0156. பேச்சைக் குறிக்கும்
மேஷம் அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் வெளிவட்டாரத்தில்
யாரையும் தாக்கியும் பேச வேண்டாம், தூக்கியும் பேச வேண்டாம்.
ரிஷபம் கண்டகச் சனி நடைபெற்றுக் கொண்டிருப்பதால்
சின்ன சின்ன விவாதங்களும் பிரச்னைகள் வந்துப் போகும்.
எதையோ இழந்ததைப் போன்ற ஒருவித கவலைகள் வந்துச் செல்லும்.
சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும்.
மிதுனம் குருபகவான் 2-ல் தொடர்வதால் இதமாக, இங்கிதமாகப் பேசும்
விதத்தைக் கற்றுக் கொள்வீர்கள்.
மிதுனம் சனிபகவான் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் நிற்கும் போது
விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.
மிதுனம் உங்களுடைய ராசிக்கு தனஸ்தானமான 2ம் வீட்டில் குரு
நிற்கும் சாதுர்யமாகவும், இங்கிதமாகவும் பேசி எல்லா வேலைகளையும்
முடித்துக் காட்டுவீர்கள்.
கடகம் குருவின் பார்வை அஷ்டம ஸ்தானத்தில் பதிவதால்
கொடுத்த வாக்கைக் காப்பாற்றி நாணயப் பாதிப்பிலிருந்து
விடுபட இயலும்.
கடகம் இரண்டாம் வீட்டில் ராகு வந்திருப்பதால் மிக மிகக் கவனமாகப்
பேச வேண்டும்.
கடுமையற்ற சொற்களால் நாசூக்காக எண்ணங்களை வெளிப்படுத்த
வேண்டியது மிகமிக அவசியம்.
கடகம் 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் அமர்ந்திருப்பதால் சாதாராணமாகப்
பேசப் போய் சண்டையில் முடியும்.
வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது.
நீங்கள் யதார்த்தமாகப் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்து
கொள்வார்கள்.
அக்கம் - பக்கம் வீட்டாரிடம் குடும்ப விஷயங்களை விவாதிக்க
வேண்டாம்.
கடகம் சூரியன் 9-ல் நுழைந்திருப்பதால் தந்தையுடன் வீண்
விவாதங்களும் வரக்கூடும்.
கடகம் இரண்டாம் வீட்டில் குரு இருப்பதால் இனிய பேச்சால் குடும்ப
சச்சரவுகளை நீக்கி பாச இணைப்பை உருவாக்குவீர்கள்.
கடகம் குரு 3ம் வீட்டில் நிற்பதால் உங்கள் மீது சிலர் வீண் பழி
சுமத்துவார்கள்.
சிம்மம் குரு வக்ரமாகி உங்களின் 5ஆம் அதிபதி மற்றும்
அஷ்டமாதிபதியுமான குரு, ராசிக்கு 2ம் வீட்டில் அமர்வதால் குடும்ப
ஸ்தானத்தில் குரு அமர்வதால் அறிவுபூர்வமாகப் பேசி எல்லோரையும்
கவருவீர்கள்.
சிம்மம் குரு ராசிக்குள் ஜென்ம குருவாக அமர்வதால் அவசரப்பட்டு
வாக்குறுதி தந்து, நிறைவேற்ற முடியாமல் திணறுவீர்கள்.
சிம்மம் 8ல் கேதுவும் நிற்பதால் வீண் வாக்குவாதம் வந்துசெல்லும்.
யாரையும் தாக்கிப் பேச வேண்டாம்.
சிம்மம் ஜென்ம ராசியிலேயே ராகு அமர்வதால் அவ்வப்போது
முன்கோபப்படுவீர்கள்.
கன்னி 2-ல் செவ்வாய் நிற்பதால் வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை
தவிர்ப்பது நல்லது.
துலாம் செவ்வாயும், ராகுவும் 12-ல் நிற்பதால் சொன்ன சொல்லை
காப்பாற்றுவதற்காக கொஞ்சம் போராட வேண்டி வரும்.
தனுசு ஏழரைச் சனி 12ல் தொடர்வதால் நாம் நம்மை மாற்றிக் கொள்ள
வேண்டுமோ!
யதார்த்தமாக பேசுவது, பழகுவதெல்லாம் தவறுதானோ என்றெல்லாம்
கேள்வி கேட்டுக் கொள்வீர்கள்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக