ஞாயிறு, 17 ஜனவரி, 2016

0161. 6-ம் வீட்டில் கிரகங்கள் மறைந்திருப்பதால்

0161. 6-ம் வீட்டில் கிரகங்கள் மறைந்திருப்பதால்

மேஷம் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் ராகு நிற்பதால் சில
ராஜ தந்திரங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.
ரிஷபம் ராசிநாதன் சுக்ரன் ராசிக்கு 6-ல் மறைந்திருப்பதால் செலவு
வந்துப் போகும்.
கழிவு நீர், குடி நீர் குழாய் அடைப்பு ஏற்படும்.
வாகனத்தில் செல்லும் போது மறவாமல் தலைக்கவசம் அணிந்துச்
செல்லுங்கள்.
வாகனம் அடிக்கடி செலவு வைக்கும்.
மின்னணு, மின்சார சாதனங்கள் பழுதாகும்.
வீண் அலைச்சல்
மிதுனம் 6-ம் வீட்டிலேயே சனிபகவான் நீடிப்பதால் தன்னார்வத்
தொண்டு நிறுவனங்களில் உங்களை இணைத்துக் கொள்வீர்கள்.
சாவலில் வெற்றி பெறுவீர்கள்.
எதிர்பாராத தொகை ஒன்று கைக்கு வரக்கூடும்.
மிதுனம் சூரியன் 6-ல் நிற்பதால் அரசால் அனுகூலம் உண்டு.
வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.
அரசு காரியங்கள் விரைந்து முடிவடையும்.
மிதுனம் ஆறாம் வீட்டிலுள்ள சுக்கிரனால் நண்பர்களுடன் நல்ல
முறையில் நட்பு நிலவும்.
துலாம் கேது 6-ம் வீட்டில் வலுவாக நிற்பதால் உங்களுடைய
அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள்.
வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள்.
ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
ஆன்மிகவாதிகளின் நட்பால் தெளிவடைவீர்கள்.
அதிரடி வளர்ச்சியையும், பிரபலங்களின் அந்தஸ்தையும் பெற்றுத் தந்த
கேதுபகவான் 
வியாபாரம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
பங்குதாரர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும்.
செல்வாக்குமிக்கவர்கள் பங்குதாரர்களாக வந்து சேருவார்கள்.
ஏற்றுமதி-இறக்குமதி, உணவு, எலக்ட்ரானிக்ஸ், கன்ஸ்டக்ஷன்,
ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயமடைவீர்கள்.
புதிய வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும்.
தொந்தரவு தந்த அனுபவமில்ல வேலையாட்களை நீக்கிவிட்டு
நல்லவர்களை பணியில் அமர்த்துவீர்கள்.
பற்று வரவு உயரும்.
புதுக் கிளைகள் தொடங்குவீர்கள்.
உத்யோகத்தில் எவ்வளவு தான் உழைத்தாலும் நல்ல பெயர் இருக்காது.
உங்களுடைய உழைப்பு மேலதிகாரியின் கவனத்திற்கு செல்லாமலேயே
இருக்கும்.
இடையில் இருக்கும் அதிகாரிகள் உங்களை பகடைக் காயாக
உருட்டுவார்கள்.
உங்களிடம் அதிக வேலை வாங்குவார்கள்.
ஆனால் மூத்த அதிகாரிகள் உங்களிடம் பாசமாக நடந்துக் கொள்வார்கள்.
துலாம் உங்கள் பாதகாதிபதியான சூரியன் 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால்
உங்களின் செல்வாக்குக் கூடும்.
அரசு காரியங்கள் விரைந்து முடியும்.
அரசாங்கத்திடமிருந்து புது சலுகைகளும் பெறுவீர்கள்.
உங்களுக்குள் இருந்து வரும் தாழ்வுமனப்பான்மை விலகும்.
முன்கோபத்தையும் குறைத்துக் கொள்வீர்கள்
மீனம் உங்கள் ராசிநாதன் குருபகவான் 6-ம் வீட்டிலேயே முடங்கிக்
கிடப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை
முயன்று முடிக்க வேண்டி வரும்.
உங்களுக்குள் ஒரு சலிப்பு வரும்.
வேலைச்சுமை, வீண் பழி, மறைமுக நெருக்கடிகள் வந்துச் செல்லும்.
வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்க வேண்டாம்.
யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்யாதீர்கள்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக