0159. 10-ம் வீட்டில் கிரகம் நிற்பதால்
மேஷம் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெற்று 10ல் வலுவாக
அமர்ந்திருக்கும் தைரியம் கூடும்.
குழப்பங்கள் நீங்கும்.
தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
மாறுபட்ட அணுகுமுறை மூலமாக பழைய சிக்கல்களுக்கு தீர்வு
காண்பீர்கள்.
உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை உணருவீர்கள்.
தன் கையே தனக்குதவி என்பதையும் அறிவீர்கள்.
உதவி செய்து உபத்திரவத்தில் சிக்கிக் கொள்வதை நினைத்து
அவ்வப்போது பெருமூச்சு விடுவீர்கள்.
சகோதரங்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.
வீடு, மனை விற்பது, வாங்குவதில் இருந்து வந்த தேக்க நிலை,
மந்த நிலை மாறும்.
நீங்கள் எதிர்பார்த்த விலைக்கு வீடு விற்கும்.
அதேப் போல உங்கள் ரசனைக் கேற்ப வீடு, மனை அமையும்.
ரிஷபம் உத்யோக ஸ்தானமான 10ம் வீட்டில் கேது அமர்வதால்
சக ஊழியர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில்
சிக்குவீர்கள்.
மிதுனம் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் கேதுபகவான் அமர்ந்து
வேலைச்சுமையையும், மரியாதைக் குறைவான சம்பவங்களால்
தலைக்குனிவையும், உத்யோகத்தில் நிம்மதி யற்றப் போக்கையும் தந்து
கொண்டிருந்தது
துலாம் உங்களுடைய ராசிக்கு 10-ம் வீட்டிலேயே குரு நிற்பதால் அதுவரை
சிறுசிறு அவமானங்களும், மன உளைச்சல்களும், எதிர்காலம் பற்றிய
பயமும் இருக்கும்.
உங்களைப் பற்றி அவ்வப்போது நீங்கள் தாழ்த்திக் கொள்வீர்கள்.
சிலர் உங்களை குறைத்து மதிப்பிடுவார்கள்.
செலவுகளும் அதிகமாகும்.
தவிர்க்க முடியாத பயணங்களாலும் உடல் நிலை பாதிக்கும்.
அரசுக் காரியங்களில் அலட்சியம் வேண்டாம்.
அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் உடனுக்குடன் செலுத்துங்கள்.
சொத்து வரியை மறவாமல் செலுத்துங்கள்.
உங்கள் சொத்து சம்பந்தப்பட்ட பத்திரங்கள், ஆவணங்களையெல்லாம்
பாதுகாப்பாக எடுத்து வையுங்கள்.
புறநகர் பகுதியில் வீட்டு மனை, காலி மனை வாங்கி வைத்திருப்பவர்கள்
அவ்வப்போது சென்று அதை பார்த்து வருவது நல்லது.
சிலர் அதை ஆக்ரமிக்கக் கூடும்.
அதுவரை அலைச்சலும், சின்ன சின்ன அவமானங்களும்,
வேலை இழப்பும் ஏற்படும்.
தனுசு குரு வக்ரமாகி 10-ல் நுழைந்ததால் சின்ன சின்ன மறையாதைக்
குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும்.
அநாவசியமாக யாருக்கும் வாக்குறுதிகள் தர வேண்டாம்.
தனுசு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் செவ்வாய் வலுவாக
அமர்ந்திருப்பதால் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள்.
உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.
வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நேர்முகத் தேர்வில்
வெற்றி பெற்று புது வேலையில் சென்று அமர்வீர்கள்.
நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.
பிள்ளைகளால் மதிப்புக் கூடும்.
மகளுக்கு நல்ல வரன் அமையும்.
மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.
பூர்வீக சொத்தால் வருமானம் உயரும்.
வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை
நிறைவேற்றுவீர்கள்.
புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.
சகோதரங்களின் அரவணைப்பு அதிகரிக்கும்.
பணப்புழக்கம் அதிகரிக்கும்.
ஷேர் லாபம் தரும்.
வீடு கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.
மகளுக்கு,மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல் நல்ல பெண்
மணமகளாக,மணமகனாக அமைவார்.
உறவினர், நண்பர்களின் சந்திப்பால் உற்சாகமடைவீர்கள்.
புது வாகனம் வாங்குவீர்கள்.
கும்பம் உங்கள் ராசிநாதன் சனிபகவானும் 10-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால்
வேலைச்சுமை அதிகரிக்கும்.
வீண்பழியும் வரக்கூடும்.
மீனம் சூரியன் 10-ல் நுழைவதால் தந்தையாரின் உடல் நிலை சீராகும்.
அவருடன் இருந்து வந்த மனக்கசப்பு, ஈகோ பிரச்னைகள் நீங்கும்.
அரசால் அனுகூலம் உண்டு.
மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள்.
புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக