வியாழன், 30 நவம்பர், 2017

0260. கிழக்குப் பார்த்த வீடு பகுதி = II

0260. கிழக்குப் பார்த்த வீடு பகுதி = II

வாஸ்து பூஜை!

பூஜைக்குத் தேவையானவை : பசும்பால், பன்னீர், மஞ்சள், தேங்காய், பழம்,
வெற்றிலைப்பாக்கு , சாம்பிராணி, விபூதி, ஊதுவத்தி.

எப்படி பூஜிப்பது?:

முதலில் கணபதியை வணங்கிவிட்டு, அவரவர் குலதெய்வம் மற்றும் இஷ்டதெய்வத்தை
வழிபட வேண்டும்.

பின்னர், புது வீடு கட்டடம் கட்டப்போகும் மனையில் குறிப்பாக கட்டுமானம் அமையும்
பகுதியின் (பில்டிங் ஏரியா) வடகிழக்கு மூலையில், மூன்றடி அகலம்; 3 அடி நீள அளவில்
(அஸ்திவார பரப்பளவுக்குள் அடங்கும்படியாக) குழி தோண்டிக் கொள்ளவும்.
அல்லது, ஒன்றரை அடி நீளஅகலத்தில் குழி அமைக்கலாம்.

பின்னர், மீண்டும் முறைப்படி விநாயகர், குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தை
மனதாரத் துதித்தபடி, 3 அல்லது 5 அல்லது 11 என்ற எண்ணிக்கையில் செங்கற்கள்
எடுத்து அவற்றுக்கு சந்தன குங்குமத் திலகம் இட்டு, குழியில் ஊன்ற வேண்டும்.

தொடர்ந்து, மூன்று கன்னிப்பெண்கள் அல்லது சுமங்கலிப் பெண்களை நிறைகுடத்தில் நீர்
எடுத்துவரச் செய்து, மூவரும் ஒரே தருணத்தில் குழியில் நீர்விடச் செய்யவேண்டும்.

அடுத்ததாக, தெய்வப் பிரார்த்தனையுடன் குழியில் பால் சமர்ப்பிக்க வேண்டும்.
அங்கு அமையவுள்ள கட்டடத்தில் வசிக்கப் போகும் நமக்குப் பஞ்ச பூதங்களின் திருவருளும்
கிடைக்க வேண்டாமா? அதற்காக, பஞ்சபூதங்களையும் மனதில் துதித்து பஞ்சலோகங்களை
குழியில் சமர்ப்பிக்க வேண்டும்.

இதன் பின்னர், அஷ்டதிக் பாலகர்களை வணங்கி, பூக்கள்அட்சதையைச் சமர்ப்பித்து
வழிபடவேண்டும்.

நிறைவாக தேங்காய், பழம், வெற்றிலைப்பாக்கு சமர்ப்பித்து மீண்டும் கணபதி பெருமான்,
குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தையும் அந்தந்த தெய்வங்களுக்கு உரிய
துதிப்பாடல்களைப் பாடி வணங்கியபடி, ஊதுவத்தி மற்றும் சாம்பிராணி கொண்டு தூப
ஆராதனையும், தீப ஆரத்தியும் காட்டி வழிபடவேண்டும்.
இதன் பின்னர் கட்டுமான ஆரம்ப வேலைகளைச் செய்யலாம்.

வீட்டின் பகுதிகள் மனை அடி :

தென்மேற்கில் படுக்கையறை

தென்மேற்கு திசையில் இருக்க வேண்டும்.
தூங்கும் போது தலை தெற்கு அல்லது மேற்கு திசை நோக்கி இருக்க வேண்டும்.

10 அடி - யோகம் உண்டு. 10 அடி X 11 அடி
11 அடி - செல்வ நிலை உயரும்.

தெற்கு ... இரண்டாவது சந்ததியர் புழங்கும் படிப்பறை மற்றும் படுக்கையறை
மேற்கு .. சந்தததியர் படுக்கை அறை

10 அடி - யோகம் உண்டு. 10 அடி X 11 அடி
11 அடி - செல்வ நிலை உயரும்.

படுக்கை அறை மேற்கு

10 அடி - யோகம் உண்டு. 10 அடி X 11 அடி
11 அடி - செல்வ நிலை உயரும்.

மையப் பகுதி

ஒரு ஜீரோ வாட்ஸ் நீல பல்பை 24 மணி நேரமும் எரிய விடுவது நல்லது.

11 அடி - செல்வ நிலை உயரும்.
16 அடி - செல்வாக்கு உண்டாகும்

வடகிழக்கு.. இது நேரடியான குடிநீர் ஆதாரம் தருவதாகும்.
கிழக்கு - குடிநீர் ஆதாரம்

பூஜை அறை மேற்கு, வடகிழக்குத் திசைகள் அனைத்து நன்மைகளும் வந்து சேரும்.

ஈசான மூலை

வீட்டின் ஈசான மூலை கீழ்நிலைத் தொட்டி, கிணறு போன்றவை அமைக்க வேண்டிய
இடம், ஈசான மூலையில் நீரோட்டம் இல்லாத போது, தென்மேற்கு, தென்கிழக்கு தவிர்த்து
கிணறு தோண்டவும், பிறகு ஈசான மூலையில் கீழ்நிலைத் தொட்டி அமைக்கவும்.

அக்னி மூலை

அக்னி மூலை- தென்கிழக்கு மூலை.
இங்கு சமையற்கூடம் இருக்க வேண்டும்.

11 அடி - செல்வ நிலை உயரும். 11 அடி X 16 அடி
16 அடி - செல்வாக்கு உண்டாகும்

வீட்டின் அக்னி மூலையில் மின்சாதனங்களை வைக்கலாம்.

சமையலறை என்பது வளமையை குறிக்கும் இடமாகும்.
அதனால் இந்த இடம் தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும்.

நிருதி (தென்மேற்கு) மூலையில் பணப்பெட்டி, நிலைப்பேழை வைக்கவும், சுவற்றில்
பணப்பெட்டியை பதிப்பதாயின் நிருதியில் பதிக்கவும்.

வாயு மூலை 

கழிப்பறை,குளியல் அறைகளை வடமேற்கு (வாயு) மூலையில் அமைக்கவும்.
வடமேற்கு .. டாய்லெட் மற்றும் கழிவு நீர் குறி்த்த நன்மை

7 அடி X 7 அடி

வாயிற்படி

கிழக்கு,வடக்கு திசைகளில் தலைவாசல் இருப்பின் நலம்,

மாடிப்படி

தெர்கிலிருந்து வடக்காகவும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் செல்லும்படி மாடிப்படிக்
கட்டுக்களை அமைத்தல் நலம்.

Example : 01. வீடுகட்ட வாஸ்து பூஜை திருவோணம் 28/10/2017

Example : 02. கட்டுமானப் பணிகளைத் துவங்குவதற்கான காலம் உத்திரட்டாதி 29-11-2017

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

சனி, 4 நவம்பர், 2017

0257. ராசியாதிபதி தசை

0257. ராசியாதிபதி தசை

ஒவ்வொருவருக்கும் ராசியைப் போல லக்னம் உண்டு.
பிறந்த நாளில் உள்ள நட்சத்திரத்தின் அடிப்படையில் ராசியையும்,
பிறந்த நேரத்தைக் கொண்டு லக்னத்தையும் அறிந்துகொள்ளலாம்.
மேஷம் விருச்சிகத்துக்கு செவ்வாய் தசை,
ரிஷபம் துலாமுக்கு சுக்கிர தசை,
மிதுனம் கன்னிக்கு புதன் தசை,
மீனம் தனுசுக்கு குரு தசை,
மகரம் கும்பத்துக்கு சனி தசை,
சிம்மத்துக்கு சூரிய தசை,
கடகத்துக்கு சந்திர தசை என லக்னாதிபதி,
ராசி அதிபதிகளின் தசை நடக்கும்போது ஜாதகர் வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள்
ஏற்படும்.
திடீர் வளர்ச்சி, பணம், புகழ், செல்வாக்கு ஏற்படும்.

Example : 01. ராசி அதிபதிகளின் செவ்வாய் தசை 80% நடக்கும்போது ஜாதகர்
வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும்.
திடீர் வளர்ச்சி, பணம், புகழ், செல்வாக்கு ஏற்படும்.

செவ்வாய் தசை = 21/03/2053 TO 21/03/2060

Example : 02. ராசி அதிபதிகளின் குரு தசை 60% நடக்கும்போது ஜாதகர்
வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும்.
திடீர் வளர்ச்சி, பணம், புகழ், செல்வாக்கு ஏற்படும்.

குரு தசை = 15/06/2063 TO 15/06/2079

Example : 03. ராசி அதிபதிகளின் சுக்கிரன் தசை 60% நடக்கும்போது ஜாதகர்
வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும்.
திடீர் வளர்ச்சி, பணம், புகழ், செல்வாக்கு ஏற்படும்.

சுக்கிரன் தசை = 20/06/2068 TO 20/06/2088

Example : 04. ராசி அதிபதிகளின் செவ்வாய் தசை 20% நடக்கும்போது ஜாதகர்
வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும்.
திடீர் வளர்ச்சி, பணம், புகழ், செல்வாக்கு ஏற்படும்.

செவ்வாய் தசை = 27/08/1996 TO 27/08/2003

Example : 05. ராசி அதிபதிகளின் சூரியன் தசை 20% நடக்கும்போது ஜாதகர்
வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும்.
திடீர் வளர்ச்சி, பணம், புகழ், செல்வாக்கு ஏற்படும்.

சூரியன் தசை = 02/10/1974 TO 02/10/1980

Example : 06. ராசி அதிபதிகளின் குரு தசை 20% நடக்கும்போது ஜாதகர்
வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும்.
திடீர் வளர்ச்சி, பணம், புகழ், செல்வாக்கு ஏற்படும்.

குரு தசை = 21/09/2029 TO 21/09/2045

Example : 07. ராசி அதிபதிகளின் செவ்வாய் தசை 20% நடக்கும்போது ஜாதகர்
வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும்.
திடீர் வளர்ச்சி, பணம், புகழ், செல்வாக்கு ஏற்படும்.

செவ்வாய் தசை = 07/12/2008 TO 07/12/2015

Example : 08. ராசி அதிபதிகளின் சனி தசை 40% நடக்கும்போது ஜாதகர்
வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும்.
திடீர் வளர்ச்சி, பணம், புகழ், செல்வாக்கு ஏற்படும்.

சனி தசை = 23/05/2003 TO 23/05/2022

Example : 09. ராசி அதிபதிகளின் சனி தசை 60% நடக்கும்போது ஜாதகர்
வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும்.
திடீர் வளர்ச்சி, பணம், புகழ், செல்வாக்கு ஏற்படும்.

சனி தசை = 06/09/1981 TO 06/09/2000

Example : 10. ராசி அதிபதிகளின் சந்திரன் தசை 80% நடக்கும்போது ஜாதகர்
வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும்.
திடீர் வளர்ச்சி, பணம், புகழ், செல்வாக்கு ஏற்படும்.

சந்திரன் தசை = 29/12/2014 TO 29/12/2024

Example : 11. ராசி அதிபதிகளின் சனி தசை 40% நடக்கும்போது ஜாதகர்
வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும்.
திடீர் வளர்ச்சி, பணம், புகழ், செல்வாக்கு ஏற்படும்.

சனி தசை = 28/03/2016 TO 28/03/2035

Example : 12. ராசி அதிபதிகளின் சந்திரன் தசை 80% நடக்கும்போது ஜாதகர்
வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும்.
திடீர் வளர்ச்சி, பணம், புகழ், செல்வாக்கு ஏற்படும்.

சந்திரன் தசை = 19/12/2008 TO 19/12/2018

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

0256. சுகமும், செல்வமும்

0256. சுகமும், செல்வமும்

9ம் அதிபதி ஆட்சி, உச்சம் பெற்று கேந்திரத்தில் இருப்பது பலவித பாக்கியங்களைத்
தரும்.
சுபகிரக தசைகள் தொடர்ந்து வாழ்நாள் முழுதும் நடைபெற்றாலும் சுகமும், செல்வமும்
பெற்றிடுவர்.

Example : 01. 9ம் அதிபதி குரு, உச்சம் பெற்று கேந்திரத்தில் 4ல் இருப்பது பலவித
பாக்கியங்களைத் தரும்.
சுபகிரக குரு தசைகள் தொடர்ந்து வாழ்நாள் முழுதும் நடைபெற்றாலும் சுகமும்,
செல்வமும் பெற்றிடுவர்.

குரு தசை = 30/05/1964 TO 30/05/1980

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

0255. பெருஞ்செல்வந்தர்

0255. பெருஞ்செல்வந்தர்

லக்னாதிபதி மற்றும் 4ம் அதிபதிகள் பலம் பெற்று இணைந்து தசை நடந்தால் பல
வாகனங்களுக்கு அதிபராகவும், பிறப்பு முதல் இறப்பு வரை பெருஞ்செல்வந்தராகவும்
வாழ்வார்.

Example : 01. லக்னாதிபதி குரு மற்றும் 4ம் அதிபதிகள் குரு பலம் நட்பு பெற்று
இணைந்து தசை நடந்தால் பல வாகனங்களுக்கு அதிபராகவும், பிறப்பு முதல் இறப்பு வரை
பெருஞ்செல்வந்தராகவும் வாழ்வார்.

குரு தசை = 28/03/2000 TO 28/03/2016

Example : 02. லக்னாதிபதி புதன் மற்றும் 4ம் அதிபதிகள் புதன் பலம் நட்பு பெற்று
இணைந்து தசை நடந்தால் பல வாகனங்களுக்கு அதிபராகவும், பிறப்பு முதல் இறப்பு வரை
பெருஞ்செல்வந்தராகவும் வாழ்வார்.

புதன் தசை = 27/11/1982 TO 27/11/1999

Example : 03. லக்னாதிபதி புதன் மற்றும் 4ம் அதிபதிகள் புதன் பலம் ஆட்சி பெற்று
இணைந்து தசை நடந்தால் பல வாகனங்களுக்கு அதிபராகவும், பிறப்பு முதல் இறப்பு வரை
பெருஞ்செல்வந்தராகவும் வாழ்வார்.

புதன் தசை = 06/09/2000 TO 05/10/2015

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

0254. கோடீஸ்வரர்

0254. கோடீஸ்வரர்

குருவும் 9ம் அதிபதியும் இணைந்து கேந்திர, திரிகோணத்தில் இருந்தால், பிறப்பால்
கோடீஸ்வரர்.

Example : 01. குருவும் 9ம் அதிபதியும் சுக்கிரன் இணைந்து கேந்திர 10ல் இருந்தால்,
பிறப்பால் கோடீஸ்வரர்.

Example : 02. குருவும் 9ம் அதிபதியும் குரு இணைந்து கேந்திர 4ல் இருந்தால்,
பிறப்பால் கோடீஸ்வரர்.

Example : 03. குருவும் 9ம் அதிபதியும் குரு இணைந்து திரிகோணத்தில் 9ல்
இருந்தால், பிறப்பால் கோடீஸ்வரர்.

Example : 04. குருவும் 9ம் அதிபதியும் சூரியன் இணைந்து கேந்திர 10ல் இருந்தால்,
பிறப்பால் கோடீஸ்வரர்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

வெள்ளி, 3 நவம்பர், 2017

0253. லட்சுமி யோகம்

0253. லட்சுமி யோகம்

ஜாதகத்தில் இலக்கினத்திற்கு ஒன்பதாம் அதிபதி மற்றும் சுக்கிரன் கேந்திர,
திரிகோணங்களில் இருந்தாலும் ஆட்சி, உச்சம் பெற்றாலும் லட்சுமி யோகம் ஏற்படும்.
செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவியை குறிக்கும் சுக்கிரகோளின் வலிமையை
கொண்டு இந்த யோகம் விவரிக்கபடுகிறது.

பலன்

நற்குணங்கள் உடையவராகவும்,அழகானவராகவும், புகழ் பெற்றவராகவும் இருப்பார்,
செல்வ நிலையில் உயர்வு தரும்.

Example : 01. ஜாதகத்தில் இலக்கினத்திற்கு ஒன்பதாம் அதிபதி குரு உச்சம்
பெற்றாலும் 4ல் கேந்திரங்களில் இருந்தாலும் மற்றும் சுக்கிரன் 5ல் திரிகோணங்களில்
இருந்தாலும் லட்சுமி யோகம் ஏற்படும்.

Example : 02. ஜாதகத்தில் இலக்கினத்திற்கு ஒன்பதாம் அதிபதி சுக்கிரன் ஆட்சி
பெற்றாலும் மற்றும் சுக்கிரன் ஆட்சி பெற்றாலும் லட்சுமி யோகம் ஏற்படும்.

Example : 03. ஜாதகத்தில் இலக்கினத்திற்கு ஒன்பதாம் அதிபதி சுக்கிரன் 10ல்
கேந்திரங்களில் இருந்தாலும் மற்றும் சுக்கிரன் 10ல் கேந்திரங்களில் இருந்தாலும்
லட்சுமி யோகம் ஏற்படும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

0252. பையில் பணம் தங்கும்

0252. பையில் பணம் தங்கும்

கேள்வி :- 01.
பிறந்த நாள் முதல் இன்று வரை வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
வரவு வருவதற்கு முன் செலவு வருகிறது.
கையில் பணம் தங்குவதில்லை.
கடின உழைப்பு உழைத்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
உழைப்பிற்குத் தகுந்த பலன் கிடைக்கவில்லை.
உடல் நலக்குறைவும் ஏற்படுகின்றது.

பதில் :- 01.
தாங்கள் பிறந்த லக்னம் கடகம், ராசி ரிஷபம்.
குரு திசை நடக்கிறது
குரு சுக்ரனது காலில் சஞ்சரிப்பதால் பகை கிரகத்தின் சாரத்தில் இருக்கும் பொழுது,
உழைப்புக்கேற்ற பலன் கிடைப்பது அரிது.
குரு திசையில் வரும் கடைசி புத்தியான ராகு புத்தியில், முழுமையான பலன்கள்
உங்களுக்கு கிடைக்கும்.
பதினாறு ஆண்டுகளில் குரு செய்யாத யோகத்தை பதினாறு மாதங்களில் கூட செய்யலாம். 

கேள்வி :- 02.
பிறந்த நாள் முதல் இன்று வரை வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
வரவு வருவதற்கு முன் செலவு வருகிறது.
கையில் பணம் தங்குவதில்லை.
கடின உழைப்பு உழைத்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
உழைப்பிற்குத் தகுந்த பலன் கிடைக்கவில்லை.
உடல் நலக்குறைவும் ஏற்படுகின்றது.

பதில் :- 02.
தாங்கள் பிறந்த லக்னம் கன்னி, ராசி ரிஷபம்.
குரு திசை நடக்கிறது
குரு சுக்ரனது ராசியில் பகை கிரகத்தில் இருக்கும் பொழுது,
உழைப்புக்கேற்ற பலன் கிடைப்பது அரிது.
குரு திசையில் வரும் கடைசி புத்தியான ராகு புத்தியில், முழுமையான பலன்கள்
உங்களுக்கு கிடைக்கும்.
பதினாறு ஆண்டுகளில் குரு செய்யாத யோகத்தை பதினாறு மாதங்களில் கூட செய்யலாம். 

குரு திசையில் ராகு புத்தி => 23/06/2017 TO 17/11/2019

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

புதன், 1 நவம்பர், 2017

0251. யோகம் எனும் பிரிவில் ருதுவாகும் பெண்களுக்கு திருமணம்

0251. யோகம் எனும் பிரிவில் ருதுவாகும் பெண்களுக்கு திருமணம்

1. சவுபாக்கிய நாம யோகம் :- விரைவில் திருமணம் நடந்தேறும்.

2. அதிகண்ட நாம யோகம் :- இளமையில் திருமணம் கூட்டும்.

3. விருத்தி நாமயோகம் :- இளமையில் திருமணம் நடைபெறும்.

4. வரியான் நாம யோகம் :- இளம் வயதில் திருமணம் நடைபெறும் யோகம் உண்டு.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

செவ்வாய், 31 அக்டோபர், 2017

0250. தெற்கில் திசை பார்த்த வீடு

0250. தெற்கில் திசை பார்த்த வீடு

01. தெற்குத் திசையில் தலைவாசல் இருக்கும்போது, அதற்கு நேராக வடக்கில் ஒரு வாயில்
இருக்க வேண்டும்.

02. சமையலறை -  வடமேற்கு (வாயுவியம்)

03. பூஜை அறை - மேற்கு

04. படுக்கையறை - தென் மேற்கு  (நைருதி )

05. கழிப்பறை - தென்கிழக்கு, வட மேற்கு இதில் கழிவுக்கோப்பை வடக்கு, தெற்கு
பார்த்து அமைக்க வேண்டும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

0249. திருமண சம்பந்தம்

0249. திருமண சம்பந்தம்

தெற்குப் பார்த்த வீடுகளில் வசிப்பவர்கள் மேற்குப் பார்த்த வீட்டைச் சேர்ந்தவர்களிடம்
சம்பந்தம் செய்யக்கூடாது.
மேற்குக்கும் தெற்குக்கும் ஆகாது.
தேவையற்ற வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

0248. தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள்

0248. தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள்

1. அசுவினி = அசுவினி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி
2. பரணி = பூசம், பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி, விசாகம்
3. கார்த்திகை = கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி
4. ரோகிணி = ரோகிணி, திருவாதிரை, அஸ்த்தம், சுவாதி, திருவோணம், சதயம்
5. மிருகசீரிஷம் = மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்
6. திருவாதிரை = திருவாதிரை, அஸ்த்தம், சுவாதி, திருவோணம், சதயம் , ரோகிணி
7. புனர்பூசம் = புனர்பூசம், கார்த்திகை, உத்திரம், உத்திராடம், விசாகம், பூரட்டாதி
8. பூசம் = பூசம், பரணி, பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி
9. ஆயில்யம் = அசுவினி, ஆயில்யம், மகம், மூலம், கேட்டை, ரேவதி
10. மகம் = அசுவினி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி
11. பூரம் = பரணி, பூசம், பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி
12. உத்திரம் = கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி
13. அஸ்தம் = ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம்
14. சித்திரை = மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்
15. சுவாதி = ரோகிணி, சுவாதி, திருவாதிரை, சதயம், திருவோணம், உத்திரம்
16. விசாகம் = கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி
17. அனுஷம் = பரணி, பூரம், பூசம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி
18. கேட்டை = அசுவினி, ஆயில்யம், மகம், கேட்டை, ரேவதி, மூலம்
19. மூலம் = அசுவினி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி
20. பூராடம் = பரணி, பூரம், பூசம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி
21. உத்திராடம் = கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி
22. திருவோணம் = ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம்
23. அவிட்டம் = மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்
24. சதயம் = ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம்
25. பூரட்டாதி = கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி
26. உத்திரட்டாதி = பரணி, பூரம், பூசம், உத்திரட்டாதி, அனுசம், பூராடம்
27. ரேவதி = அசுவினி, ஆயில்யம், மகம், மூலம், கேட்டை, ரேவதி

Example : 01. தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரம்
ரோகிணி = ரோகிணி = > 2003 TO 2015 தொழில் செய்தனர்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

0246. கிழக்குப் பார்த்த வீடு பகுதி = I

0246. கிழக்குப் பார்த்த வீடு பகுதி = I

01. கிழக்கு தலைவாசல் கொண்ட இல்லத்தில் தலைவாசல் வடகிழக்குத் திசையை நோக்கி
இருக்கும்படி கட்டினால் செல்வம் வளரும்.

02. வீட்டில் வடகிழக்கு பாகத்தில் பூஜை அறை அமைப்பது விசேஷம்.

03. ஒரு வீட்டில் சமையலறையை தென்கிழக்கு பகுதியில் அமைத்துக் கொள்ள வேண்டும்.

04. ஒரு வீட்டில் கணவன் - மனைவி படுத்து உறங்கும் அறையை, வீட்டின் தென்மேற்குப்
பகுதியில்தான் அமைக்க வேண்டும்.

05. படுக்கையறையில் படுக்கையைத் தென்மேற்கு மூலையில்தான் போட வேண்டும்.

06. படுக்கையறையில் போடப்படும் கழிவறை, வடமேற்கு மூலையில் போட வேண்டும்.

07. கழிவறையில் அமைக்கப்படும் கோப்பை (Closet)- யை வடக்கு <---> தெற்கு
ஆகத் தான் அமைக்க வேண்டும்  

08. குளியலறை படுக்கை அறைக்குக் கிழக்கு = நன்மை, அமைந்திருக்க வேண்டும்.

09. குளியலறையைம் கழிவறையைம் சேர்த்து அமைக்கும் பட்சத்தில் தணீரைச் சூடாக்கும்
பாய்லறை தென்கிழக்கு மூலையில் வைக்க வேண்டும்.

010. தண்ணீர் வரும் குழாயை வடகிழக்குச் சுவரில் பதிக்க வேண்டும்.

011. கட்டுமானப் பணிகளைத் துவங்குவதற்கான காலம் ரோகிணி, மிருகசீரிடம், பூசம்,
உத்திரம், அஸ்தம், அனுஷம், உத்திராடம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள்
உத்தமம்.
புனர்பூசம், சித்திரை, சுவாதி, மூலம், அவிட்டம், சதயம் ஆகியன மத்திமம்.

Example : 01. வீடுகட்ட வாஸ்து பூஜை திருவோணம் 28/10/2017

Example : 02. கட்டுமானப் பணிகளைத் துவங்குவதற்கான காலம் உத்திரட்டாதி 29-11-2017

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

0245. ஒரே இரச்சு பொருந்தாது

0245. ஒரே இரச்சு பொருந்தாது

அஸ்வினி, மகம், மூலம் - பாத ரஜ்ஜு ஏறுமுகம் (ஆரோகணம்)
பரணி, பூரம், பூராடம் - தொடை ரஜ்ஜு ஏறுமுகம் (ஆரோகணம்)
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - தொப்புள் ராஜ்ஜு ஏறுமுகம் (ஆரோகணம்)
ரோகிணி, அஸ்தம், திருவோணம் - கண்ட ரஜ்ஜூ ஏறுமுகம் (ஆரோகணம்)

ஆயில்யம், கேட்டை, ரேவதி - பாத ரஜ்ஜு இறங்குமுகம் (அவரோகணம்)
பூசம், அனுஷம், உத்திரட்டாதி - தொடை ரஜ்ஜு இறங்குமுகம் (அவரோகணம்)
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - தொப்புள் ராஜ்ஜு இறங்குமுகம் (அவரோகணம்)
திருவாதிரை, சுவாதி, சதயம் - கண்ட ரஜ்ஜூ இறங்குமுகம் (அவரோகணம்)

மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் - சிரசு ரஜ்ஜு

Example : 01. பெண் = விசாகம் - தொப்புள் ராஜ்ஜு இறங்குமுகம் (அவரோகணம்)
ஆண் = புனர்பூசம் - தொப்புள் ராஜ்ஜு இறங்குமுகம் (அவரோகணம்)

பெண், பிள்ளைகளுடைய நட்சத்திரங்கள் ஒரே இரச்சுவில் இருந்தால் பொருந்தாது.

Example : 02. பெண் = பூரம் - தொடை ரஜ்ஜு ஏறுமுகம் (ஆரோகணம்)
ஆண் = பூராடம் - தொடை ரஜ்ஜு ஏறுமுகம் (ஆரோகணம்)

பெண், பிள்ளைகளுடைய நட்சத்திரங்கள் ஒரே இரச்சுவில் இருந்தால் பொருந்தாது.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

வியாழன், 23 பிப்ரவரி, 2017

0244. உத்தியோகஸ்தர்கள் பகுதி = III

0244. உத்தியோகஸ்தர்கள் பகுதி = III

தனுசு குடும்ப ஸ்தானத்தை சனி பார்க்கிறார்.
குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும்.
வாழ்க்கைத்துணை உடல் நலத்தில் கவனம் தேவை.
அடுத்தவர் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம்; அனுசரித்துச் செல்வது
நல்லது.
பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். 
தனுசு உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 6-ல் சூரியனும், 9-ல் குருவும் உலவுவது
சிறப்பு.
உத்தியோகஸ்தர்களது நிலை உயரும்.
இயந்திரப் பணிகள் லாபம் தரும்.
அரசாங்கத்தாரால் எதிர்பார்த்திருந்த காரியங்கள் நிறைவேறும்.
தனுசு உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 6-ல் புதனும் 9-ல் குருவும் உலவுவது
சிறப்பாகும்.
உத்தியோகஸ்தர்களது நோக்கம் நிறைவேறும்.
தனுசு சனிபகவான் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் உத்யோகத்தில் 
சவால்களை சந்திக்க நேரிடும்.
உயரதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள்.
தனுசு உங்களுடைய ராசிக்கு 9-வது வீட்டில் குரு ஊதிய உயர்வுடன்
கூடிய பதவி உயர்பு இருக்கும்.
எதிர்பார்த்துக் காத்திருந்த இடமாற்றமும் உண்டு.
கூடுதல் பொறுப்புகள் இருக்கும்.
தனுசு உங்கள் ஜீவனாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில்
சனிபகவான் செல்வதால் உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள
உயர்வு உண்டு.
தனுசு உங்களுடைய ராசிக்கு 4-ம் வீட்டில் கேது நிற்கும் போது
உத்யோகத்தில் உங்களுடைய கடின உழைப்பை உயரதிகாரி புரிந்துக்
கொள்வார்.
மூத்த அதிகாரிகள் உறுதுணையாக இருப்பார்கள்.
சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
தனுசு குரு 10-ம் வீட்டில் நுழைவதால் உத்யோகத்தில் நிரந்தரமற்ற சூழ்நிலை
உருவாகும்.
மகரம் குடும்பஸ்தானத்தில் சுக்கிரன் கேதுவுடன் இருக்கிறார்.
குடும்பத்தார் செயல்கள் உங்களுக்கு மனவருத்தத்தை தரலாம்.
சூழ்நிலையை கவனமாகக் கையாளுங்கள்.
பிள்ளைகளை அனுசரித்து செல்வது நன்மை தரும்.
கணவன்-மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் உண்டாகலாம்;
கவனம் தேவை.
மகரம் 2.9.2017 முதல் 31.12.2017 வரை குரு உத்யோகஸ்தானமான 10ல்
அமர்வதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளையும் சேர்த்துப்
பார்க்க வேண்டி வரும்.
விரும்பத்தகாத இடமாற்றமும் இருக்கும்.
உங்களுடைய உழைப்பைப் பயன்படுத்தி வேறு சிலர் நல்ல பெயரெடுத்து
முன்னேறுவார்கள்.
சக ஊழியர்களால் அவ்வப்போது டென்ஷனாவீர்கள்.
உங்களைவிட அனுபவம் குறைவானவர்கள், வயதில் சிறியவர்க
ளிடமெல்லாம் நீங்கள் அடங்கிப்போக வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
கும்பம் 2.9.2017 முதல் 31.12.2017 வரை 10ல் சனி தொடர்வதால் மறைமுக
பிரச்னைகள் இருக்கும்.
சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள்.
கும்பம் சனி பகவான் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு
என்றாலும், அவர் ராசியாதிபதி என்பதால் பெரிய  கெடுதல்களைச் செய்ய மாட்டார்.
அதே வேளையில் குருவும் சமசப்தமாக ராசியைப் பார்க்கிறார்.
செய்யும் பணியில் சில பிரச்னைகளைச் சந்திப்பீர்கள். 
பிறர் செய்யும் தவறுகளுக்கும் சேர்ந்து தண்டனையை அனுபவீப்பீர்கள்.
அதனால் யாருக்கும் நீங்களாக வலியப் போய் உதவவேண்டாம்.
வேலைபளு  அதிகரிப்பதால் பணிக்கு அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டியிருக்கும்.
சிலர் எதிர்பாராத இடமாற்றத்தால் குடும்பத்தை விட்டுப் பிரிவீர்கள்.
மனநிம்மதி  குறையும்.
மீனம் குடும்ப ஸ்தானத்தை ராசிநாதன் குரு பார்க்கிறார்.
குடும்பத்தில் அமைதி குறைவதுபோல் தோன்றும்.
சகோதர வழியில் ஏதாவது பிரச்னை தலைதூக்கலாம், கவனம் தேவை.
பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.
விருப்பமான நபரை சந்தித்து மகிழ்வீர்கள்.
கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

0243. பண சொல்வாக்கு பகுதி = IV

0243. பண சொல்வாக்கு பகுதி = IV

தனுசு சனிபகவான் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் உத்யோகத்தில் 
சம்பளம்  உயரும்.
தனுசு உங்களுடைய ராசிக்கு 12-ம் வீட்டில் சனியும், 8-ம் வீட்டில் குருவும்
மறைந்துக் கிடப்பதால் பணத்தட்டுப்பாடு உண்டாகும்.
தனுசு சனிபகவான் 2-ம் வீட்டைப் பார்ப்பதால் பணவரவு உண்டு
பற்றாக்குறையும் ஏற்படும்.
தனுசு உங்கள் ராசிநாதன் சுகாதிபதி குருவின் சாரத்தில் விசாகம்
நட்சத்திரம் 4ம் பாதம் விருச்சிக ராசி 12ம் வீட்டில் சனி செல்வதால்
பணவரவு உண்டு.
தனுசு ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து உங்களுக்கு ஓரளவு
பணப்புழக்கத்தையும், வசதி, வாய்ப்புகளையும், அந்தஸ்தையும் பெற்று
தந்த சனிபகவான்
தனுசு குருபகவான் 2-ம் வீட்டை பார்ப்பதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு
வரும்.
தனுசு குருபகவான் 6-ம் வீட்டை பார்ப்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு.
தனுசு உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 6-ல் புதனும் 9-ல் குருவும் உலவுவது
சிறப்பாகும்.
பொருளாதார நிலை திருப்தி தரும்.
தனுசு உங்கள் ராசிநாதன் குரு 9ம் வீட்டில் வந்தமர்வதால் பணவரவும்
அதிகரிக்கும்.
எதிர்பார்த்து ஏமாந்துப் போன தொகை கைக்கு வரும்.
சம்பள பாக்கி கைக்கு வரும்.
தனுசு குரு பகவான் அதிசாரத்திலும், வக்ர கதியிலும் ராசிக்கு 11-ல் அமர்வதால்
வருமானம் உயரும்.
தனுசு செவ்வாய் ராசிக்கு 10-ல் நிற்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
கும்பம் சூரியன் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் பணவரவு
திருப்தி தரும்.
கும்பம் குரு பதினோராம் வீட்டைப் பார்ப்பதால் லாபம் அதிகரிக்கும்.
மீனம் ராகு வலுவாக 6-ல் அமர்ந்திருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

0242. உடன்பிறந்தவர்களுடன் நல்லுறவு பகுதி = II

0242. உடன்பிறந்தவர்களுடன் நல்லுறவு பகுதி = II

துலாம் விருச்சிகம் சனி உடன்பிறந்தோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள்,
குடும்பத்தில் இருந்த சலசலப்புகள் விலகும்.
துலாம் 2-ம் வீட்டிலேயே செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால்
உடன்பிறந்தவர்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.
துலாம் செவ்வாய் 2-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் சகோதரங்கள் உங்கள்
வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள்.
துலாம் சூரியன் 3-ல் நுழைவதால் மூத்த சகோதரர் ஆதரவாக இருப்பார்.
துலாம் சூரியன் 6-ல் வலுவாக அமர்ந்திருப்பதால் மூத்த சகோதரருடன்
இருந்த மனக்கசப்பு நீங்கும்.
துலாம் செவ்வாய் 7-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சகோதரிக்கு திருமணம்
நிச்சயமாகும்.
விருச்சிகம் லாப வீட்டிலேயே உங்கள் ராசிநாதன் செவ்வாய் வலுவாக
அமர்ந்திருப்பதால் உடன்பிறந்தவர்கள் உங்களுடன் மனம் விட்டு பேசி
மகிழ்வார்கள்.
விருச்சிகம் ராசிக்கு 12-ல் செவ்வாய் மறைந்திருப்பதால் சகோதர வகையில்
அலைச்சல் வந்து நீங்கும்.
விருச்சிகம் ராசிநாதன் செவ்வாய் ஆட்சி பெற்று உங்கள் ராசியிலேயே
அமர்வதால் சகோதர, சகோதரிகளால் பயனடைவீர்கள்.
சகோதரங்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
சகோதரர்களால் நன்மை உண்டாகும்.
தனுசு உங்கள் தன-சேவகாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான
அனுஷம் நட்சத்திரத்தில் சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும்.
தனுசு உங்களின் பூர்வ புண்யாதிபதி செவ்வாய் வலுவாக இருப்பதால்
சகோதரங்களால் பயனடைவீர்கள்.
தனுசு உங்களின்  பூர்வ புண்யாதிபதி செவ்வாய் லாப வீட்டில் பலம்பெற்று
அமர்ந்திருக்கும் நேரத்தில் சகோதர, சகோதரிகள் பக்கபலமாக இருப்பார்கள். 
தனுசு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் செவ்வாய் வலுவாக அமர்ந்திருப்பதால்
சகோதரங்களின் அரவணைப்பு அதிகரிக்கும்.
தனுசு செவ்வாய் லாப வீட்டில் பலம் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில்
சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.
தனுசு 17.01.2017 முதல் 09.03.2017 வரை குரு பகவான் அதிசாரத்திலும்,
வக்ர கதியிலும் ராசிக்கு 11-ல் அமர்வதால் மூத்த சகோதர வகையில்
அனுகூலம் உண்டு.
தனுசு செவ்வாய் 12-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் சகோதர வகையில்
ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
கும்பம் மூன்றாம் வீட்டை குரு பார்ப்பதால், சகோதர, சகோதரிகளால் நன்மை
ஏற்படும்.
அவர்களும் வாழ்வில் உயர்வார்கள்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

திங்கள், 20 பிப்ரவரி, 2017

0241.மாற்றச் சிந்தனைகள்

0241.மாற்றச் சிந்தனைகள்

மேஷம் உங்கள் ராசியைப் பொறுத்தவரை 10, 11 ஆகிய இடங்களுக்கு
அதிபதியாக விளங்குபவர் சனிபகவான். 16-12-2014 முதல் 15-12-2017
வரை தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியான சனிபகவான்,
எட்டில் சஞ்சரிக்கும் பொழுது தொழில்மாற்றச் சிந்தனைகள், இடமாற்றச்
சிந்தனைகள், வீடு மாற்றச் சிந்தனைகள் மற்றும் நாடுமாற்றச் சிந்தனைகள்
போன்றவை ஏற்படுவது இயல்புதான்.
ரிஷபம் துலாம் ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை
2, 10, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. நாடு மாற்றங்களாலும், வீடு
மாற்றங்களாலும் நன்மை உண்டாகும்.
ரிஷபம் மகரத்தில் கேது சஞ்சாரம் செய்கின்றனர். தூர தேசத்தில்
இருப்பவர்கள் தாய்நாடு திரும்பும் வாய்ப்பும், தாய்நாட்டில் இருப்பவர்கள்
தூர தேசம் செல்லும் வாய்ப்பும் உருவாகும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.


0240. கிரகப் பிரவேசம்

0240. கிரகப் பிரவேசம்

மேஷம்02.8.2016 முதல் 1.09.2017 வரை குருபகவான் 6-ம் இடத்தில்
அமர்வதால் 12-ம் வீட்டை பார்ப்பதால் கிரகப்பிரவேசத்தையெல்லாம்.
அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள்.
மேஷம் குருபகவான் தனது 7ம் பார்வையால் உங்களின் 12ம் வீட்டை பார்ப்பதால்
கிரகப் பிரவேசம் சுபச் செலவுகள் அதிகமாகும்.
மேஷம் குருபகவான் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் வந்தமர்வதால் கிரகப் பிரவேசம்
சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.
ரிஷபம் குருபகவான் 02.08.2016 முதல் 01.09.2017 வரை 5-ம் வீட்டில்
நுழைவதால் உங்களின் லாப வீடான 11-ம் வீட்டை குரு பார்ப்பதால்
கிரகப் பிரவேசம் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.
மிதுனம் 02.8.2016 முதல் 1.09.2017 வரை 4-ம் வீட்டில் அமர்வதால்
குருபகவான் ராசிக்கு 12-ம் வீட்டை குரு பார்ப்பதால் கிரகப் பிரவேகம்
சுபச் செலவுகள் அதிகமாகும்.
கடகம் இரண்டாம் வீட்டில் குரு இருப்பதால் கிரகப் பிரவேசம் சுப நிகழ்ச்சிகளால்
வீடு களைக்கட்டும்.
துலாம் குருபகவான் 02.8.2016 முதல் 1.09.2017 வரை விரய
ஸ்தானமான 12-ம் வீட்டிற்குள் நுழைவதால் கிரகப் பிரவேசம்
சுபச்செலவுகளும் இருந்துக் கொண்டேயிருக்கும்.
மகரம் 9-ம் வீட்டில் அமர்வதால் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம்
கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல்
1.09.2017 வரை குருபகவான் செல்வதால் பழைய காலி மனையை
எதிர்பார்த்த விலைக்கு விற்று விட்டு நகரத்தில் புது வீடு வாங்குவீர்கள்.
கும்பம் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016
முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான்
செல்வதால் வீட்டில் தடைப்பட்டு வந்த கிரகப் பிரவேசம் சுப
நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

திங்கள், 13 பிப்ரவரி, 2017

0239. ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2017 பகுதி = IV

0239. ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2017 பகுதி = IV

மகரம்

11.4.2017 முதல் 26.5.2017 வரை உங்கள் ராசிநாதன் சனிபகவான் செவ்வாயைப்
பார்க்கயிருப்பதால் எதிலும் ஒருவித குழப்பம், தடுமாற்றம், படபடப்பு,
நெஞ்சு வலி, ரத்த சோகை, இளைய சகோதர வகையில் அலைச்சல், சொத்து
வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து செல்லும். 
1.1.2017 முதல் 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் கேதுவும், 8ல் ராகுவும்
அமர்ந்திருப்பதால் என்ன வாழ்க்கை இது?
செக்கு மாட்டு வாழ்க்கை மாதிரி என்றெல்லாம் சின்னதாக ஒரு வெறுப்பு, சலிப்பு
வந்து போகும்.
பார்வைக் கோளாறு, பல் வலி, காது வலி மற்றும் கால் வலி வந்து செல்லும்.
அவசர முடிவுகளெல்லாம் எடுக்க வேண்டாம்.
27.7.2017 முதல் 31.12.2017 வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது பகவானும்,
ராசிக்கு 7ம் வீட்டில் ராகுவும் அமர்ந்திருப்பதால் மற்றவர்களை சார்ந்து
இருக்க வேண்டாம்.
உங்களுடைய தனித்தன்மையைப் பின்பற்றுவது நல்லது.
தூக்கம் குறையும்.
யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். 
கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் பிரிவு வரக்கூடும்.
மனைவிக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மாதவிடாய்க் கோளாறு
வந்து செல்லும்.
வழக்கால் நெருக்கடிகள் வந்து நீங்கும்.
உங்களுடைய திறமை குறைந்து விட்டதாக நீங்களே சில நேரங்களில் நினைத்துக்
கொள்வீர்கள்.
பிள்ளைகளின் முன்னிலையில் மனைவியை குறைவாகப் பேச வேண்டாம்.
மற்றவர்களால் நாம் ஒதுக்கப்படுகிறோமோ, நாம் மதிக்கப்படவில்லையோ
என்றெல்லாம் உங்களுக்கு நீங்களே கேள்வி கேட்டு குழம்புவீர்கள்.
களவுபோக வாய்ப்பிருக்கிறது.
எனவே குடும்பத்துடன் வெளியூர் செல்ல நேரிட்டால் பாதுகாப்பு ஏற்பாடுகளை
செய்து விட்டு செல்வது நல்லது.  
1.1.2017 முதல் 1.9.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் நீடிப்பதால்
தன்னம்பிக்கை அதிகமாகும்.
அனுபவப்பூர்வமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள்.
திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில்
ஏற்பாடாகும்.
குழந்தை பாக்யம் கிடைக்கும்.
உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்.
குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பழைய கடனில் ஒரு பகுதியை பைசல்
செய்வீர்கள்.
ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
பிதுர்வழி சொத்து கைக்கு வரும்.
விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.
உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
2.9.2017 முதல் 31.12.2017 வரை குரு 10ம் வீட்டில் அமர்வதால் அவ்வப்போது
ஏமாற்றங்களை உணருவீர்கள். 
வேலைச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும்.
சட்டத்திற்குப் புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம்.
தங்க ஆபரணங்களை இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம்.
1.1.2017 முதல் 14.12.2017 வரை சனி 11ம் வீடான லாப வீட்டில் தொடர்வதால்
சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும்.
தடைபட்ட காரியங்களெல்லாம் முடிவடையும்.
வருமானம் உயரும்.
பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.
குடும்பத்தில் அமைதி நிலவும்.
ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் உதவிகள் உண்டு.
சிலருக்கு புதுத்தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும்.
சங்கம், டிரஸ்ட் இவற்றில் சேருவீர்கள்.
குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
எப்படியாவது ஒரு சொத்து வாங்கிவிட வேண்டுமென்று முயற்சி செய்வீர்கள்,
அந்த முயற்சியும் நல்ல விதத்தில் முடியும்.
வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.
புது வேலை அமையும். 
திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடிவரும்.
மூத்த சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும்.
புதிதாக வாகனம் வாங்குவீர்கள்.
உறவினர்களில் உள்ள அர்த்தத்துடன் பேசுபவர்களை இனம் கண்டறிந்து
ஒதுக்குவீர்கள்.
15.12.2017 முதல் 31.12.2017 வரை சனி 12ல் மறைந்து ஏழரைச் சனியின்
தொடக்கமான விரயச் சனி தொடங்குவதால் தூக்கமில்லாமல் போகும்.
பழைய கசப்பான சம்பவங்களை மறப்பது நல்லது.
உங்கள் பலம், பலவீனமறிந்து செயல்படப் பாருங்கள்.
முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் சட்ட நிபுணர்களை
கலந்தாலோசிப்பது நல்லது.
உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம்.   

கும்பம்

11.4.2017 முதல் 26.5.2017 வரை உங்கள் ராசிநாதன் சனிபகவான் செவ்வாயைப்
பார்க்கயிருப்பதால் முன்கோபம், வேலைச்சுமை, மனஉளைச்சல், சகோதர
வகையில் டென்ஷன், பணத்தட்டுப்பாடு வந்து செல்லும்.
வீடு, மனை வாங்கும் போது தாய்பத்திரம், பட்டாவையெல்லாம் சரி பார்த்து
வாங்குவது நல்லது. 
1.1.2017 முதல் 26.7.2017 வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது பகவானும்,
ராசிக்கு 7ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் தலைச்சுற்றல், தூக்கமின்மை,
செரிமானக் கோளாறு, மனஇறுக்கம், நாக்கில் வறட்சி, கை, கால் மரத்துப்
போகுதல் வந்து போகும்.
குடும்பத்தில் சண்டை, சச்சரவு, கணவன்  மனைவிக்குள் மோதல்களெல்லாம்
வந்துபோகும்.
மனைவிக்கு தைராய்டு, ஃபைப்ராய்டு பிரச்னைகளெல்லாம் வந்துசெல்லும்.
ஊறுகாய், லாகிரி வஸ்துக்கள் மற்றும் துரித உணவுகளை தவிர்ப்பது நல்லது.
27.7.2017 முதல் 31.12.2017 வரை உங்கள் ராசியை விட்டு கேது விலகி 12ம்
வீட்டிலும், ராகு 6ம் வீட்டிலும் அமர்வதால் பெரிய நோய் இருப்பதைப்
போன்ற பிரமையிலிருந்து விடுபடுவீர்கள். 
திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப்போல் முகவாட்டத்துடன்
காணப்பட்டீர்களே! இனி முகம் மலரும்.
உற்சாகத்துடன் வளம் வருவீர்கள்.
கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.
நீங்கள் சொல்லாததையும், சொன்னதாக நினைத்துக் கொண்டு மனக்கசப்பால்
விலகியிருந்த மனைவிவழி உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள்.
அங்கு, இங்கு புரட்டி ஏதாவது ஒரு வீடோ, மனையோ வாங்கி விட
வேண்டுமென முயற்சிப்பீர்கள். 
1.1.2017 முதல் 1.9.2017 வரை உங்களின் தன, லாபாதிபதியான குரு உங்கள்
ராசிக்கு 8ம் வீட்டில் நிற்பதால் வீண் அலைக்கழிப்புகள் அதிகரிக்கும்.
சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தாமதமாக வரும்.
மனதில் இனம்புரியாத கவலைகள் வந்துபோகும்.
தன்னம்பிக்கை குறையும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள்.
மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம்.
உங்களுடைய அணுகுமுறையை மாற்றுங்கள்.
சிக்கலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள்.
திடீர் திடீரென்று உணர்ச்சிவசப்படுதல் இவையெல்லாம் இருக்கும்.
பணப்பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை
உருவாகும்.
2.9.2017 முதல் 31.12.2017 வரை குரு 9ம் வீட்டிலேயே அமர்வதால் திடீர் அதிர்ஷ்ட,
யோகம் உண்டாகும்.
நீண்ட காலமாக தள்ளிப் போன காரியங்களெல்லாம் முடிவடையும்.
ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். 
1.1.2017 முதல் 14.12.2017 வரை உங்கள் ராசிநாதன் சனிபகவான் 10ம் வீட்டிலேயே
நீடிப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள்.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள்.
எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள்.
உத்யோகத்தில் அடிக்கடி இடமாற்றங்கள், வீண்பழிகள் வந்துசெல்லும்.
நெருக்கமானவர்களிடம் கூட குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள
வேண்டாம்.
சிலர் காரியம் ஆகும் வரை உங்களை பயன்படுத்திக் கொண்டு பிறகு தூக்கி
எறிவார்கள்.
15.12.2017 முதல் 31.12.2017 வரை சனி 11ம் வீடான லாப வீட்டில் நுழைவதால்
திடீர் யோகம், பணவரவு உண்டாகும்.
கௌரவப் பதவிகள் தேடி வரும்.
வெளிநாடு சென்று வருவீர்கள். 

மீனம்

1.1.2017 முதல் 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 12ல் கேது தொடர்வதால்
உங்களுடைய பலம், பலவீனத்தை உணருவீர்கள்.
நீண்ட நாட்களாக போக நினைத்த குலதெய்வக் கோயிலுக்கு
குடும்பத்தினருடன் சென்று நேர்த்திக் கடனைச் செலுத்துவீர்கள்.
சில நாட்களில் தூக்கம் குறையும்.
பழைய கடனைப்பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள்.
1.1.2017 முதல் 26.7.2017 வரை ராகு 6ம் வீட்டில் நிற்பதால் எதிலும் வெற்றி
பெறுவீர்கள்.
சொந்தபந்தங்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள்.
வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
பால்ய நண்பர்களால் உதவிகள் கிடைக்கும்.
27.7.2017 முதல் 31.12.2017 வரை கேது லாப வீட்டில் அமர்வதால் செல்வாக்கு
கூடும்.
கௌரவப் பதவிகள் தேடி வரும்.
கடந்தகால சுகமான அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். 
அரசால் அனுகூலம் உண்டாகும்.
ஹிந்தி, மலையாளம் பேசுபவர்களால் மாற்றம் உண்டாகும்.
தடைபட்டு வந்த சுப நிகழ்ச்சி களெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும்.
27.7.2017 முதல் 31.12.2017 வரை ராகு 5ம் வீட்டில் நிற்பதால் தெளிவான
முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள்.
பிள்ளைகளின் பொறுப்பற்ற போக்கை நினைத்து வருந்துவீர்கள்.
மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும்.
மகனின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது.
பூர்வீக சொத்துப் பிரச்னை வெடிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை
தவிர்க்கப் பாருங்கள்.       
1.1.2017 முதல் 1.9.2017 வரை உங்கள் ராசிநாதனும்  ஜீவனாதிபதியுமான
குருபகவான் 7ம் வீட்டில் அமர்ந்து உங்களை பார்ப்பதால் உங்களின்
தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.
அழகும் அறிவும் கூடும்.
கணவன்  மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும்.
மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள்.
மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.
ஒத்து வராத, உதவாத, உண்மையில்லாத உறவுகளை ஒதுக்கித்
தள்ளுவீர்கள்.
கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.
விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள்.
மனைவி வழியில் செல்வாக்கு கூடும்.
2.9.2017 முதல் 31.12.2017 வரை குரு 8ம் வீட்டில் மறைவதால் உங்களைப் பற்றிய
வதந்திகள் வரும். 
வீண் அலைக்கழிப்புகளும் அதிகமாகும்.
திடீர் பயணங்கள் இருக்கும்.
யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம்.
சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள்
அதிகரிக்கும்.
முக்கிய ஆவணங்களை கவனக் குறைவாக கையாள வேண்டாம்.
தாயாருடன் வீண் விவாதம் வந்துபோகும்.
பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். செலவுகள்
கட்டுக்கடங்காமல் போகும்.
வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.  
1.1.2017 முதல் 14.12.2017 வரை சனிபகவான் 9ம் வீட்டில் நிற்பதால்
தொலைநோக்குச் சிந்தனையால் சாதிப்பீர்கள்.
தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். 
குடும்பத்தில் நல்லது நடக்கும்.
உங்களை குற்றம், குறை கூறிக் கொண்டிருந்தவர்களின் மனசு மாறும். 
அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும்.
பிதுர்வழி சொத்து கைக்கு வரும்.
தந்தையாரின் ஆரோக்யம் சீராகும்.
தந்தை வழியில் உதவிகள் உண்டு.
வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்.
பயணங்கள் அதிகரிக்கும்.
15.12.2017 முதல் 31.12.2017 வரை சனி 10ல் அமர்வதால் வீரியத்தை விட
காரியம்தான் பெரிது என்பதை புரிந்து கொள்வீர்கள்.
எதிர்காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவீர்கள்.
ஆனால், உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.  

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

0238. ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2017 பகுதி = III

0238. ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2017 பகுதி = III

துலாம்

11.4.2017 முதல் 26.5.2017 வரை உங்கள் ராசிக்கு 8ல் செவ்வாய் அமர்வதுடன்
செவ்வாயை சனி பார்க்கயிருப்பதாலும் வீண் விரய செலவுகள், முன் கோபம்,
ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாடு, மனைவிக்கு மாதவிடாய் கோளாறு,
அடிவயிற்றில் வலி வந்து போகும்.       
1.1.2017 முதல் 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் கேது நிற்பதால்
பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டே போகும்.
அவர்களை அன்பாக நடத்துங்கள்.
உங்களுடைய கனவுகளை அவர்கள் மீது திணிக்க வேண்டாம்.
கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும்
உட்கொள்ள வேண்டாம்.
27.7.2017 முதல் 31.12.2017 வரை கேது 4ம் வீட்டிலும், ராகு 10ம் இடத்திலும்
அமர்வதால் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரியவரும்.
இதுவரை கட்டிக் காப்பாற்றிய கௌரவத்தை இழந்து விடுவோமோ, அசிங்கப்பட்டு
விடுவோமோ என்ற ஒரு கவலைகளும் தலைதூக்கும்.
அந்தஸ்து புகழுக்காக கைக்காசை கரைத்துக் கொண்டிருக்காதீர்கள்.     
1.1.2017 முதல் 1.9.2017 வரை உங்களின் சேவகாதிபதியும் சஷ்டமாதிபதியுமான
குரு உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் மறைந்து நிற்பதால் திடீர் பயணங்களால்
அலைச்சல், செலவுகள் இருக்கும்.
சிக்கனமாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போது திட்டமிட்டாலும் முடியாமல்
போகும்.
ஒருவித படபடப்பு வந்து செல்லும்.
உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் நீங்களே எடுத்து
நடத்துவீர்கள்.
யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம்.
கோயில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதை கிடைக்கும்.
2.9.2017 முதல் 31.12.2017 வரை குரு உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜென்ம
குருவாக அமர்வதால் ஒரு தேடலும், நிம்மதியற்ற போக்கும் அதிகரிக்கும். 
அவ்வப்போது கோபப்படுவீர்கள்.
யாரிடமாவது சண்டைபோட வேண்டுமென நினைப்பீர்கள்.
சாப்பாட்டில் உப்பை குறையுங்கள்.
ரத்தஅழுத்தம் அதிகமாகும்.
பெரியநோய் இருப்பதாக நினைத்து பயம் வரும்.
மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள்.
அல்சர், மஞ்சள் காமாலை, வாயுக் கோளாறால் நெஞ்சு வலி, யூரினரி
இன்ஃபெக்சன் வரக்கூடும்.
1.1.2017 முதல் 14.12.2017 வரை சனி 2ல் அமர்ந்து ஏழரைச் சனியின் இறுதி
கட்டமான பாதச் சனி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் பல்வலி, காதுவலி
வந்து நீங்கும்.
கண்பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். காலில் அடிபட வாய்ப்பிருக்கிறது.
பிள்ளைகளை படிப்பின் பொருட்டு கசக்கிப் பிழிய வேண்டாம்.
அவர்களை விட்டுப்பிடிப்பது நல்லது.
உறவினர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம்.
சில உண்மைகளை சில இடங்களில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். 
அந்தரங்க விஷயங்களை வெளியிடாமல் தேக்கி வைப்பது நல்லது.
பணப்பற்றாக்குறை ஏற்படும்.
யாருக்காகவும் ஜாமீன், கேரன்டர் கையொப்பமிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள்.
15.12.2017 முதல் 31.12.2017 வரை 3ம் வீட்டில் சனி அமர்வதால் சோர்ந்திருந்த
நீங்கள் புத்துயிர் பெறுவீர்கள்.
வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள்.
பிரிந்திருந்த கணவன்  மனைவி ஒன்று சேருவீர்கள்.
உங்கள் இருவருக்கும் இடையே குழப்பங்களை ஏற்படுத்தியவர்களை
இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள்.
தைரியம் கூடும்.
உங்களை ஏளனமாகப் பேசியவர்களெல்லாம் வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள்.

விருச்சிகம்

26.5.2017 முதல் 12.7.2017 வரை உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் 8ல்
மறைவதாலும் மற்றும் 11.4.2017 முதல் 26.5.2017 வரை உங்கள் ராசிநாதன்
செவ்வாயை சனி பார்க்கயிருப்பதாலும் சிறுசிறு வாகன விபத்துகள்,
மறைமுக எதிர்ப்புகள், பணப் பற்றாக்குறை வந்துசெல்லும்.
1.1.2017 முதல் 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் கேது பகவானும்,
ராசிக்கு 10ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் வாகன விபத்துகள், காரியத் தாமதம்,
வீண் அலைச்சல், டென்ஷன் வந்துபோகும். 
தாயாருக்கு கை, கால் வலி, சோர்வு வந்து நீங்கும்.
அவ்வப்போது மற்றவர்களைப்போல நம்மால் சுதந்திரமாக இருக்க
முடியவில்லையே என வருந்துவீர்கள்.
வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும்.
சின்னச் சின்ன மரியாதைக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும்.
27.7.2017 முதல் 31.12.2017 வரை கேது 3ம் வீட்டில் அமர்வதால் புதிய முயற்சிகள்
பலிதமாகும்.
உங்களுக்குள் ஒரு சுயக்கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.
எதிரி அடிக்கடி வாய்தா வாங்கியதால் தள்ளிப்போய் கொண்டிருந்த வழக்கில் இனி
சாதகமான தீர்ப்பு வரும்.
இளைய சகோதர வகையில் ஆதாயமடைவீர்கள்.
27.7.2017 முதல் 31.12.2017 வரை ராகு 9ம் வீட்டில் நிற்பதால் சேமிப்புகள் கரையும்.
தந்தையின் ஆரோக்யம் பாதிக்கும். 
1.1.2017 முதல் 1.9.2017 வரை உங்களின் தன, பூர்வ புண்யாதிபதியான குரு உங்கள்
ராசிக்கு லாப வீட்டில் நிற்பதால் உங்களின் புகழ், கௌரவம் ஒருபடி உயரும்.
பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும்.
தொடங்கிய பணிகள் உடனே முடியும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.
வருமானத்தை உயர்த்த புது வழிகளில் முயற்சி செய்வீர்கள்.
திடீர் யோகம், பணவரவு உண்டு.
நீண்ட நாளாக வராமலிருந்த பணமெல்லாம் இப்போது கைக்கு வரும்.
பழைய கடனில் ஒருபகுதியை தீர்க்க வழி பிறக்கும்.
மூத்த சகோதரர் முன்வந்து உதவுவார்.
நேர்மறை எண்ணங்கள் உருவாகும். 
பெரிய பதவிகள் தேடி வரும்.
தடைபட்ட வீடு கட்டும் பணியை தொடர்வீர்கள்.
தூரத்து சொந்த  பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.
2.9.2017 முதல் 31.12.2017 வரை குருபகவான் உங்களுடைய ராசிக்கு 12ம் வீட்டில்
சென்று மறைவதால் திடீர் பயணங்கள், செலவுகள் அதிகரிக்கும்.
ஒரே நேரத்தில் நான்கைந்து வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும்.
ஆடம்பரச் செலவுகளை குறைக்கப் பாருங்கள்.
நன்கு அறிமுகமாகாதவர்களை வீட்டில் சேர்க்க வேண்டாம்.
நீண்ட நாட்களாக தரிசிக்க நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
கோயில் கும்பாபிஷேகம் மற்றும் சகோதர, சகோதரிகள், உறவினர், நண்பர்கள்
வீட்டு விசேஷங்களையெல்லாம் நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள்.   
1.1.2017 முதல் 14.12.2017 வரை ராசிக்குள் சனி அமர்ந்து ஜென்மச் சனியாக
தொடர்வதால் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள்.
ஜெனரல் செக்கப் செய்து கொள்வது நல்லது.
வறுத்த, பொரித்த மற்றும் அசைவ உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது.
தலைவலி, மயக்கம், குமட்டல், நாக்கில் கசப்பு, செரிமானக் கோளாறு வந்து நீங்கும்.
நாக்கை கொஞ்சம் கட்டுங்கள்.
கணவன்  மனைவிக்குள் அவ்வப்போது வாக்கு வாதங்கள் வரத்தான் செய்யும்.
அதை பெரிது படுத்த வேண்டாம்.
நெருங்கிய உறவினர்கள், நண்பர்களாக இருந்தாலும் யாருக்கும் ஜாமீன், கேரன்டர்
கையெழுத்திட வேண்டாம்.
நாடாளுபவர்கள், பிரபலங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள். 
உடல் எடை கூடும்.
பணப்புழக்கம் இருந்தாலும் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும்
ஏற்படும்.
சிலசமயங்களில் முன்கோபத்தால் எடுத்தெறிந்து பேசுவீர்கள்.
நேரம் கிடைக்கும்போது யோகா, தியானம் செய்யத் தவறாதீர்கள்.
எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது.
எதிர்மறை எண்ணங்கள் தலைதூக்கும்.
நீங்கள் பெருந்தன்மையாக நடந்து கொண்டாலும் சிலர் உங்களை குறை
கூறுவார்கள்.
15.12.2017 முதல் 31.12.2017 வரை சனி உங்கள் ராசிக்கு 2ல் அமர்வதால்
நோய்களெல்லாம் வெகுவாகக் குறையும். குடும்பத்தில், கணவன் 
மனைவிக்குள் இருந்து வந்த கசப்புணர்வுகளெல்லாம் விலகும்.
ஆனால், பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும்.
நிதானம் அவசியம். மூக்கு, காது, கை, கால் வலி வந்து போகும்.
சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும்.       

தனுசு

11.4.2017 முதல் 26.5.2017 வரை செவ்வாயை சனி பார்க்கயிருப்பதால் இக்கால
கட்டங்களில் பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். 
1.1.2017 முதல் 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் கேது நிற்பதால் புதிய
முயற்சிகள் யாவும் பலிதமாகும்.
1.1.2017 முதல் 26.7.2017 வரை ராசிக்கு 9ம் வீட்டில் ராகு நிற்பதால் எவ்வளவு
பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும்.
தந்தையாருக்கு வேலைச்சுமை, வீண் டென்ஷன் அவருடன் பிணக்குகள்
வந்துசெல்லும். 
உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார்
என்பதைப் புரிந்து கொள்வதில் குழப்பம் வரும்.
27.7.2017 முதல் 31.12.2017 வரை கேது உங்கள் ராசிக்கு 2ம் வீட்டிலும், ராகு 8ம்
வீட்டிலும் அமர்வதால் குடும்பத்தில் சலசலப்புகள் வரும்.
எந்த வேலையாக இருந்தாலும் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது.
பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம்.
கண்ணை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
பல் வலி, காது வலி, கணுக்கால் வலி வந்து விலகும்.
வாகனத்தை நிதானமாக இயக்குங்கள்.
சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும்.
1.1.2017 முதல் 1.9.2017 வரை உங்களின் ராசிநாதனும் சுகாதிபதியுமான குரு
உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் நிற்பதால் அடுக்கடுக்கான வேலைகளால்
அவதிக்குள்ளாவீர்கள். 
மறைமுக அவமானம் வந்து நீங்கும்.
கௌரவம் குறைந்துவிடுமோ என்ற அச்சம் வரும்.
தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துபோகும்.
தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும்.
2.9.2017 முதல் 31.12.2017 வரை குரு 11ம் வீடான லாப ஸ்தானத்தில் அமர்வதால்
எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பை பெற்றுத் தருவார்.
கல்வியாளர்களின் நட்பால் தெளிவடைவீர்கள்.
புது சொத்து வாங்குவீர்கள்.
அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.
கணவன்மனைவிக்குள் எலியும், பூனையுமாக இருந்த நிலை மாறி நகமும்
சதையுமாக இணைவீர்கள்.
மகளுக்கு நல்ல வரன் அமையும்.
மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்யோகம் அமையும்.
பெரிய பதவிக்கு உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும். 
தாயாரின் உடல்நிலை சீராகும்.
புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
ஆடை, ஆபரணம் சேரும்.
அடகு வைத்திருந்த பத்திரம், பழைய கடனையெல்லாம் தீர்க்க புது
வழி பிறக்கும்.
விலகிச் சென்ற உறவினர்களெல்லாம் வலிய வந்து உறவாடுவார்கள்.
1.1.2017 முதல் 14.12.2017 வரை சனி 12ல் மறைந்து விரயச் சனியாகவும்,
15.12.2017 முதல் 31.12.2017 வரை உங்கள் ராசிக்குள் அமர்ந்து ஜென்மச்
சனியாகவும் வருவதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும்
அத்யாவசியச் செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும்.
வேலைச்சுமை அதிகரிக்கும்.
சிலர் எப்படி யெல்லாம் போலித்தனமாக பழகி காரியத்தை சாதித்துக்
கொள்கிறார்கள் என்பதை நினைத்து வருத்தப்படுவீர்கள். 
உள்மனது சிலவற்றை அறிவுறுத்தியும் அதை சரியாக பின்பற்றாமல்
விட்டுவிட்டோமே  என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள்.
கூடாப்பழக்கங்களிலிருந்து முழுமையாக வெளியேறுவது நல்லது.
நல்லவர்களுடன் பழகுங்கள்.
வாயு பதார்த்தங்கள், கார உணவுகளை தவிர்க்கப் பாருங்கள்.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறையக் கூடும்.
எனவே, இரும்புச் சத்துள்ள காய், கனிகளை உணவில் அதிகம் சேர்த்துக்
கொள்ளுங்கள்.
வாழ்க்கையே ஒரு பெரிய போராட்டமாக இருப்பதாக அவ்வப்போது
நினைத்துக் கொள்வீர்கள். கவலைப்படாதீர்கள்.
யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.    

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.