ஞாயிறு, 10 ஜனவரி, 2016

0156. முதுமை பருவத்தில் புதன் பலமிழந்திருந்து திசை

0156. முதுமை பருவத்தில் புதன் பலமிழந்திருந்து திசை

புதன் பலமிழந்திருந்து முதுமை பருவத்தில் நடைபெற்றால் நரம்பு தளர்ச்சி
ஞாபகமறதி, மூளையில் பாதிப்பு, உடல் பலவீனம், பொருளாதார நெருக்கடி,
உறவினர்களிடையே பகை உண்டாகும்.

புதன்தசா புதன்புக்தி
புதன் திசையில் புதன் புக்தியானது 2 வருடம் 4 மாதம் 27 நாட்கள் நடைபெறும். 

புதன் பலமிழந்திருந்தால் மனைவி பிள்ளைகளுக்கு ஆரோக்கிய பாதிப்பு, கலகம்
துக்கம், ஞாபகமறதி ஊர் விட்டு ஊர் சுற்றி திரியும் அமைப்பு, கெட்ட
பெண்களின் சகவாசம், நேரத்திற்கு சாப்பிட முடியாத நிலை நரம்பு தளர்ச்சி
போன்ற அனுகூல மற்ற பலன்கள் ஏற்படும். உறவினர்களின் ஆதரவும்
குறையும்.

புதன்திசா கேதுபுக்தி
புதன் திசையில் கேது புக்தியானது 11மாதம் 27நாட்கள் நடைபெறும். 

கேது நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் குடும்பத்தில் கலகம், அடிமை
வாழ்க்கை, அதிக பயம் வண்டி வாகனங்களால் நஷ்டம், பணவிரயம்,
பூர்வீக சொத்துகளால் பிரச்சனை பிரிவு, உத்தியோகத்தில் தேவையற்ற
இடமாற்றம், தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாக கூடிய நிலை உண்டாகும்.

புதன்திசா சுக்கிர புக்தி
புதன் திசையில் சுக்கிர புக்தியானது 2வருடம் 10மாதம் ந¬பெறும். 

சுக்கிரன் பலமிழந்திருந்தால் உடல் நிலை பாதிப்பு, மர்ம ஸ்தானங்களில் நோய்,
சர்க்கரை வியாதி, குடும்பத்தில் வறுமை, மனைவி பிள்ளைகளுக்கு கண்டம்,
எடுக்கும் முயற்சிகளில் தடை சுகவாழ்வு பாதிப்பு, ஈனப் பெண்களின் தொடர்புகளால்
அவமானம், வீண் விரயங்கள் உண்டாகும். 

புதன்திசை சூரிய புக்தி
புதன் திசையில் சூரிய புக்தியானது 10மாதம் 6நாட்கள் நடைபெறும். 

சூரியன் பலமிழந்திருந்தால் பகைவர்களால் விரோதம், தேவையற்ற வம்பு வழக்குகள்,
தனவிரயம் வண்டி வாகன இழப்பு, தந்தைக்கு தோஷம், தந்தை வழியில் அனுகூலமற்ற
நிலை, உறவினர்களிடம் விரோதம், மனைவி பிள்ளைகளிடையே கருத்து வேறுபாடு,
உஷ்ண கோளாறு, கண்களில் பாதிப்பு அரசு வழியில் தொல்லை உண்டாகும்.

புதன் திசையில் சந்திரபுக்தி
புதன் திசையில் சந்திர புக்தியானது 1 வருடம் 5 மாதங்கள் நடைபெறும். 

சந்திரன் பலமிழந்திருந்தால் பயணங்களால் தேவையற்ற அலைச்சல், ஜலத்தால்
கண்டம், மனதில் வீண் குழப்பம், நிம்மதியற்ற நிலை, உடல் நிலையில் பாதிப்பு,
மனைவி மற்றும் தாயிக்கு தோஷம், வம்பு வழக்குகள்  தோல்வி, எடுக்கும்
காரியங்களில் தடை ஏற்படும் மனநிம்மதி குறையும்.

புதன்திசையில் செவ்வாய் புக்தி
புதன் திசையில் செவ்வாய் புக்தியானது 11 மாதம் 27நாட்கள் நடைபெறும். 

செவ்வாய் பலமிழந்திருந்தால் ரத்த சம்மந்தமான பாதிப்புகள், உடலில் காயம்படும்
அமைப்பு உடன் பிறப்புகளிடையே வீண் பிரச்சனை, அரசு வழியில் தொல்லை,
காரியத்தடை, எதிர்பாராத விபத்தால் கண்டம் உண்டாகும்.

புதன் திசையில் ராகுபுக்தி
புதன் திசையில் ராகுபுக்தியானது 2&வருடம் 6&மாதம் 18&நாட்கள் நடைபெறும். 

ராகு பலமிழந்து நின்ற வீட்டதிபதியும் பலமிழந்திருந்தால் தீய  நட்புகளால்
பிரச்சனை, உணவே விஷமாக கூடிய நிலை, விஷ பூச்சிகளால் ஆபத்து,
கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு, வியாதி, மரணத்திற்கு ஒப்பான
கண்டங்கள், தற்கொலை எண்ணம், இடம் விட்டு இடம் அலையும் அவ நிலை  
பகைவர்களால் தொல்லை போன்றவை உண்டாகும்.

புதன் திசையில் குருபுக்தி
புதன் திசையில் குருபுக்தியான 2வருடம் 3மாதம் 6நாட்கள் நடைபெறும். 

குரு பலமிழந்திருந்தால் உடல் நிலை பாதிப்பு உறவினர்களிடையே பகை, பூமி
மனை வண்டி வாகன இழப்பு, பிராமணர்களின் சாபத்திற்கு ஆளாக கூடிய நிலை,
குடும்பத்தில் பிரச்சனை, சுபகாரியங்களுக்கு தடை உண்டாகும்.

புதன் திசையில் சனி புக்தி
புதன் திசையில் சனி புக்தியானது 2&வருடம் 8&மாதம் 9&நாட்கள் நடைபெறும். 

சனி பலமிழந்திருந்தால் விபத்துகளை சிந்திக்கும் நிலை, தூர பிரதேஷங்களில்
சென்று வாழும் நிலை, உறவினர்களுடன் விரோதம் கலகம் அரசு வழியில்  
அனுகூலமற்ற நிலை, திருமணதடை வீண் பழி, வம்பு வழக்குகளை  
சந்திக்கும் நிலை எடுக்கும் காரியங்களில் தோல்வி போன்ற சாதகமற்ற
நிலை உண்டாகும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக