0118. மாணவ-மாணவிகள்
மேஷம் கல்விஸ்தானமான நான்காம் இடத்தை சனி தனது பத்தாம் பார்வையால்
பார்க்கிறார்.
மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல
மதிப்பெண்களைப் பெற முடியும்.
உடல் நல பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும்.
தேவையற்ற பொழுது போக்குகளைத் தவிர்ப்பது நல்லது.
நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்து பழகுவது சிறந்தது.
மேஷம் அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் விடைகளை எழுதிப்பாருங்கள்.
பொது அறிவையும் வளர்த்துக் கொள்ள தயாராகுங்கள்.
மொழி அறிவையும், பொது அறிவையும், அறிவியல் அறிவையும் தரக் கூடிய
புத்தகங்களையும் படியுங்கள்.
படிப்பில் ஆர்வமில்லாமல் போகும்.
தேர்வின்போது படித்துக் கொள்ளலாம் என்ற அலட்சியம் வேண்டாம்.
சந்தேகங்களை ஆசிரியரிடம் கேட்பதில் தயக்கம் காட்டாதீர்கள்.
வேதியியல், கணிதப் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
கூடாநட்பைத் தவிருங்கள்.
மேஷம் உங்களின் 9ம் அதிபதி பாக்யாதிபதியான குருபகவான் 4ம் வீட்டில்
அமர்ந்திருப்பதால் பிள்ளைகளின் படிப்பு அதிருப்தியான சூழ்நிலை
உருவாகும்.
மேஷம் குருபகவான் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் வந்தமர்வதால்
பிள்ளைகளின் உயர்கல்வி சம்பந்தப்பட்ட முயற்சிகள் பலிதமாகும்.
மேஷம் குருவின் 9ம் பார்வையால் மாணவர்கள் கல்வியில்
முன்னேற கடின உழைப்பு தேவை.
பாடங்களைப் படிக்கும்போது சிந்தனை சிதறல், வீண் குழப்பத்தை
தவிர்க்க பாடங்களை எழுதிப் பார்ப்பது நல்லது.
மேஷம் உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியனின் உத்திரம்
நட்சத்திரம் முதல் பாதத்தில் ராகுபகவான் செல்வதால் பிள்ளைகளின்
கல்வி சம்பந்தப்பட்ட முயற்சிகள் வெற்றியடையும்.
ரிஷபம் ராசிநாதனான சுக்கிரன் புதனுடன் இணைந்திருக்கிறார்.
அறிவுத்திறன் அதிகரிக்கும்.
ரிஷபம் சிம்மம் குரு மாணவர்களின் கல்வித்தரம் உயரும்.
உயர்கல்வியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.
ரிஷபம் புதன் 12-ம் இடம் மாறுவதால் மாணவர்கள் படிப்பில் அதிக
கவனம் செலுத்துவது அவசியம்.
மிதுனம் நாலாம் வீட்டிலுள்ள குரு அருளால், மாணவர்களுக்கு
திடீரென்று படிப்பில் ஆர்வம் உண்டாகி வெற்றி பெறுவார்கள்.
மிதுனம் பஞ்சம புத்திர பாக்ய யோக ஸ்தானத்தை குரு பார்ப்பதால்
பிள்ளைகள் கல்வி வகையில் செலவுகள் அதிகரிக்கும்.
அவர்களுக்கு நல்ல கல்லூரியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம்
கிடைக்கும்.
மிதுனம் உங்கள் பாக்ய ஸ்தானமாகிய 9ம் இடத்திற்கு அதிபதி சனி 6ல்
அமர்வதால் நேர்முக, போட்டித்தேர்வுகளில் அசாத்தியமான வெற்றி
கிடைக்கும்.
மாணவர்கள் சோம்பலை நீக்கி அயராது உழைத்தால்
மட்டுமே எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்கும்.
ஃபேஷன் டெக்னாலஜி, கேட்டரிங், ஆர்க்கிடெக்ட் பிரிவு மாணவர்களுக்கு
சிறப்பான முன்னேற்றம் உண்டு.
கடகம் மூன்றிலுள்ள ராகு சகோதர, சகோதரிகளுக்கு வெளிநாட்டு
கல்வி கிடைக்க உதவுவார்.
கடகம் நான்காம் வீட்டிலுள்ள செவ்வாய் அருளால் மருத்துவக் கல்வி
மாணவர்கள் சிறப்புத் தேர்ச்சி பெறுவீர்கள்.
கடகம் பன்னிரெண்டாம் இடத்தில் இருந்து ஆறாம் வீட்டை பார்ப்பதால்
கல்வி செலவுகள் வரும்.
கன்னி சனி 3-ம் வீட்டிலும், சூரியன் 6-ல் அமர்ந்திருப்பதால் போட்டித்
தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.
கன்னி ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தை குரு பார்ப்பதால் மாணவர்களுக்கு
விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும்.
கன்னி புதன் 8-ம் இடம் மாறுவதால் மாணவர்கள் ஓரளவு வளர்ச்சி
காண்பார்கள்.
துலாம் விருச்சிகம் சனி மாணவர்களுக்கு கூட்டுப்பயிற்சியால்
கல்வியில் முன்னேற்றம் உண்டு.
துலாம் புண்ணிய பஞ்சம ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பிள்ளைகளை
பள்ளி,கல்லூரியில் சேர்ப்பதன் மூலம் அலைச்சல், மனஉளைச்சல்,
செலவுகள் ஏற்படும்.
துலாம் 6-ல் கேது நிற்பதால் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.
விருச்சிகம் 1.1.2017 முதல் 14.12.2017 வரை ஏழரைச் சனி நடைபெற்றுக்
கொண்டிருப்பதால் மந்தம், மறதி வந்து நீங்கும்.
உங்களுடன் சுற்றித் திரிந்த நண்பர்கள் கூட நல்ல மதிப்பெண் பெற்று
வெற்றி பெறக்கூடும்.
எனவே, விதண்டாவாதம் பேசிக் கொண்டிருக்காமல் படிப்பில் அக்கறை
செலுத்துங்கள்.
வகுப்பறையில் முன் வரிசையில் அமருங்கள்.
கூடாப்பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்க்கப்பாருங்கள்.
தனுசு 1.1.2017 முதல் 14.12.2017 வரை ஏழரைச் சனி தொடர்வதால்
விளையாட்டுத்தனத்தை குறைத்து வகுப்பறையில் கூடுதல் கவனம்
செலுத்துங்கள்.
ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.
உயர்கல்வியில் வெற்றியுண்டு.
கணிதம், மொழிப் பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள்.
மதிப்பெண் உயரும்.
விரும்பிய கோர்ஸில் சேருவீர்கள்.
மகரம் நாலாம் வீட்டிற்கு குரு பார்வை இருப்பதால் மாணவர்கள் படிப்பில்
ஆர்வம் வந்து வெற்றி பெற ஆரம்பிப்பீர்கள்.
மீனம் புதன் 2-ம் இடம் மாறுவதாலும் குருவின் பார்வையைப்
பெறுவதாலும் மாணவர்களது மந்த நிலை விலகும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக