0150. மனை கிட்டும் யோகம் யாருக்கு உண்டு? பகுதி = V
மேஷம் குடும்ப ஸ்தானத்தை ராசிநாதனான செவ்வாய், பாக்கிய
விரயாதிபதியான குரு, தொழில் லாபாதிபதியான சனி ஆகியோர்
பார்ப்பதால் புதியதாக மனை வாங்குவதற்கு அனுகூலமாக கைக்கு
பணம் வந்து சேரும்.
மேஷம் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெற்று 10ல் வலுவாக
அமர்ந்திருக்கும் மனை விற்பது, வாங்குவதில் இருந்து வந்த தேக்க
நிலை, மந்த நிலை மாறும்.
உங்கள் ரசனைக் கேற்ப மனை அமையும்.
மேஷம் உங்கள் ராசிநாதனும்-அஷ்டமாதிபதியுமான செவ்வாயின்
அவிட்டம் நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால் புதிதாக மனை
வாங்கும் யோகம் உண்டாகும்.
மேஷம் கேது பகவான் உங்களது லாப ஸ்தானத்திற்கு வருகிறார்.
அவர் உங்களது ராசி, பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானம், பாக்கிய ஸ்தானம்
ஆகியவற்றைப் பார்க்கிறார்.
சொந்த பூமி, மனை வாங்கி மகிழ்வீர்கள்.
ரிஷபம் நான்காம் வீட்டில் குருபகவான் அமர்ந்திருப்பதால் மனை
வாங்குவீர்கள்
ரிஷபம் செவ்வாய் 12-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால்
மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும்.
மிதுனம் கேதுபகவான் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் வந்தமர்வதால்
நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் மனை வாங்குவீர்கள்.
மிதுனம் சனிபகவான் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் நிற்கும் போது
உங்கள் ரசனைக் கேற்ப மனை அமையும்.
கடகம் உங்களின் யோகாதிபதி செவ்வாய் 3ல் சாதகமாக இருப்பதால்
மனை வாங்கும் யோகம் உண்டாகும்.
பகுதியிலே நிலம், மனை வாங்கும் யோகம் உண்டாகும்.
கடகம் யோகாதிபதி செவ்வாய் 4ம் வீட்டில் கேந்திர பலம் பெற்று
அமர்ந்திருப்பதால் மனை வாங்குவது, விற்பது சுலபமாக முடிவடையும்.
கடகம் உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 10-ல் செவ்வாயும் உலவுவதால்
நிலம், மனை சொத்துகளின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ
கிடைக்கும்.
சிம்மம் ராசிநாதன் சூரியன் 4-ல் நிற்பதால் புறநகர் பகுதியில் மனை
வாங்குவீர்கள்.
கன்னி சனி உங்கள் ராசிக்கு 3-இல் தொடர்வதால் புறநகர் பகுதியில்
இருக்கும் சொத்தை விற்று நகரத்தில் வீடு வாங்கும் சூழல்
உண்டாகும்.
துலாம் செவ்வாய் 2-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் மனை வாங்கும்
யோகம் உண்டாகும்.
விருச்சிகம் ராசிநாதன் செவ்வாய் ஆட்சி பெற்று உங்கள் ராசியிலேயே
அமர்வதால் மனை வாங்க முன் பணம் தருவீர்கள்.
தனுசு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் செவ்வாய் வலுவாக
அமர்ந்திருப்பதால் புதிதாக மனை வாங்கும் யோகம் உண்டாகும்.
தனுசு செவ்வாய் 12-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் புதிதாக நிலம்
வாங்குவீர்கள்.
மகரம் 9-ம் வீட்டில் ராகுவும், செவ்வாயும் நிற்பதால் மனை வாங்குவது,
விற்பதில் வில்லங்கம் வந்து விலகும்.
கும்பம் செவ்வாய் 8-ல் மறைந்திருப்பதால் நிலம் சம்பந்தப்பட்ட
முக்கியமான பத்திரங்கள், ஆவணங்களையெல்லாம் பாதுகாத்து
வையுங்கள்.
மீனம் ராகு வலுவாக 6-ம் வீட்டில் நிற்பதால் நகர எல்லையை
ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக