ஞாயிறு, 10 ஜனவரி, 2016

0158. மனோபலம்

0158. மனோபலம்

மேஷம் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் ராகு  அமர்ந்திருப்பதால் மனோபலம் கூடும்.
மிதுனம் ராகுபகவான் ராசிக்கு  தைரிய ஸ்தானமான 3ல் வந்தமர்வதால்
மனோபலம் கூடும்.
துலாம் உங்கள் தைரிய ஸ்தானாதிபதி குருவின் பூரட்டாதி
நட்சத்திரத்தில் கேதுபகவான்  செல்வதால் மனோபலம் கூடும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

0157. வரி செலுத்துக

0157. வரி செலுத்துக

மிதுனம் சூரியன் 7-ல் அமர்ந்து உங்கள் ராசியை பார்க்க இருப்பதால்
அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

0156. பேச்சைக் குறிக்கும்

0156. பேச்சைக் குறிக்கும்

மேஷம் அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் வெளிவட்டாரத்தில்
யாரையும் தாக்கியும் பேச வேண்டாம், தூக்கியும் பேச வேண்டாம்.
ரிஷபம் கண்டகச் சனி நடைபெற்றுக் கொண்டிருப்பதால்
சின்ன சின்ன விவாதங்களும் பிரச்னைகள் வந்துப் போகும்.
எதையோ இழந்ததைப் போன்ற ஒருவித கவலைகள் வந்துச் செல்லும்.
சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும்.
மிதுனம் குருபகவான் 2-ல் தொடர்வதால் இதமாக, இங்கிதமாகப் பேசும்
விதத்தைக் கற்றுக் கொள்வீர்கள்.
மிதுனம் சனிபகவான் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் நிற்கும் போது
விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.
மிதுனம் உங்களுடைய ராசிக்கு தனஸ்தானமான 2ம் வீட்டில் குரு
நிற்கும் சாதுர்யமாகவும், இங்கிதமாகவும் பேசி எல்லா வேலைகளையும்
முடித்துக் காட்டுவீர்கள்.
கடகம் குருவின் பார்வை அஷ்டம ஸ்தானத்தில் பதிவதால்
கொடுத்த வாக்கைக் காப்பாற்றி நாணயப் பாதிப்பிலிருந்து
விடுபட இயலும்.
கடகம் இரண்டாம் வீட்டில் ராகு வந்திருப்பதால் மிக மிகக் கவனமாகப்
பேச வேண்டும்.
கடுமையற்ற சொற்களால் நாசூக்காக எண்ணங்களை வெளிப்படுத்த
வேண்டியது மிகமிக அவசியம்.
கடகம் 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் அமர்ந்திருப்பதால் சாதாராணமாகப்
பேசப் போய் சண்டையில் முடியும்.
வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது.
நீங்கள் யதார்த்தமாகப் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்து
கொள்வார்கள்.
அக்கம் - பக்கம் வீட்டாரிடம் குடும்ப விஷயங்களை விவாதிக்க
வேண்டாம்.
கடகம் சூரியன் 9-ல் நுழைந்திருப்பதால் தந்தையுடன் வீண்
விவாதங்களும் வரக்கூடும்.
கடகம் இரண்டாம் வீட்டில் குரு இருப்பதால் இனிய பேச்சால் குடும்ப
சச்சரவுகளை நீக்கி பாச இணைப்பை உருவாக்குவீர்கள்.
கடகம் குரு 3ம்  வீட்டில் நிற்பதால் உங்கள் மீது சிலர் வீண் பழி
சுமத்துவார்கள்.
சிம்மம் குரு வக்ரமாகி உங்களின் 5ஆம் அதிபதி மற்றும்
அஷ்டமாதிபதியுமான குரு, ராசிக்கு 2ம் வீட்டில் அமர்வதால் குடும்ப
ஸ்தானத்தில் குரு அமர்வதால் அறிவுபூர்வமாகப் பேசி எல்லோரையும்
கவருவீர்கள்.
சிம்மம் குரு ராசிக்குள் ஜென்ம குருவாக அமர்வதால் அவசரப்பட்டு
வாக்குறுதி தந்து, நிறைவேற்ற முடியாமல் திணறுவீர்கள்.
சிம்மம் 8ல் கேதுவும் நிற்பதால் வீண் வாக்குவாதம் வந்துசெல்லும்.
யாரையும் தாக்கிப் பேச வேண்டாம்.
சிம்மம் ஜென்ம ராசியிலேயே ராகு அமர்வதால் அவ்வப்போது
முன்கோபப்படுவீர்கள்.
கன்னி 2-ல் செவ்வாய் நிற்பதால் வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை
தவிர்ப்பது நல்லது.
துலாம் செவ்வாயும், ராகுவும் 12-ல் நிற்பதால் சொன்ன சொல்லை
காப்பாற்றுவதற்காக கொஞ்சம் போராட வேண்டி வரும்.
தனுசு ஏழரைச் சனி 12ல் தொடர்வதால் நாம் நம்மை மாற்றிக் கொள்ள
வேண்டுமோ!
யதார்த்தமாக பேசுவது, பழகுவதெல்லாம் தவறுதானோ என்றெல்லாம்
கேள்வி கேட்டுக் கொள்வீர்கள்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

0156. முதுமை பருவத்தில் புதன் பலமிழந்திருந்து திசை

0156. முதுமை பருவத்தில் புதன் பலமிழந்திருந்து திசை

புதன் பலமிழந்திருந்து முதுமை பருவத்தில் நடைபெற்றால் நரம்பு தளர்ச்சி
ஞாபகமறதி, மூளையில் பாதிப்பு, உடல் பலவீனம், பொருளாதார நெருக்கடி,
உறவினர்களிடையே பகை உண்டாகும்.

புதன்தசா புதன்புக்தி
புதன் திசையில் புதன் புக்தியானது 2 வருடம் 4 மாதம் 27 நாட்கள் நடைபெறும். 

புதன் பலமிழந்திருந்தால் மனைவி பிள்ளைகளுக்கு ஆரோக்கிய பாதிப்பு, கலகம்
துக்கம், ஞாபகமறதி ஊர் விட்டு ஊர் சுற்றி திரியும் அமைப்பு, கெட்ட
பெண்களின் சகவாசம், நேரத்திற்கு சாப்பிட முடியாத நிலை நரம்பு தளர்ச்சி
போன்ற அனுகூல மற்ற பலன்கள் ஏற்படும். உறவினர்களின் ஆதரவும்
குறையும்.

புதன்திசா கேதுபுக்தி
புதன் திசையில் கேது புக்தியானது 11மாதம் 27நாட்கள் நடைபெறும். 

கேது நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் குடும்பத்தில் கலகம், அடிமை
வாழ்க்கை, அதிக பயம் வண்டி வாகனங்களால் நஷ்டம், பணவிரயம்,
பூர்வீக சொத்துகளால் பிரச்சனை பிரிவு, உத்தியோகத்தில் தேவையற்ற
இடமாற்றம், தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாக கூடிய நிலை உண்டாகும்.

புதன்திசா சுக்கிர புக்தி
புதன் திசையில் சுக்கிர புக்தியானது 2வருடம் 10மாதம் ந¬பெறும். 

சுக்கிரன் பலமிழந்திருந்தால் உடல் நிலை பாதிப்பு, மர்ம ஸ்தானங்களில் நோய்,
சர்க்கரை வியாதி, குடும்பத்தில் வறுமை, மனைவி பிள்ளைகளுக்கு கண்டம்,
எடுக்கும் முயற்சிகளில் தடை சுகவாழ்வு பாதிப்பு, ஈனப் பெண்களின் தொடர்புகளால்
அவமானம், வீண் விரயங்கள் உண்டாகும். 

புதன்திசை சூரிய புக்தி
புதன் திசையில் சூரிய புக்தியானது 10மாதம் 6நாட்கள் நடைபெறும். 

சூரியன் பலமிழந்திருந்தால் பகைவர்களால் விரோதம், தேவையற்ற வம்பு வழக்குகள்,
தனவிரயம் வண்டி வாகன இழப்பு, தந்தைக்கு தோஷம், தந்தை வழியில் அனுகூலமற்ற
நிலை, உறவினர்களிடம் விரோதம், மனைவி பிள்ளைகளிடையே கருத்து வேறுபாடு,
உஷ்ண கோளாறு, கண்களில் பாதிப்பு அரசு வழியில் தொல்லை உண்டாகும்.

புதன் திசையில் சந்திரபுக்தி
புதன் திசையில் சந்திர புக்தியானது 1 வருடம் 5 மாதங்கள் நடைபெறும். 

சந்திரன் பலமிழந்திருந்தால் பயணங்களால் தேவையற்ற அலைச்சல், ஜலத்தால்
கண்டம், மனதில் வீண் குழப்பம், நிம்மதியற்ற நிலை, உடல் நிலையில் பாதிப்பு,
மனைவி மற்றும் தாயிக்கு தோஷம், வம்பு வழக்குகள்  தோல்வி, எடுக்கும்
காரியங்களில் தடை ஏற்படும் மனநிம்மதி குறையும்.

புதன்திசையில் செவ்வாய் புக்தி
புதன் திசையில் செவ்வாய் புக்தியானது 11 மாதம் 27நாட்கள் நடைபெறும். 

செவ்வாய் பலமிழந்திருந்தால் ரத்த சம்மந்தமான பாதிப்புகள், உடலில் காயம்படும்
அமைப்பு உடன் பிறப்புகளிடையே வீண் பிரச்சனை, அரசு வழியில் தொல்லை,
காரியத்தடை, எதிர்பாராத விபத்தால் கண்டம் உண்டாகும்.

புதன் திசையில் ராகுபுக்தி
புதன் திசையில் ராகுபுக்தியானது 2&வருடம் 6&மாதம் 18&நாட்கள் நடைபெறும். 

ராகு பலமிழந்து நின்ற வீட்டதிபதியும் பலமிழந்திருந்தால் தீய  நட்புகளால்
பிரச்சனை, உணவே விஷமாக கூடிய நிலை, விஷ பூச்சிகளால் ஆபத்து,
கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு, வியாதி, மரணத்திற்கு ஒப்பான
கண்டங்கள், தற்கொலை எண்ணம், இடம் விட்டு இடம் அலையும் அவ நிலை  
பகைவர்களால் தொல்லை போன்றவை உண்டாகும்.

புதன் திசையில் குருபுக்தி
புதன் திசையில் குருபுக்தியான 2வருடம் 3மாதம் 6நாட்கள் நடைபெறும். 

குரு பலமிழந்திருந்தால் உடல் நிலை பாதிப்பு உறவினர்களிடையே பகை, பூமி
மனை வண்டி வாகன இழப்பு, பிராமணர்களின் சாபத்திற்கு ஆளாக கூடிய நிலை,
குடும்பத்தில் பிரச்சனை, சுபகாரியங்களுக்கு தடை உண்டாகும்.

புதன் திசையில் சனி புக்தி
புதன் திசையில் சனி புக்தியானது 2&வருடம் 8&மாதம் 9&நாட்கள் நடைபெறும். 

சனி பலமிழந்திருந்தால் விபத்துகளை சிந்திக்கும் நிலை, தூர பிரதேஷங்களில்
சென்று வாழும் நிலை, உறவினர்களுடன் விரோதம் கலகம் அரசு வழியில்  
அனுகூலமற்ற நிலை, திருமணதடை வீண் பழி, வம்பு வழக்குகளை  
சந்திக்கும் நிலை எடுக்கும் காரியங்களில் தோல்வி போன்ற சாதகமற்ற
நிலை உண்டாகும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

0155. சனி செவ்வாய் இணைந்து சனிதிசை

0155. சனி செவ்வாய் இணைந்து சனிதிசை

சனி திசையில் செவ்வாய் புக்தி
சனி திசையில் செவ்வாய் புக்தி 1வருடம் 1மாதம் 9மாதங்கள் நடைபெறும். 

சனி செவ்வாய் இணைந்தே, பார்த்துக் கொண்டோ இருந்தால் எதிர்பாராத
விபத்துக்களால் ரத்த காயம் படுதல், அறுவை சிகிச்சை செய்யக் கூடிய
நிலை, பூமி மனை இழப்பு, பங்காளிகளிடையே வீண் விரோதம்,
பகைவர்களால் ஆபத்து ரத்த சம்மந்தப்பட்ட பாதிப்புகள், குடும்பத்தில்
பிரச்சனை அரசு வழியில் அனுகூலமற்ற பலன் தொழில் வியாபாரத்தில்
நஷ்டம், வண்டி வாகனங்களால் வீண் விரயம் ஏற்படும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.








0154. குழந்தை பருவத்தில் சனி பலமிழந்திருந்து திசை

0154. குழந்தை பருவத்தில் சனி பலமிழந்திருந்து திசை

பூசம், அனுஷம், உத்திரட்டாதி போன்ற நட்சத்திரங்கள் சனிக்குரியதாகும்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனிதிசை முதல் திசையாக வரும்.
சனி பலமிழந்து குழந்தை பருவத்தில் திசை நடைபெற்றால் அற்ப ஆயுள்,
அடிக்கடி நோய்கள் ஏற்பட கூடிய அமைப்பு மந்த நிலை கொடுக்கும்.

சனி பலமின்றி அமைந்திருந்தால் தனித்து சொத்துகள் வாங்குவதோ,
கடன்கள் வாங்குவதோ கூடாது. பேச்சில் நிதானமுடன் செயல் படுவது
நல்லது. 

சனி திசை சனிபுக்தி
சனிதிசை சனி புக்தியானது 3 வருடங்கள் 3 நாட்கள் நடைபெறும். 

சனி பலமிழந்திருந்தால் தொழில் வியாபாரத்தில் நஷ்டம், வேலையாட்களால்
நிம்மதி குறைவு, மறைமுக எதிர்ப்புகளும் பகைவர்களும் அதிகரிக்க கூடிய
நிலை, தேவையற்ற மனசஞ்சலம், பணநஷ்டம் மனைவி புத்திரர்களால்
கடன் படும் நிலை, சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை,
எலும்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகள், வீண்பழிகளை சுமக்கும் நிலை, சிறை
செல்லும் அமைப்பு போன்றவை ஏற்படும்.

சனிதிசை புதன் புக்தி
சனிதிசையில் புதன் புக்தியானது 2வருடம் 8 மாதம் 9 நாட்கள் நடைபெறும்.

புதன் பலமிழந்திருந்தால் உறவினர்களிடம் பகைமை, மனைவி பிள்ளை
களிடையே கருத்து வேறுபாடு கலகம், பகைவரால் பயம், ஞாகசக்தி
குறைவு, தலைவலி, நரம்பு தளர்ச்சி, இடம் விட்டு இடம் மாறும் நிலை,
கல்வியில் ஈடுபாடு குறைவு, தாய் வழி உறவுகளிடையே பிரச்சனை ஏற்படும்.

சனி திசை கேதுபுக்தி
சனி திசை கேது புக்தியானது 1 வருடம் 1 மாதம் 9 நாட்கள் நடைபெறும். 

கேது நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் சொந்த பந்தங்களுடன் விரோதம்
பெண்களால் பிரச்சனை, கலகம், பிரயாணங்களில் எதிர்பாராத விபத்து,
இல்வாழ்வில் ஈடுபாடற்ற நிலை, பணவிரயம், உடல் நிலையில் பாதிப்பு,
இடம் விட்டு இடம் சென்று வாழ வேண்டிய நிலை, மனநிலை பாதிப்பு,
உத்தியோகத்தில் எதர்பாராத மாற்றம் போன்றவை உண்டாகும்.

சனிதிசை சுக்கிர புக்தி
சனிதிசையில் சுக்கிரபுக்தி 3வருடம் 2மாதம் நடைபெறும். 

சுக்கிரன் பலமிழந்திருந்தால் பல பெண்களுடன் தொடர்பு கொள்ளும்
அவல நிலை, அவமானம், இடமாற்றம், உற்றார் உறவினர்களிடையே
வீண் பழி வறுமை, பயம், குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, கடன்
பிரச்சனைகள், சர்க்கரை நோய், சிறு நீரக கோளாறு வண்டி வாகனம்,
வீடு மனை போன்றவற்றை இழக்கும் அவலநிலை உண்டாகும்.

சனிதிசை சூரிய புக்தி
சனிதிசையில் சூரிய புக்தி 11 மாதம் 12 நாட்கள் நடைபெறும். 

சூரியன் பலமிழந்திருந்தால் தந்தைக்கு தோஷம், தந்தை வழி உறவு
களிடையே பகை குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, கண்களில் பாதிப்பு,
இருதய கோளாறு, அரசு வழியில் பிரச்சனைகள், பணவிரயம் தொழில்
வியாபாரத்தில் லாபமற்ற நிலை ஏற்படும்.

சனிதிசையில் சந்திர புக்தி
சனி திசையில் சந்திர புக்தியானது 1 வருடம் 7 மாதங்கள் நடைபெறும். 

சந்திரன் பலமிழந்திருந்தால் தேவையற்ற மனக்குழப்பங்கள், மனநிலை பாதிப்பு,
அரசு வழியில் பிரச்சனைகள் ஜலத்தால் கண்டம், பயணங்களால் அனுகூலமற்ற
நிலை, குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, நாடு விட்டு நாடு சென்று அலையும்
அவல நிலை, வயிறு மற்றும் சிறு நீரக பிரச்சனைகள் ஏற்படும்.

சனிதிசையில் ராகு புக்தி
சனி திசையில் ராகு புக்தியானது 2வருடம் 10மாதம் 6நாட்கள் நடைபெறும்.

ராகு நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் மன கவலை, எதிர்பாராத
விபத்துக்களால் கண்டம், வயிறு கோளாறு, விஷத்தால் கண்டம், உண்ணும்
உணவே விஷமாகும் நிலை, விஷ பூச்சிகளால் பாதிப்பு, ஜீரம், தோல் நோய்,
குடும்பத்தில் பிரச்சனை மேலிருந்து தவறி கீழே விழும் நிலை, தவறான பெண்
தொடர்பு, இடம் விட்டு இடம் சென்று திரியும் அவலநிலை உண்டாகும்.

சனிதிசையில் குரு புக்தி
சனிதிசையில் குருபுக்தி 2வருடம் 6மாதம் 12நாட்கள் நடைபெறும். 

குரு பலமிழந்திருந்தால் தன தான்யம் நலிவடையும், பெரியோர்களிடம் வீண்
சண்டை சச்சரவு பிராமணர்களின் சாபம், பிள்ளைகளால் மனசஞ்சலம்,
கருசிதைவு, அரசு வழியில் அவமானங்கள் கொடுக்கல் வாங்களில் பிரச்சனைகள்
ஏற்படும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.