0236. ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2017 பகுதி = I
மேஷம்
ராசிநாதன் செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து நிற்பதாலும், 17.1.2017 முதல் 26.2.2017
வரை ராசிக்கு பன்னிரெண்டில் மறைவதாலும் முன்கோபம், ரத்த சோகை,
சகோதரர்களுடன் மனக் கசப்புகள், சிறுசிறு நெருப்புக் காயங்களெல்லாம்
வந்துபோகும்.
11.4.2017 முதல் 26.5.2017 வரையுள்ள காலகட்டத்தில் உங்கள் ராசிநாதன்
செவ்வாயை சனி பார்ப்பதால் சிறுசிறு விபத்துகள், பணம் கொடுக்கல்,
வாங்கல் விஷயத்தில் ஏமாற்றங்கள் வந்துபோகும்.
1.1.2017 முதல் 1.9.2017 வரை உங்களின் பாக்யாதிபதியும் விரயாதிபதியுமான குரு
உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் மறைந்து சகட குருவாக அமர்ந்திருப்பதால் பணப்
பற்றாக்குறையை போக்க கூடுதலாக உழைப்பீர்கள்.
நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும்.
பிள்ளைகளால் அலைச்சலும், செலவுகளும் வந்து நீங்கும்.
2.9.2017 முதல் 31.12.2017 வரை குருபகவான் 7ம் வீட்டில் அமர்ந்து உங்களைப்
பார்க்கயிருப்பதால் உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த
நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்.
தள்ளிப் போன திருமணம் கூடி வரும்.
அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.
குடும்பத்தில், பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள்.
கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும்.
மருத்துவ சிகிச்சைக்குப் பின்னும் குழந்தை பாக்யம் கிடைக்கவில்லையே என
வருந்தினீர்களே! இந்த வருடத்தில் வாரிசு உருவாகும்.
ஆரோக்யம் சீராகும்.
அடகிலிருந்த நகை, சொத்தையெல்லாம் மீட்க வழி, வகை பிறக்கும்.
1.1.2017 முதல் 14.12.2017 வரை சனி 8ல் நின்று அஷ்டமத்துச் சனியாக வருவதால்
அவ்வப்போது கோபப்படுவீர்கள்.
ஏமாந்துபோன தொகையை நினைத்து வருத்தப்படுவீர்கள்.
ஏமாற்றிய நபர்களை நினைத்தும் ஆதங்கப்படுவீர்கள்.
மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
குடும்பத்துடன் வெளியூருக்கு செல்லும் முன் சமையலறையில் கேஸ் இணைப்பை
சரி பார்த்து விட்டுச் செல்லுங்கள்.
15.12.2017 முதல் 31.12.2017 வரை சனி 9ம் வீட்டில் அமர்வதால் எதிலும் ஒரு
தெளிவு பிறக்கும்.
மற்றவர்களின் மனநிலையைப் புரிந்து பேசும் பக்குவம் உண்டாகும்.
நெருடலான, தர்ம சங்கடமான சூழ்நிலைகளெல்லாம் நீங்கும்.
ரிஷபம்
1.1.2017 முதல் 16.1.2017 வரை செவ்வாயும், 1.1.2017 முதல் 27.1.2017 வரை
ராசிநாதன் சுக்கிரனும் கேதுவின் பிடியில் சிக்கியிருப்பதால் தொண்டைப்
புகைச்சல், சளித் தொந்தரவு, அசதி, சோர்வு, கை, கால் வலி வந்துபோகும்.
11.4.2017 முதல் 26.5.2017 வரை உங்களின் சப்தமாதிபதியான செவ்வாயை சனி
நேருக்குநேர் பார்க்கயிருப்பதால் இக்காலகட்டத்தில் மனைவிக்கு தலைச்சுற்றல்,
மூட்டுவலி, முன்கோபம், வேலைச்சுமை வந்துபோகும்.
அவருடன் வீண் விவாதங்களை தவிர்க்கப் பாருங்கள்.
சொத்து வாங்குவது, விற்பதில் அலட்சியம் வேண்டாம்.
1.1.2017 முதல் 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 10ல் கேதுவும், 4ம் வீட்டில் ராகுவும்
நீடிப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள்.
உத்யோகத்தில் இடமாற்றங்கள், சம்பள பிரச்னை, மறைமுக நெருக்கடிகள்
வந்து நீங்கும்.
27.7.2017 முதல் 31.12.2017 வரை ராசிக்கு 9ம் வீட்டில் கேது தொடர்வதால்
பிதுர்வழி சொத்துப் பிரச்னை தலைதூக்கும்.
தந்தையாருடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும்.
அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள், மூட்டுவலி வந்து செல்லும்.
எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும்.
1.1.2017 முதல் 1.9.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் நிற்பதால்
கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள்.
குடும்பத்தில் நல்லது நடக்கும்.
குழந்தை பாக்யம் கிடைக்கும்.
மகளுக்கு நல்ல வரன் அமையும்.
மகனின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள்
பலிதமாகும்.
குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை
செலுத்துவீர்கள்.
பூர்வீகச் சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள்.
பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்து கொள்வார்கள்.
உறவினர்கள் தேடி வருவார்கள்.
நட்பு வட்டம் விரிவடையும்.
2.9.2017 முதல் 31.12.2017 வரை குரு 6ம் வீட்டில் மறைந்து சகட குருவாக
வருவதால் சின்னச் சின்ன காரியங்களைக்கூட இரண்டு, மூன்று முறை
முயன்று முடிக்க வேண்டியது வரும்.
எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து விலகும்.
வி.ஐ.பிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
சட்டவிதிகளை மீறி யாருக்கும் உதவ வேண்டாம்.
சிலர் தங்களின் ஆதாயத்திற்காக உங்களைப் பற்றிய தவறான வதந்திகளைப்
பரப்புவார்கள்.
கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்கள், தோல்விகளை
நினைத்து அவ்வப்போது தூக்கம் குறையும்.
உங்களை நீங்களே குறைத்துக் கொள்ளாதீர்கள்.
15.12.2017 முதல் 31.12.2017 வரை 8ல் அமர்ந்து அஷ்டமத்துச் சனியாகவும்
வருவதால் கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகத்தை தவிர்க்கப் பாருங்கள்.
அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம்.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைதல், நகச்சுத்தி, முடி உதிர்தல், அலர்ஜி
வந்து நீங்கும்.
மிதுனம்
1.1.2017 முதல் முதல் 8.1.2017 முதல் வரை உங்களுடைய ராசிநாதனான புதன்
சனியுடன் சேர்ந்து ஆறாம் வீட்டில் மறைந்திருப்பதால் அலர்ஜி, யூரினரி
இன்ஃபெக்சன், நரம்புச் சுளுக்கு, சளித் தொந்தரவு வந்து போகும்.
11.4.2017 முதல் 26.5.2017 வரை உள்ள காலக்கட்டத்தில் செவ்வாயை சனி
பார்ப்பதால் மறைமுக எதிர்ப்புகள், பழைய கடனை பற்றிய கவலைகள்,
வீண் டென்ஷன், சகோதர வகையில் மனவருத்தம் வந்து நீங்கும்.
1.1.2017 முதல் 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 9ல் கேது நிற்பதால் தந்தைக்கு
நெஞ்சுவலி, பித்தப் பையில் கல், சிறுநீரகக் கோளாறு வந்துபோகும்.
அவருடன் மனவருத்தங்களும் வரக்கூடும்.
பிதுர்ராஜ்ஜிய சொத்து சம்பந்தப்பட்ட விஷயத்தில் இப்போது தலையிட வேண்டாம்.
அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்தப் பாருங்கள்.
1.1.2017 முதல் 26.7.2017 வரை மூன்றாம் இடத்தில் ராகு இருப்பதால் புது
முயற்சிகள் பலிதமாகும்.
இளைய சகோதர வகையில் ஆதரவு பெருகும்.
வேற்றுமதம், மாற்று மொழிப் பேசுபவர்களால் உங்களது வாழ்க்கை தரம்
ஒருபடி உயரும்.
27.7.2017 முதல் 31.12.2017 வரை ராசிக்கு 2ல் ராகுவும், 8ம் வீட்டில் கேதுவும்
தொடர்வதால் வீண் விரயம், அலைச்சல், பொருள் இழப்புகள் வந்து போகும்.
1.1.2017 முதல் 1.9.2017 வரை உங்களின் சப்தம, ஜீவனாதிபதியான குரு உங்கள்
ராசிக்கு 4ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் எதிர்ப்புகள் அதிகமாகும்.
விபத்துகள் நிகழக்கூடும்.
2.9.2017 முதல் 31.12.2017 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில்
நுழைவதால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள்.
வறண்டிருந்த பணப்பை கொஞ்சம் நிரம்ப ஆரம்பிக்கும்.
குழந்தை பாக்யம் உண்டு.
பிள்ளைகளால் மதிப்பு, மரியாதை கூடும்.
மகளுக்கு ஏதோவொரு வகையில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமணம்
இப்பொழுது கூடி வரும்.
மகன் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார்.
வாடகை வீட்டிலிருந்த சிலர் சொந்த வீட்டிற்கு குடி புகுவீர்கள்.
பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும்.
வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
தங்க ஆபரணங்கள், ரத்தினங்கள் வாங்குவீர்கள்.
குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று முடிந்து
வைத்திருந்த காணிக்கையை செலுத்துவீர்கள்.
அடிக்கடி தொந்தரவு தந்த வாகனம் இனி சீராக ஓடும்.
1.1.2017 முதல் 14.12.2017 வரை சனி பகவான் 6ம் வீட்டிலேயே நீடிப்பதால்
எதிர்ப்புகள் குறையும்.
தொலைநோக்குச் சிந்தனை அதிகமாகும்.
வெற்றிபெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும்.
பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிட்டும்.
நீண்டநாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
அதிக வட்டிக் கடனை குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பைசல் செய்வீர்கள்.
பிதுர்வழி சொத்துப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலமாக சுமுகத் தீர்வு கிடைக்கும்.
வழக்கில் வெற்றி உண்டு.
தந்தையாரின் ஆரோக்யம் சீராகும்.
அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
புதுவீடு கட்டி குடிபுகுவீர்கள்.
15.12.2017 முதல் 31.12.2017 வரை சனி 7ல் அமர்ந்து கண்டகச் சனியாக
வருவதால் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.
எந்தப் பிரச்னையாக இருந்தாலும் இருவரும் மனம் விட்டுப்பேசி
முடிவுகளெடுப்பது நல்லது.
மனைவிக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள், முதுகு மற்றும் மூட்டுவலி
வந்துபோகும்.
மற்றவர்களை நம்பி பெரிய முயற்சிகளில் ஈடுபடாதீர்கள்.
முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பாக சட்ட நிபுணர்களை
கலந்தாலோசிப்பது நல்லது.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக