவீர்கள்.
ரிஷபம் சப்தமாதிபதி செவ்வாய் 7-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால்
வாகனத்தை சீர் செய்வீர்கள்.
ரிஷபம் சூரியன் 12-ல் மறைவதால் வாகனம் அடிக்கடி செலவு வைக்கும்.
மிதுனம் சுக்ரன் 6-ல் மறைவதால் வாகனப் பழுது வந்துச் செல்லும்.
மிதுனம் நாலாம் வீட்டிலுள்ள குரு அருளால், புதிய வாகனம்
வாங்குவீர்கள்.துலாம் சூரியன் 3-ம் வீட்டில் நுழைந்திருப்பதால் புது வாகனம்
வாங்குவீர்கள்.
மிதுனம் சனிபகவான் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் நிற்கும் போது
இரு சக்கர வாகனத்தை தந்து விட்டு நான்கு சக்கர வாகனம் அமைப்பு
உண்டாகும்.
கடகம் ராகு 2-லும், கேது 8-ம் இடத்திலும் தொடர்வதால் வாகனத்தில் செல்லும்
போது கவனம் தேவை.
கடகம் குருபகவான் 2-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் வாகன வசதிப்
பெருகும்.
கடகம் உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 10-ல் செவ்வாயும் உலவுவதால் வாகனம்
சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும்.
கடகம் புதன் 6 ல் மறைந்திருப்பதால் வாகனம் அடிக்கடி செலவு வைக்கும்.
துலாம் ஏழரைச் சனியில் பாதச் சனி உங்களுக்கு நடைபெற்றுக்
கொண்டிருப்பதால் வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியை
தவிர்ப்பது நல்லது.
துலாம் உங்களுடைய ராசிநாதன் சுக்ரன் உங்கள் ராசியைப் பார்த்துக்
கொண்டிருக்கும் போது வாகனத்தை மாற்றுவீர்கள்.
விருச்சிகம் 5-ல் சுக்ரன் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் வாகனம்
வாங்குவீர்கள்.
தனுசு ஏழரைச் சனி தொடங்கியிருப்பதால் வாகன வசதி உண்டாகும்.
தனுசு உங்களுடைய ராசிக்கு 4-ம் வீட்டில் கேது நிற்கும் போது வாகனம்
அடிக்கடி பழுதாகும்.
மகரம் சூரியன் 12-ல் மறைவதால் இரவு நேரத்தில் சொந்த வாகனத்தில்
பயணிப்பதை தவிர்ப்பது நல்லது.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக