திங்கள், 13 பிப்ரவரி, 2017

0239. ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2017 பகுதி = IV

0239. ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2017 பகுதி = IV

மகரம்

11.4.2017 முதல் 26.5.2017 வரை உங்கள் ராசிநாதன் சனிபகவான் செவ்வாயைப்
பார்க்கயிருப்பதால் எதிலும் ஒருவித குழப்பம், தடுமாற்றம், படபடப்பு,
நெஞ்சு வலி, ரத்த சோகை, இளைய சகோதர வகையில் அலைச்சல், சொத்து
வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து செல்லும். 
1.1.2017 முதல் 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் கேதுவும், 8ல் ராகுவும்
அமர்ந்திருப்பதால் என்ன வாழ்க்கை இது?
செக்கு மாட்டு வாழ்க்கை மாதிரி என்றெல்லாம் சின்னதாக ஒரு வெறுப்பு, சலிப்பு
வந்து போகும்.
பார்வைக் கோளாறு, பல் வலி, காது வலி மற்றும் கால் வலி வந்து செல்லும்.
அவசர முடிவுகளெல்லாம் எடுக்க வேண்டாம்.
27.7.2017 முதல் 31.12.2017 வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது பகவானும்,
ராசிக்கு 7ம் வீட்டில் ராகுவும் அமர்ந்திருப்பதால் மற்றவர்களை சார்ந்து
இருக்க வேண்டாம்.
உங்களுடைய தனித்தன்மையைப் பின்பற்றுவது நல்லது.
தூக்கம் குறையும்.
யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். 
கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் பிரிவு வரக்கூடும்.
மனைவிக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மாதவிடாய்க் கோளாறு
வந்து செல்லும்.
வழக்கால் நெருக்கடிகள் வந்து நீங்கும்.
உங்களுடைய திறமை குறைந்து விட்டதாக நீங்களே சில நேரங்களில் நினைத்துக்
கொள்வீர்கள்.
பிள்ளைகளின் முன்னிலையில் மனைவியை குறைவாகப் பேச வேண்டாம்.
மற்றவர்களால் நாம் ஒதுக்கப்படுகிறோமோ, நாம் மதிக்கப்படவில்லையோ
என்றெல்லாம் உங்களுக்கு நீங்களே கேள்வி கேட்டு குழம்புவீர்கள்.
களவுபோக வாய்ப்பிருக்கிறது.
எனவே குடும்பத்துடன் வெளியூர் செல்ல நேரிட்டால் பாதுகாப்பு ஏற்பாடுகளை
செய்து விட்டு செல்வது நல்லது.  
1.1.2017 முதல் 1.9.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் நீடிப்பதால்
தன்னம்பிக்கை அதிகமாகும்.
அனுபவப்பூர்வமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள்.
திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில்
ஏற்பாடாகும்.
குழந்தை பாக்யம் கிடைக்கும்.
உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்.
குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பழைய கடனில் ஒரு பகுதியை பைசல்
செய்வீர்கள்.
ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
பிதுர்வழி சொத்து கைக்கு வரும்.
விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.
உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
2.9.2017 முதல் 31.12.2017 வரை குரு 10ம் வீட்டில் அமர்வதால் அவ்வப்போது
ஏமாற்றங்களை உணருவீர்கள். 
வேலைச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும்.
சட்டத்திற்குப் புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம்.
தங்க ஆபரணங்களை இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம்.
1.1.2017 முதல் 14.12.2017 வரை சனி 11ம் வீடான லாப வீட்டில் தொடர்வதால்
சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும்.
தடைபட்ட காரியங்களெல்லாம் முடிவடையும்.
வருமானம் உயரும்.
பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.
குடும்பத்தில் அமைதி நிலவும்.
ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் உதவிகள் உண்டு.
சிலருக்கு புதுத்தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும்.
சங்கம், டிரஸ்ட் இவற்றில் சேருவீர்கள்.
குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
எப்படியாவது ஒரு சொத்து வாங்கிவிட வேண்டுமென்று முயற்சி செய்வீர்கள்,
அந்த முயற்சியும் நல்ல விதத்தில் முடியும்.
வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.
புது வேலை அமையும். 
திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடிவரும்.
மூத்த சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும்.
புதிதாக வாகனம் வாங்குவீர்கள்.
உறவினர்களில் உள்ள அர்த்தத்துடன் பேசுபவர்களை இனம் கண்டறிந்து
ஒதுக்குவீர்கள்.
15.12.2017 முதல் 31.12.2017 வரை சனி 12ல் மறைந்து ஏழரைச் சனியின்
தொடக்கமான விரயச் சனி தொடங்குவதால் தூக்கமில்லாமல் போகும்.
பழைய கசப்பான சம்பவங்களை மறப்பது நல்லது.
உங்கள் பலம், பலவீனமறிந்து செயல்படப் பாருங்கள்.
முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் சட்ட நிபுணர்களை
கலந்தாலோசிப்பது நல்லது.
உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம்.   

கும்பம்

11.4.2017 முதல் 26.5.2017 வரை உங்கள் ராசிநாதன் சனிபகவான் செவ்வாயைப்
பார்க்கயிருப்பதால் முன்கோபம், வேலைச்சுமை, மனஉளைச்சல், சகோதர
வகையில் டென்ஷன், பணத்தட்டுப்பாடு வந்து செல்லும்.
வீடு, மனை வாங்கும் போது தாய்பத்திரம், பட்டாவையெல்லாம் சரி பார்த்து
வாங்குவது நல்லது. 
1.1.2017 முதல் 26.7.2017 வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது பகவானும்,
ராசிக்கு 7ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் தலைச்சுற்றல், தூக்கமின்மை,
செரிமானக் கோளாறு, மனஇறுக்கம், நாக்கில் வறட்சி, கை, கால் மரத்துப்
போகுதல் வந்து போகும்.
குடும்பத்தில் சண்டை, சச்சரவு, கணவன்  மனைவிக்குள் மோதல்களெல்லாம்
வந்துபோகும்.
மனைவிக்கு தைராய்டு, ஃபைப்ராய்டு பிரச்னைகளெல்லாம் வந்துசெல்லும்.
ஊறுகாய், லாகிரி வஸ்துக்கள் மற்றும் துரித உணவுகளை தவிர்ப்பது நல்லது.
27.7.2017 முதல் 31.12.2017 வரை உங்கள் ராசியை விட்டு கேது விலகி 12ம்
வீட்டிலும், ராகு 6ம் வீட்டிலும் அமர்வதால் பெரிய நோய் இருப்பதைப்
போன்ற பிரமையிலிருந்து விடுபடுவீர்கள். 
திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப்போல் முகவாட்டத்துடன்
காணப்பட்டீர்களே! இனி முகம் மலரும்.
உற்சாகத்துடன் வளம் வருவீர்கள்.
கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.
நீங்கள் சொல்லாததையும், சொன்னதாக நினைத்துக் கொண்டு மனக்கசப்பால்
விலகியிருந்த மனைவிவழி உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள்.
அங்கு, இங்கு புரட்டி ஏதாவது ஒரு வீடோ, மனையோ வாங்கி விட
வேண்டுமென முயற்சிப்பீர்கள். 
1.1.2017 முதல் 1.9.2017 வரை உங்களின் தன, லாபாதிபதியான குரு உங்கள்
ராசிக்கு 8ம் வீட்டில் நிற்பதால் வீண் அலைக்கழிப்புகள் அதிகரிக்கும்.
சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தாமதமாக வரும்.
மனதில் இனம்புரியாத கவலைகள் வந்துபோகும்.
தன்னம்பிக்கை குறையும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள்.
மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம்.
உங்களுடைய அணுகுமுறையை மாற்றுங்கள்.
சிக்கலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள்.
திடீர் திடீரென்று உணர்ச்சிவசப்படுதல் இவையெல்லாம் இருக்கும்.
பணப்பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை
உருவாகும்.
2.9.2017 முதல் 31.12.2017 வரை குரு 9ம் வீட்டிலேயே அமர்வதால் திடீர் அதிர்ஷ்ட,
யோகம் உண்டாகும்.
நீண்ட காலமாக தள்ளிப் போன காரியங்களெல்லாம் முடிவடையும்.
ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். 
1.1.2017 முதல் 14.12.2017 வரை உங்கள் ராசிநாதன் சனிபகவான் 10ம் வீட்டிலேயே
நீடிப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள்.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள்.
எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள்.
உத்யோகத்தில் அடிக்கடி இடமாற்றங்கள், வீண்பழிகள் வந்துசெல்லும்.
நெருக்கமானவர்களிடம் கூட குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள
வேண்டாம்.
சிலர் காரியம் ஆகும் வரை உங்களை பயன்படுத்திக் கொண்டு பிறகு தூக்கி
எறிவார்கள்.
15.12.2017 முதல் 31.12.2017 வரை சனி 11ம் வீடான லாப வீட்டில் நுழைவதால்
திடீர் யோகம், பணவரவு உண்டாகும்.
கௌரவப் பதவிகள் தேடி வரும்.
வெளிநாடு சென்று வருவீர்கள். 

மீனம்

1.1.2017 முதல் 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 12ல் கேது தொடர்வதால்
உங்களுடைய பலம், பலவீனத்தை உணருவீர்கள்.
நீண்ட நாட்களாக போக நினைத்த குலதெய்வக் கோயிலுக்கு
குடும்பத்தினருடன் சென்று நேர்த்திக் கடனைச் செலுத்துவீர்கள்.
சில நாட்களில் தூக்கம் குறையும்.
பழைய கடனைப்பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள்.
1.1.2017 முதல் 26.7.2017 வரை ராகு 6ம் வீட்டில் நிற்பதால் எதிலும் வெற்றி
பெறுவீர்கள்.
சொந்தபந்தங்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள்.
வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
பால்ய நண்பர்களால் உதவிகள் கிடைக்கும்.
27.7.2017 முதல் 31.12.2017 வரை கேது லாப வீட்டில் அமர்வதால் செல்வாக்கு
கூடும்.
கௌரவப் பதவிகள் தேடி வரும்.
கடந்தகால சுகமான அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். 
அரசால் அனுகூலம் உண்டாகும்.
ஹிந்தி, மலையாளம் பேசுபவர்களால் மாற்றம் உண்டாகும்.
தடைபட்டு வந்த சுப நிகழ்ச்சி களெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும்.
27.7.2017 முதல் 31.12.2017 வரை ராகு 5ம் வீட்டில் நிற்பதால் தெளிவான
முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள்.
பிள்ளைகளின் பொறுப்பற்ற போக்கை நினைத்து வருந்துவீர்கள்.
மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும்.
மகனின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது.
பூர்வீக சொத்துப் பிரச்னை வெடிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை
தவிர்க்கப் பாருங்கள்.       
1.1.2017 முதல் 1.9.2017 வரை உங்கள் ராசிநாதனும்  ஜீவனாதிபதியுமான
குருபகவான் 7ம் வீட்டில் அமர்ந்து உங்களை பார்ப்பதால் உங்களின்
தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.
அழகும் அறிவும் கூடும்.
கணவன்  மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும்.
மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள்.
மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.
ஒத்து வராத, உதவாத, உண்மையில்லாத உறவுகளை ஒதுக்கித்
தள்ளுவீர்கள்.
கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.
விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள்.
மனைவி வழியில் செல்வாக்கு கூடும்.
2.9.2017 முதல் 31.12.2017 வரை குரு 8ம் வீட்டில் மறைவதால் உங்களைப் பற்றிய
வதந்திகள் வரும். 
வீண் அலைக்கழிப்புகளும் அதிகமாகும்.
திடீர் பயணங்கள் இருக்கும்.
யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம்.
சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள்
அதிகரிக்கும்.
முக்கிய ஆவணங்களை கவனக் குறைவாக கையாள வேண்டாம்.
தாயாருடன் வீண் விவாதம் வந்துபோகும்.
பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். செலவுகள்
கட்டுக்கடங்காமல் போகும்.
வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.  
1.1.2017 முதல் 14.12.2017 வரை சனிபகவான் 9ம் வீட்டில் நிற்பதால்
தொலைநோக்குச் சிந்தனையால் சாதிப்பீர்கள்.
தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். 
குடும்பத்தில் நல்லது நடக்கும்.
உங்களை குற்றம், குறை கூறிக் கொண்டிருந்தவர்களின் மனசு மாறும். 
அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும்.
பிதுர்வழி சொத்து கைக்கு வரும்.
தந்தையாரின் ஆரோக்யம் சீராகும்.
தந்தை வழியில் உதவிகள் உண்டு.
வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்.
பயணங்கள் அதிகரிக்கும்.
15.12.2017 முதல் 31.12.2017 வரை சனி 10ல் அமர்வதால் வீரியத்தை விட
காரியம்தான் பெரிது என்பதை புரிந்து கொள்வீர்கள்.
எதிர்காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவீர்கள்.
ஆனால், உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.  

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக