0238. ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2017 பகுதி = III
துலாம்
11.4.2017 முதல் 26.5.2017 வரை உங்கள் ராசிக்கு 8ல் செவ்வாய் அமர்வதுடன்
செவ்வாயை சனி பார்க்கயிருப்பதாலும் வீண் விரய செலவுகள், முன் கோபம்,
ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாடு, மனைவிக்கு மாதவிடாய் கோளாறு,
அடிவயிற்றில் வலி வந்து போகும்.
1.1.2017 முதல் 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் கேது நிற்பதால்
பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டே போகும்.
அவர்களை அன்பாக நடத்துங்கள்.
உங்களுடைய கனவுகளை அவர்கள் மீது திணிக்க வேண்டாம்.
கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும்
உட்கொள்ள வேண்டாம்.
27.7.2017 முதல் 31.12.2017 வரை கேது 4ம் வீட்டிலும், ராகு 10ம் இடத்திலும்
அமர்வதால் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரியவரும்.
இதுவரை கட்டிக் காப்பாற்றிய கௌரவத்தை இழந்து விடுவோமோ, அசிங்கப்பட்டு
விடுவோமோ என்ற ஒரு கவலைகளும் தலைதூக்கும்.
அந்தஸ்து புகழுக்காக கைக்காசை கரைத்துக் கொண்டிருக்காதீர்கள்.
1.1.2017 முதல் 1.9.2017 வரை உங்களின் சேவகாதிபதியும் சஷ்டமாதிபதியுமான
குரு உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் மறைந்து நிற்பதால் திடீர் பயணங்களால்
அலைச்சல், செலவுகள் இருக்கும்.
சிக்கனமாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போது திட்டமிட்டாலும் முடியாமல்
போகும்.
ஒருவித படபடப்பு வந்து செல்லும்.
உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் நீங்களே எடுத்து
நடத்துவீர்கள்.
யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம்.
கோயில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதை கிடைக்கும்.
2.9.2017 முதல் 31.12.2017 வரை குரு உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜென்ம
குருவாக அமர்வதால் ஒரு தேடலும், நிம்மதியற்ற போக்கும் அதிகரிக்கும்.
அவ்வப்போது கோபப்படுவீர்கள்.
யாரிடமாவது சண்டைபோட வேண்டுமென நினைப்பீர்கள்.
சாப்பாட்டில் உப்பை குறையுங்கள்.
ரத்தஅழுத்தம் அதிகமாகும்.
பெரியநோய் இருப்பதாக நினைத்து பயம் வரும்.
மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள்.
அல்சர், மஞ்சள் காமாலை, வாயுக் கோளாறால் நெஞ்சு வலி, யூரினரி
இன்ஃபெக்சன் வரக்கூடும்.
1.1.2017 முதல் 14.12.2017 வரை சனி 2ல் அமர்ந்து ஏழரைச் சனியின் இறுதி
கட்டமான பாதச் சனி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் பல்வலி, காதுவலி
வந்து நீங்கும்.
கண்பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். காலில் அடிபட வாய்ப்பிருக்கிறது.
பிள்ளைகளை படிப்பின் பொருட்டு கசக்கிப் பிழிய வேண்டாம்.
அவர்களை விட்டுப்பிடிப்பது நல்லது.
உறவினர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம்.
சில உண்மைகளை சில இடங்களில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
அந்தரங்க விஷயங்களை வெளியிடாமல் தேக்கி வைப்பது நல்லது.
பணப்பற்றாக்குறை ஏற்படும்.
யாருக்காகவும் ஜாமீன், கேரன்டர் கையொப்பமிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள்.
15.12.2017 முதல் 31.12.2017 வரை 3ம் வீட்டில் சனி அமர்வதால் சோர்ந்திருந்த
நீங்கள் புத்துயிர் பெறுவீர்கள்.
வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள்.
பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள்.
உங்கள் இருவருக்கும் இடையே குழப்பங்களை ஏற்படுத்தியவர்களை
இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள்.
தைரியம் கூடும்.
உங்களை ஏளனமாகப் பேசியவர்களெல்லாம் வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள்.
விருச்சிகம்
26.5.2017 முதல் 12.7.2017 வரை உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் 8ல்
மறைவதாலும் மற்றும் 11.4.2017 முதல் 26.5.2017 வரை உங்கள் ராசிநாதன்
செவ்வாயை சனி பார்க்கயிருப்பதாலும் சிறுசிறு வாகன விபத்துகள்,
மறைமுக எதிர்ப்புகள், பணப் பற்றாக்குறை வந்துசெல்லும்.
1.1.2017 முதல் 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் கேது பகவானும்,
ராசிக்கு 10ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் வாகன விபத்துகள், காரியத் தாமதம்,
வீண் அலைச்சல், டென்ஷன் வந்துபோகும்.
தாயாருக்கு கை, கால் வலி, சோர்வு வந்து நீங்கும்.
அவ்வப்போது மற்றவர்களைப்போல நம்மால் சுதந்திரமாக இருக்க
முடியவில்லையே என வருந்துவீர்கள்.
வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும்.
சின்னச் சின்ன மரியாதைக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும்.
27.7.2017 முதல் 31.12.2017 வரை கேது 3ம் வீட்டில் அமர்வதால் புதிய முயற்சிகள்
பலிதமாகும்.
உங்களுக்குள் ஒரு சுயக்கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.
எதிரி அடிக்கடி வாய்தா வாங்கியதால் தள்ளிப்போய் கொண்டிருந்த வழக்கில் இனி
சாதகமான தீர்ப்பு வரும்.
இளைய சகோதர வகையில் ஆதாயமடைவீர்கள்.
27.7.2017 முதல் 31.12.2017 வரை ராகு 9ம் வீட்டில் நிற்பதால் சேமிப்புகள் கரையும்.
தந்தையின் ஆரோக்யம் பாதிக்கும்.
1.1.2017 முதல் 1.9.2017 வரை உங்களின் தன, பூர்வ புண்யாதிபதியான குரு உங்கள்
ராசிக்கு லாப வீட்டில் நிற்பதால் உங்களின் புகழ், கௌரவம் ஒருபடி உயரும்.
பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும்.
தொடங்கிய பணிகள் உடனே முடியும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.
வருமானத்தை உயர்த்த புது வழிகளில் முயற்சி செய்வீர்கள்.
திடீர் யோகம், பணவரவு உண்டு.
நீண்ட நாளாக வராமலிருந்த பணமெல்லாம் இப்போது கைக்கு வரும்.
பழைய கடனில் ஒருபகுதியை தீர்க்க வழி பிறக்கும்.
மூத்த சகோதரர் முன்வந்து உதவுவார்.
நேர்மறை எண்ணங்கள் உருவாகும்.
பெரிய பதவிகள் தேடி வரும்.
தடைபட்ட வீடு கட்டும் பணியை தொடர்வீர்கள்.
தூரத்து சொந்த பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.
2.9.2017 முதல் 31.12.2017 வரை குருபகவான் உங்களுடைய ராசிக்கு 12ம் வீட்டில்
சென்று மறைவதால் திடீர் பயணங்கள், செலவுகள் அதிகரிக்கும்.
ஒரே நேரத்தில் நான்கைந்து வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும்.
ஆடம்பரச் செலவுகளை குறைக்கப் பாருங்கள்.
நன்கு அறிமுகமாகாதவர்களை வீட்டில் சேர்க்க வேண்டாம்.
நீண்ட நாட்களாக தரிசிக்க நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
கோயில் கும்பாபிஷேகம் மற்றும் சகோதர, சகோதரிகள், உறவினர், நண்பர்கள்
வீட்டு விசேஷங்களையெல்லாம் நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள்.
1.1.2017 முதல் 14.12.2017 வரை ராசிக்குள் சனி அமர்ந்து ஜென்மச் சனியாக
தொடர்வதால் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள்.
ஜெனரல் செக்கப் செய்து கொள்வது நல்லது.
வறுத்த, பொரித்த மற்றும் அசைவ உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது.
தலைவலி, மயக்கம், குமட்டல், நாக்கில் கசப்பு, செரிமானக் கோளாறு வந்து நீங்கும்.
நாக்கை கொஞ்சம் கட்டுங்கள்.
கணவன் மனைவிக்குள் அவ்வப்போது வாக்கு வாதங்கள் வரத்தான் செய்யும்.
அதை பெரிது படுத்த வேண்டாம்.
நெருங்கிய உறவினர்கள், நண்பர்களாக இருந்தாலும் யாருக்கும் ஜாமீன், கேரன்டர்
கையெழுத்திட வேண்டாம்.
நாடாளுபவர்கள், பிரபலங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
உடல் எடை கூடும்.
பணப்புழக்கம் இருந்தாலும் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும்
ஏற்படும்.
சிலசமயங்களில் முன்கோபத்தால் எடுத்தெறிந்து பேசுவீர்கள்.
நேரம் கிடைக்கும்போது யோகா, தியானம் செய்யத் தவறாதீர்கள்.
எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது.
எதிர்மறை எண்ணங்கள் தலைதூக்கும்.
நீங்கள் பெருந்தன்மையாக நடந்து கொண்டாலும் சிலர் உங்களை குறை
கூறுவார்கள்.
15.12.2017 முதல் 31.12.2017 வரை சனி உங்கள் ராசிக்கு 2ல் அமர்வதால்
நோய்களெல்லாம் வெகுவாகக் குறையும். குடும்பத்தில், கணவன்
மனைவிக்குள் இருந்து வந்த கசப்புணர்வுகளெல்லாம் விலகும்.
ஆனால், பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும்.
நிதானம் அவசியம். மூக்கு, காது, கை, கால் வலி வந்து போகும்.
சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும்.
தனுசு
11.4.2017 முதல் 26.5.2017 வரை செவ்வாயை சனி பார்க்கயிருப்பதால் இக்கால
கட்டங்களில் பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள்.
1.1.2017 முதல் 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் கேது நிற்பதால் புதிய
முயற்சிகள் யாவும் பலிதமாகும்.
1.1.2017 முதல் 26.7.2017 வரை ராசிக்கு 9ம் வீட்டில் ராகு நிற்பதால் எவ்வளவு
பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும்.
தந்தையாருக்கு வேலைச்சுமை, வீண் டென்ஷன் அவருடன் பிணக்குகள்
வந்துசெல்லும்.
உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார்
என்பதைப் புரிந்து கொள்வதில் குழப்பம் வரும்.
27.7.2017 முதல் 31.12.2017 வரை கேது உங்கள் ராசிக்கு 2ம் வீட்டிலும், ராகு 8ம்
வீட்டிலும் அமர்வதால் குடும்பத்தில் சலசலப்புகள் வரும்.
எந்த வேலையாக இருந்தாலும் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது.
பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம்.
கண்ணை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
பல் வலி, காது வலி, கணுக்கால் வலி வந்து விலகும்.
வாகனத்தை நிதானமாக இயக்குங்கள்.
சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும்.
1.1.2017 முதல் 1.9.2017 வரை உங்களின் ராசிநாதனும் சுகாதிபதியுமான குரு
உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் நிற்பதால் அடுக்கடுக்கான வேலைகளால்
அவதிக்குள்ளாவீர்கள்.
மறைமுக அவமானம் வந்து நீங்கும்.
கௌரவம் குறைந்துவிடுமோ என்ற அச்சம் வரும்.
தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துபோகும்.
தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும்.
2.9.2017 முதல் 31.12.2017 வரை குரு 11ம் வீடான லாப ஸ்தானத்தில் அமர்வதால்
எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பை பெற்றுத் தருவார்.
கல்வியாளர்களின் நட்பால் தெளிவடைவீர்கள்.
புது சொத்து வாங்குவீர்கள்.
அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.
கணவன்மனைவிக்குள் எலியும், பூனையுமாக இருந்த நிலை மாறி நகமும்
சதையுமாக இணைவீர்கள்.
மகளுக்கு நல்ல வரன் அமையும்.
மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்யோகம் அமையும்.
பெரிய பதவிக்கு உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும்.
தாயாரின் உடல்நிலை சீராகும்.
புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
ஆடை, ஆபரணம் சேரும்.
அடகு வைத்திருந்த பத்திரம், பழைய கடனையெல்லாம் தீர்க்க புது
வழி பிறக்கும்.
விலகிச் சென்ற உறவினர்களெல்லாம் வலிய வந்து உறவாடுவார்கள்.
1.1.2017 முதல் 14.12.2017 வரை சனி 12ல் மறைந்து விரயச் சனியாகவும்,
15.12.2017 முதல் 31.12.2017 வரை உங்கள் ராசிக்குள் அமர்ந்து ஜென்மச்
சனியாகவும் வருவதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும்
அத்யாவசியச் செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும்.
வேலைச்சுமை அதிகரிக்கும்.
சிலர் எப்படி யெல்லாம் போலித்தனமாக பழகி காரியத்தை சாதித்துக்
கொள்கிறார்கள் என்பதை நினைத்து வருத்தப்படுவீர்கள்.
உள்மனது சிலவற்றை அறிவுறுத்தியும் அதை சரியாக பின்பற்றாமல்
விட்டுவிட்டோமே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள்.
கூடாப்பழக்கங்களிலிருந்து முழுமையாக வெளியேறுவது நல்லது.
நல்லவர்களுடன் பழகுங்கள்.
வாயு பதார்த்தங்கள், கார உணவுகளை தவிர்க்கப் பாருங்கள்.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறையக் கூடும்.
எனவே, இரும்புச் சத்துள்ள காய், கனிகளை உணவில் அதிகம் சேர்த்துக்
கொள்ளுங்கள்.
வாழ்க்கையே ஒரு பெரிய போராட்டமாக இருப்பதாக அவ்வப்போது
நினைத்துக் கொள்வீர்கள். கவலைப்படாதீர்கள்.
யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக