0205. உடல் நிலை பாதிப்பு - வலி பகுதி = I
மேஷம் உங்கள் ராசிக்கு 2ல் அமர்வதால் கண், காது, பல் வலி
வந்துபோகும்.
காலில் அடிபட வாய்ப்பிருக்கிறது.
கண்ணில் சின்னதாக ஒரு தூசு விழுந்தால் அலட்சியமாக விட்டு
விடாமல் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.
சிலர் மூக்குக் கண்ணாடி அணிய வாய்ப்பிருக்கிறது.
மேஷம் உங்களின் தனாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம்
முதல் பாதத்தில் ராகுபகவான் செல்வதால் உடல் ஆரோக்யம்
சீராகும்.
மேஷம் ராசிநாதன் செவ்வாய் 7-ல் நிற்பதால் உடல் உஷ்ணம்,
வேனல் கட்டி வந்துச் செல்லும்.
மேஷம் ராசிநாதன் செவ்வாய் 6-ல் நின்றாலும் ராகுவுடன்
சேர்ந்திருப்பதால் தோலில் நமைச்சல் வந்துப் போகும்.
மேஷம் உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியிலேயே
ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் சோர்வு,களைப்பு நீங்கும்.
முதுகு வலி, மூட்டு வலி குறையும்.
மேஷம் அஷ்டமத்துச் சனியும், செவ்வாயும் சேர்க்கை பெற்று உடல்நலம் சீராகி
உற்சாகத்தோடு பணிபுரிய, ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்த வேண்டியது.
மேஷம் குருவின் 9ம் பார்வையால் உடல் நலக் குறைவு
மேஷம் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் ராகுபகவான் செல்வதால்
உடம்பில் இரும்புச் சத்துக் குறைபாடு ஏற்படக்கூடும்.
கை, கால் மரத்துப் போகும்.
ரிஷபம் ராகு 5ம் வீட்டில் நிற்பதால் மூட்டுவலி, ஒற்றைத் தலைவலி வரக்கூடும்.
ரிஷபம் சூரியன் 12-ல் மறைவதால் மூச்சுத் திணறல், தலைச்சுற்றல்,
முதுகு, மூட்டு வலி வந்துப் போகும்.
மிதுனம் உங்கள் சஷ்டம-லாபாதிபதியான செவ்வாயின் அவிட்டம்
நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால் சின்னச் சின்ன நெருப்புக்
காயங்கள் ஏற்படக்கூடும்.
மிதுனம் சுக்ரன் 6-ல் மறைவதால் சளித் தொந்தரவு, காய்ச்சல்,
வீண் டென்ஷன் வந்துச் செல்லும்.
உடல் உஷ்ணத்தால் அடிவயிறு வலிக்கும்.
கடகம் புதன் 6ல் மறைந்திருப்பதால் சயனஸ் இருப்பதைப் போல
லேசான தலை வலி, தொண்டை புகைச்சல் வந்துச் செல்லும்.
சளித் தொந்தரவு வந்துச் செல்லும்.
கடகம் குருவின் பார்வை அஷ்டம ஸ்தானத்தில் பதிவதால்
ஆரோக்கியம் சீராகும்.
கடகம் சுக்கிரன் ராசிக்கு 6ல் சென்று மறைவதால் தொண்டைப்
புகைச்சல்,சளித் தொந்தரவு வந்து செல்லும்.
கடகம் சனிபகவான் இரண்டாம் வீட்டை பார்ப்பதால் கண் எரிச்சல்,
பல் வலி, காது வலி வந்து போகும்.
கடகம் 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் தொடர்வதால் கண் வலி, பல் வலி
வந்துப் போகும்.
கடகம் உங்களுடைய ராசிக்கு 2-ம் வீட்டில் ராகுவும், 8-ல் கேதுவும் நிற்பதால்
மூட்டு வலி, முதுகு வலியால், நரம்புச் சுளுக்கு, கை, கால் மரத்துப் போகுதல்
வந்துப் போகும்.
கடகம் தனாதிபதி சூரியன் 7ல் அமர்வதால் உடல் உஷ்ணம் அதிகமாகும்.
வேனல் கட்டி, முன்கோபம் வந்து செல்லும்.
சிம்மம் அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுவதால் கை, கால் அடிக்கடி மரத்துப்
போக வாய்ப்பிருக்கிறது.
சிம்மம் சனிபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் அவ்வப்போது சோர்வு,
களைப்பு, செரிமானக் கோளாறு, வயிற்று உபாதைகள் வந்து நீங்கும்.
சிம்மம் 8ல் கேதுவும் நிற்பதால் கண்வலி, பல்வலி, கால்வலி வந்துசெல்லும்.
கன்னி உங்கள் ராசிக்கு பாதச் சனியாக 2ம் வீடான துலாம் ராசி விசாகம்
நட்சத்திரம் 3ம் பாதத்தில் சனி செல்வதால் கண் பார்வையை பரிசோதித்துக்
கொள்ளுங்கள்.
காலில் அடிபட வாய்ப்பிருக்கிறது.
கன்னி உங்கள் ராசிநாதனும்-ஜீவனாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில்
சனிபகவான் செல்வதால் சோர்வு, களைப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள்.
கன்னி புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால்
சளித் தொந்தரவு, தொண்டை புகைச்சல், கழுத்து வலி வந்துப் போகும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக