0237. ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2017 பகுதி = II
கடகம்
1.1.2017 முதல் 16.1.2017 வரை உங்களின் யோகாதிபதி செவ்வாய் 8ல்
மறைந்திருப்பதால் ஆரோக்ய குறைவு, சிறுசிறு விபத்துகள்,
சொத்துப் பிரச்னைகள், பொருள் இழப்புகள், பணப் பற்றாக்குறை,
உடன்பிறந்தவர்களுடன் மனக் கசப்புகள் வந்து நீங்கும்.
11.4.2017 முதல் 26.5.2017 வரை உங்களின் யோகாதிபதியான செவ்வாயை சனி
பார்க்க இருப்பதால் பெற்றோருக்கு மருத்துவச் செலவுகள், மனஇறுக்கம்,
ஏமாற்றங்கள், மறைமுக நெருக்கடிகள் வந்துபோகும்.
1.1.2017 முதல் 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 2ல் ராகுவும், 8ம் வீட்டில்
கேதுவும் நிற்பதால் படபடப்பு, எதிலும் பிடிப்பற்ற போக்கு, பிறர்மீது
நம்பிக்கையின்மை, வீண் விரயம் வந்து செல்லும்.
நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப்போய் பொல்லாப்பாக முடிய வாய்ப்பிருக்கிறது.
வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.
பணப்பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும்.
கண்ணில் சின்னதாக தூசு விழுந்தாலும் அலட்சியமாக இருந்து விடாதீர்கள்.
மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.
மற்றவர்களை தாக்கிப் பேச வேண்டாம்.
உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்பதைப்
புரிந்து கொள்வதில் தடுமாற்றம் வரும்.
27.7.2017 முதல் 31.12.2017 வரை உங்கள் ராசிக்குள் ராகுவும், 7ல் கேதுவும்
தொடர்வதால் எதிலும் ஒருவித பயம், ஒற்றை தலைவலி, செரிமானக் கோளாறு,
சிறுநீர் பாதையில் அழற்சி, வலிப்பு வந்து செல்லும்.
1.1.2017 முதல் 1.9.2017 வரை உங்களின் சஷ்டம பாக்யாதி பதியான குரு உங்கள்
ராசிக்கு 3ம் வீட்டில் நிற்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும்.
ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை பார்க்க வேண்டிய சூழ்நிலையும்
உருவாகும்.
அவ்வப்போது பலவீனமாக உணருவீர்கள்.
சிலர் தங்களது காரியம் ஆகும்வரை உங்களை பயன்படுத்திக் கொண்டு வேலை
முடிந்தபிறகு கறிவேப்பிலையாய் தூக்கி எறிவதை நினைத்து வருத்தப்படுவீர்கள்.
தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும்.
கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது.
இளைய சகோதர வகையில் பிணக்குகள் வரும்.
விமர்சனங்களைக் கண்டு அஞ்ச வேண்டாம்.
2.9.2017 முதல் 31.12.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 4ம் வீட்டிலேயே
அமர்வதால் இழுபறியாக இருந்த காரியங்களெல்லாம் முடிவடையும்.
என்றாலும் தாயார் கோபத்தில் ஏதேனும் பேசினாலும் அதை பெரிதுபடுத்திக்
கொண்டிருக்காதீர்கள்.
1.1.2017 முதல் 14.12.2017 வரை சனி 5ல் நிற்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க
முடியாமல் குழம்புவீர்கள்.
மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம்.
வரன் வீட்டாரைப்பற்றி நன்கு விசாரித்து முடிக்கப் பாருங்கள்.
மகன் காரண காரியமேயின்றி கோபப்படுவார்.
பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் பொறுப்பாக நடந்து கொண்டால் நலமாக இருக்குமே
என்று ஆதங்கப்படுவீர்கள்.
வீண் சந்தேகத்தை தவிர்க்கப் பாருங்கள்.
மனைவிக்கு கை, கால் மரத்துப் போதல், கர்ப்பப்பையில் கட்டி வந்துபோகும்.
கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
பூர்வீகச்சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைக்காக கோர்ட்டு, கேஸ் என்றெல்லாம்
நேரத்தையும், பணத்தையும் செலவு செய்து கொண்டிருக்காதீர்கள்.
உறவினர்கள் மத்தியில் உங்களைப்பற்றி வதந்திகள் அதிகமாகும்.
பால்ய நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும்.
சிலர் உத்யோகம், உயர் கல்வியின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டிய
சூழ்நிலை உருவாகும்.
15.12.2017 முதல் 31.12.2017 வரை 6ம் வீட்டில் சனிபகவான் அமர்வதால் எதிர்ப்புகள்
அடங்கும்.
பிள்ளைகளின் பொறுப்பற்ற போக்கு மாறும்.
அதிக வட்டிக்கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும்.
மனைவியின் ஆரோக்யம் சீராகும்.
அவருடனான மோதல்கள் விலகும்.
சிம்மம்
1.1.2017 முதல் 26.7.2017 வரை ராசிக்கு 7ல் கேதுவும், உங்கள் ராசிக்குள்ளேயே
ராகுவும் நிற்பதால் மூச்சுத் திணறல், ஹார்மோன் பிரச்னை, அல்சர், ரத்த
சோகை வந்து செல்லும்.
27.7.2017 முதல் 31.12.2017 வரை உங்கள் ராசியை விட்டு ராகு விலகி 12ம்
வீட்டிலும், கேது 6ம் வீட்டிலும் தொடர்வதால் மனப் போராட்டங்கள் ஓயும்.
தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த கத்தியாக நெருக்கடிகள் இருந்ததே,
அவற்றிலிருந்து விடுபடுவீர்கள்.
17.1.2017 முதல் 26.2.2017 வரை உங்களின் யோகாதிபதியான செவ்வாய் பகவான்
8ல் மறைந்து காணப்படுவதாலும் மற்றும் 11.4.2017 முதல் 26.5.2017 வரை உள்ள
காலக்கட்டங்களில் செவ்வாயை சனி பார்க்கயிருப்பதாலும் சகோதர வகையில்
சச்சரவு, ரத்த அழுத்தம், மனஉளைச்சல், வீண் அலைச்சல், காரியத் தடங்கல்,
வேனல் கட்டி வந்து செல்லும்.
1.1.2017 முதல் 1.9.2017 வரை உங்களின் பூர்வ புண்யாதிபதியும்
அஷ்டமாதிபதியுமான குரு உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால்
எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.
உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும்.
2.9.2017 முதல் 31.12.2017 வரை குரு 3ம் வீட்டிலேயே அமர்வதால் எந்த ஒரு
காரியத்தையும் முதல் கட்டத்திலேயே முடிக்க முடியாமல் மூன்றாவது
முயற்சியில் போராடி முடிக்க வேண்டி வரும்.
இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும்.
முன்பின் தெரியாதவர்களிடம் உங்களுடைய குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துக்
கொள்ள வேண்டாம்.
பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள்
சற்று தாமதமாகி முடியும்.
அவர்களிடம் உங்களுடைய பழங்கதைகளையெல்லாம் சொல்லிக்
கொண்டிருக்காதீர்கள்.
கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்த பொருட்களை சுமக்க வேண்டாம்.
வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்க வேண்டாம்.
1.1.2017 முதல் 14.12.2017 வரை சனி 4ல் நின்று அர்த்தாஷ்டமத்துச் சனியாக
வருவதால் மூட்டு வலி, முதுகு வலியால் தாயார் சிரமப்படுவார்.
தாயாரின் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள்.
அன்பு, பாசம் மிகுதியால் தாயார் ஏதேனும் உரிமையுடன் பேசினால்
அதற்கெல்லாம் வருத்தப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள்.
வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் இருக்கும்.
வீட்டில் குடிநீர் குழாய், கழிவு நீர்குழாய் பழுது வந்துபோகும்.
வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு வீட்டு உரிமையாளர்களால்
தொந்தரவுகள் அதிகரிக்கும்.
சிலர் வீடு, இடம் மாறுவீர்கள்.
பணப் பற்றாக்குறையும் வந்து செல்லும்.
தாய்வழி உறவினர்களால் அலைச்சல் இருந்து கொண்டேயிருக்கும்.
சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள்.
உங்களின் அடிப்படை நடத்தை கோலங்கள் மாறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
கூடாப்பழக்க வழக்கங்கள் தொற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.
யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம்.
உங்களைப் பற்றிய விமர்சனங்களும், வீண் பழிகளும் அதிகரிக்கும்.
அரசாங்கத்திற்கு கட்ட வேண்டிய சொத்து வரி, வருமான வரி, விற்பனை
வரிகளையெல்லாம் கால தாமதமின்றி செலுத்தப்பாருங்கள்.
சிறுசிறு அபராதம் செலுத்த வேண்டி வரும்.
15.12.2017 முதல் 31.12.2017 வரை சனி 5ம் இடத்தில் நுழைவதால் குடும்ப
வருமானத்தை உயர்த்துவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி வரும்.
வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள்.
மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும்.
மகனின் உயர்கல்விக்காக சிலரின் சிபாரிசை நாட வேண்டியது வரும்.
பூர்வீகச் சொத்தில் புதிய முதலீடுகள் வேண்டாம்.
கன்னி
1.1.2017 முதல் 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் கேது பகவான்
நிற்பதால் எதிர்ப்புகள் அடங்கும்.
போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.
1.1.2017 முதல் 26.7.2017 வரை ராசிக்கு 12ம் வீட்டில் ராகு நிற்பதால்
மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்திடாதீர்கள்.
கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது
மனம் கலங்குவீர்கள்.
பழைய கடனை நினைத்து அவ்வப்போது அச்சம் வரும்.
சுபச் செலவுகள் அதிகமாகும்.
கட்டிட வேலைகளைத் தொடங்குவீர்கள்.
வங்கி லோன் கிடைக்கும்.
27.7.2017 முதல் 31.12.2017 வரை கேது 5ம் வீட்டில் அமர்வதால் முடிவுகள்
எடுப்பதில் தயக்கம், தடுமாற்றம் வந்துபோகும்.
பிள்ளைகளுக்கு அதிக அறிவுரை சொல்லி நெருக்கடிக்குள்ளாக்காதீர்கள்.
ஒரே வாரத்தில், ஒரே மாதத்தில் திருத்திவிட முடியாது.
கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அவர்களை கொண்டு வர வேண்டும்.
அதைப் புரிந்துகொண்டு செயல்படப் பாருங்கள்.
கர்ப்பிணிப் பெண்கள் தூரத்துப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
பூர்வீகச் சொத்துப் பிரச்னை வெடிக்கும்.
27.7.2017 முதல் 31.12.2017 வரை ராகு 11ம் வீட்டில் நீடிப்பதால் பெரிய திட்டங்கள்
நிறைவேறும்.
26.2.2017 முதல் 11.4.2017 வரை செவ்வாய் 8ல் அமர்வதாலும் மற்றும் 11.4.2017
முதல் 26.5.2017 வரையுள்ள காலகட்டத்தில் செவ்வாயை சனி பார்க்கயிருப்பதாலும்
சிறுசிறு நெருப்புக் காயங்கள், உடன்பிறந்தவர்களுடன் மோதல்கள், சொத்து
வாங்குவது, விற்பதில் சிக்கல்கள், எதிர்காலம் பற்றிய பயம், பணத்தட்டுப்பாடு
வந்துபோகும்.
1.1.2017 முதல் 8.1.2017 வரை ராசிநாதன் புதனும், சனியுடன் சேர்ந்து வக்ரமாகி
நிற்பதால் காய்ச்சல், இருமல், கழுத்து வலி, உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள்
வந்துபோகும்.
1.1.2017 முதல் 1.9.2017 வரை உங்களின் சேவகாதிபதியும் சப்தமாதிபதியுமான குரு
உங்கள் ராசியிலேயே அமர்ந்து ஜென்ம குருவாக தொடர்வதால் ஆரோக்யத்தில்
அக்கறை காட்டுங்கள். கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ
பிரச்னையை தவிர்க்கப் பாருங்கள்.
2.9.2017 முதல் 31.12.2017 வரை குரு 2ம் வீட்டில் சென்று அமர்வதால்
எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும்.
திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளெல்லாம்
அடுத்தடுத்து நடந்தேறும்.
சிலர் புது வீடு கட்டி குடி புகுவீர்கள்.
குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பம் விலகும். பிரிந்திருந்தவர்கள்
ஒன்று சேருவீர்கள்.
கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மனஸ்தாபம் நீங்கும்.
1.1.2017 முதல் 14.12.2017 வரை சனி 3ம் வீட்டிலேயே நிற்பதால் திடீர் அதிர்ஷ்ட
யோகம் உண்டாகும்.
பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள்.
இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டு.
வேற்றுமதத்தவர்கள், மொழியினரால் ஆதாயமடைவீர்கள்.
சிலர் அண்டை மாநிலம், வெளிநாடு சென்று வருவீர்கள்.
சபைகளில் முதல் மரியாதை கிடைக்கும்.
அரசியலில் செல்வாக்கு கூடும்.
வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.
கடந்தகால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள்.
15.12.2017 முதல் 31.12.2017 வரை 4ல் சனி அமர்ந்து அர்த்தாஷ்டமச் சனியாக
வருவதால் தாயாரின் உடல் நலம் பாதிக்கும்.
அவருடன் பிணக்குகள் வந்து நீங்கும்.
அவ்வப்போது உணர்ச்சி வசப்படுவீர்கள்.
பழைய பிரச்னைகள் போல வேறு ஏதேனும் இப்போது வந்துவிடுமோ என்று
அஞ்சுவீர்கள்.
அரசாங்க அனுமதியில்லாத இடத்தில் வீடு கட்டவோ, விதிகளை மீறி
அடுக்குமாடிகள் கட்டுவதோ வேண்டாம்.
சின்னச் சின்ன அபராதம் செலுத்த வேண்டியது வரும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017
0236. ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2017 பகுதி = I
0236. ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2017 பகுதி = I
மேஷம்
ராசிநாதன் செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து நிற்பதாலும், 17.1.2017 முதல் 26.2.2017
வரை ராசிக்கு பன்னிரெண்டில் மறைவதாலும் முன்கோபம், ரத்த சோகை,
சகோதரர்களுடன் மனக் கசப்புகள், சிறுசிறு நெருப்புக் காயங்களெல்லாம்
வந்துபோகும்.
11.4.2017 முதல் 26.5.2017 வரையுள்ள காலகட்டத்தில் உங்கள் ராசிநாதன்
செவ்வாயை சனி பார்ப்பதால் சிறுசிறு விபத்துகள், பணம் கொடுக்கல்,
வாங்கல் விஷயத்தில் ஏமாற்றங்கள் வந்துபோகும்.
1.1.2017 முதல் 1.9.2017 வரை உங்களின் பாக்யாதிபதியும் விரயாதிபதியுமான குரு
உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் மறைந்து சகட குருவாக அமர்ந்திருப்பதால் பணப்
பற்றாக்குறையை போக்க கூடுதலாக உழைப்பீர்கள்.
நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும்.
பிள்ளைகளால் அலைச்சலும், செலவுகளும் வந்து நீங்கும்.
2.9.2017 முதல் 31.12.2017 வரை குருபகவான் 7ம் வீட்டில் அமர்ந்து உங்களைப்
பார்க்கயிருப்பதால் உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த
நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்.
தள்ளிப் போன திருமணம் கூடி வரும்.
அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.
குடும்பத்தில், பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள்.
கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும்.
மருத்துவ சிகிச்சைக்குப் பின்னும் குழந்தை பாக்யம் கிடைக்கவில்லையே என
வருந்தினீர்களே! இந்த வருடத்தில் வாரிசு உருவாகும்.
ஆரோக்யம் சீராகும்.
அடகிலிருந்த நகை, சொத்தையெல்லாம் மீட்க வழி, வகை பிறக்கும்.
1.1.2017 முதல் 14.12.2017 வரை சனி 8ல் நின்று அஷ்டமத்துச் சனியாக வருவதால்
அவ்வப்போது கோபப்படுவீர்கள்.
ஏமாந்துபோன தொகையை நினைத்து வருத்தப்படுவீர்கள்.
ஏமாற்றிய நபர்களை நினைத்தும் ஆதங்கப்படுவீர்கள்.
மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
குடும்பத்துடன் வெளியூருக்கு செல்லும் முன் சமையலறையில் கேஸ் இணைப்பை
சரி பார்த்து விட்டுச் செல்லுங்கள்.
15.12.2017 முதல் 31.12.2017 வரை சனி 9ம் வீட்டில் அமர்வதால் எதிலும் ஒரு
தெளிவு பிறக்கும்.
மற்றவர்களின் மனநிலையைப் புரிந்து பேசும் பக்குவம் உண்டாகும்.
நெருடலான, தர்ம சங்கடமான சூழ்நிலைகளெல்லாம் நீங்கும்.
ரிஷபம்
1.1.2017 முதல் 16.1.2017 வரை செவ்வாயும், 1.1.2017 முதல் 27.1.2017 வரை
ராசிநாதன் சுக்கிரனும் கேதுவின் பிடியில் சிக்கியிருப்பதால் தொண்டைப்
புகைச்சல், சளித் தொந்தரவு, அசதி, சோர்வு, கை, கால் வலி வந்துபோகும்.
11.4.2017 முதல் 26.5.2017 வரை உங்களின் சப்தமாதிபதியான செவ்வாயை சனி
நேருக்குநேர் பார்க்கயிருப்பதால் இக்காலகட்டத்தில் மனைவிக்கு தலைச்சுற்றல்,
மூட்டுவலி, முன்கோபம், வேலைச்சுமை வந்துபோகும்.
அவருடன் வீண் விவாதங்களை தவிர்க்கப் பாருங்கள்.
சொத்து வாங்குவது, விற்பதில் அலட்சியம் வேண்டாம்.
1.1.2017 முதல் 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 10ல் கேதுவும், 4ம் வீட்டில் ராகுவும்
நீடிப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள்.
உத்யோகத்தில் இடமாற்றங்கள், சம்பள பிரச்னை, மறைமுக நெருக்கடிகள்
வந்து நீங்கும்.
27.7.2017 முதல் 31.12.2017 வரை ராசிக்கு 9ம் வீட்டில் கேது தொடர்வதால்
பிதுர்வழி சொத்துப் பிரச்னை தலைதூக்கும்.
தந்தையாருடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும்.
அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள், மூட்டுவலி வந்து செல்லும்.
எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும்.
1.1.2017 முதல் 1.9.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் நிற்பதால்
கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள்.
குடும்பத்தில் நல்லது நடக்கும்.
குழந்தை பாக்யம் கிடைக்கும்.
மகளுக்கு நல்ல வரன் அமையும்.
மகனின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள்
பலிதமாகும்.
குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை
செலுத்துவீர்கள்.
பூர்வீகச் சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள்.
பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்து கொள்வார்கள்.
உறவினர்கள் தேடி வருவார்கள்.
நட்பு வட்டம் விரிவடையும்.
2.9.2017 முதல் 31.12.2017 வரை குரு 6ம் வீட்டில் மறைந்து சகட குருவாக
வருவதால் சின்னச் சின்ன காரியங்களைக்கூட இரண்டு, மூன்று முறை
முயன்று முடிக்க வேண்டியது வரும்.
எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து விலகும்.
வி.ஐ.பிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
சட்டவிதிகளை மீறி யாருக்கும் உதவ வேண்டாம்.
சிலர் தங்களின் ஆதாயத்திற்காக உங்களைப் பற்றிய தவறான வதந்திகளைப்
பரப்புவார்கள்.
கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்கள், தோல்விகளை
நினைத்து அவ்வப்போது தூக்கம் குறையும்.
உங்களை நீங்களே குறைத்துக் கொள்ளாதீர்கள்.
15.12.2017 முதல் 31.12.2017 வரை 8ல் அமர்ந்து அஷ்டமத்துச் சனியாகவும்
வருவதால் கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகத்தை தவிர்க்கப் பாருங்கள்.
அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம்.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைதல், நகச்சுத்தி, முடி உதிர்தல், அலர்ஜி
வந்து நீங்கும்.
மிதுனம்
1.1.2017 முதல் முதல் 8.1.2017 முதல் வரை உங்களுடைய ராசிநாதனான புதன்
சனியுடன் சேர்ந்து ஆறாம் வீட்டில் மறைந்திருப்பதால் அலர்ஜி, யூரினரி
இன்ஃபெக்சன், நரம்புச் சுளுக்கு, சளித் தொந்தரவு வந்து போகும்.
11.4.2017 முதல் 26.5.2017 வரை உள்ள காலக்கட்டத்தில் செவ்வாயை சனி
பார்ப்பதால் மறைமுக எதிர்ப்புகள், பழைய கடனை பற்றிய கவலைகள்,
வீண் டென்ஷன், சகோதர வகையில் மனவருத்தம் வந்து நீங்கும்.
1.1.2017 முதல் 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 9ல் கேது நிற்பதால் தந்தைக்கு
நெஞ்சுவலி, பித்தப் பையில் கல், சிறுநீரகக் கோளாறு வந்துபோகும்.
அவருடன் மனவருத்தங்களும் வரக்கூடும்.
பிதுர்ராஜ்ஜிய சொத்து சம்பந்தப்பட்ட விஷயத்தில் இப்போது தலையிட வேண்டாம்.
அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்தப் பாருங்கள்.
1.1.2017 முதல் 26.7.2017 வரை மூன்றாம் இடத்தில் ராகு இருப்பதால் புது
முயற்சிகள் பலிதமாகும்.
இளைய சகோதர வகையில் ஆதரவு பெருகும்.
வேற்றுமதம், மாற்று மொழிப் பேசுபவர்களால் உங்களது வாழ்க்கை தரம்
ஒருபடி உயரும்.
27.7.2017 முதல் 31.12.2017 வரை ராசிக்கு 2ல் ராகுவும், 8ம் வீட்டில் கேதுவும்
தொடர்வதால் வீண் விரயம், அலைச்சல், பொருள் இழப்புகள் வந்து போகும்.
1.1.2017 முதல் 1.9.2017 வரை உங்களின் சப்தம, ஜீவனாதிபதியான குரு உங்கள்
ராசிக்கு 4ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் எதிர்ப்புகள் அதிகமாகும்.
விபத்துகள் நிகழக்கூடும்.
2.9.2017 முதல் 31.12.2017 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில்
நுழைவதால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள்.
வறண்டிருந்த பணப்பை கொஞ்சம் நிரம்ப ஆரம்பிக்கும்.
குழந்தை பாக்யம் உண்டு.
பிள்ளைகளால் மதிப்பு, மரியாதை கூடும்.
மகளுக்கு ஏதோவொரு வகையில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமணம்
இப்பொழுது கூடி வரும்.
மகன் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார்.
வாடகை வீட்டிலிருந்த சிலர் சொந்த வீட்டிற்கு குடி புகுவீர்கள்.
பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும்.
வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
தங்க ஆபரணங்கள், ரத்தினங்கள் வாங்குவீர்கள்.
குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று முடிந்து
வைத்திருந்த காணிக்கையை செலுத்துவீர்கள்.
அடிக்கடி தொந்தரவு தந்த வாகனம் இனி சீராக ஓடும்.
1.1.2017 முதல் 14.12.2017 வரை சனி பகவான் 6ம் வீட்டிலேயே நீடிப்பதால்
எதிர்ப்புகள் குறையும்.
தொலைநோக்குச் சிந்தனை அதிகமாகும்.
வெற்றிபெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும்.
பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிட்டும்.
நீண்டநாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
அதிக வட்டிக் கடனை குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பைசல் செய்வீர்கள்.
பிதுர்வழி சொத்துப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலமாக சுமுகத் தீர்வு கிடைக்கும்.
வழக்கில் வெற்றி உண்டு.
தந்தையாரின் ஆரோக்யம் சீராகும்.
அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
புதுவீடு கட்டி குடிபுகுவீர்கள்.
15.12.2017 முதல் 31.12.2017 வரை சனி 7ல் அமர்ந்து கண்டகச் சனியாக
வருவதால் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.
எந்தப் பிரச்னையாக இருந்தாலும் இருவரும் மனம் விட்டுப்பேசி
முடிவுகளெடுப்பது நல்லது.
மனைவிக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள், முதுகு மற்றும் மூட்டுவலி
வந்துபோகும்.
மற்றவர்களை நம்பி பெரிய முயற்சிகளில் ஈடுபடாதீர்கள்.
முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பாக சட்ட நிபுணர்களை
கலந்தாலோசிப்பது நல்லது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)