திங்கள், 18 ஜனவரி, 2016

0167. நட்சத்திரகள் பகுதி = II

0167. நட்சத்திரகள் பகுதி = II

துலாம் உங்கள் தன-சப்தமாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம்
நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால் உங்களிடம்  மறைந்து கிடந்த
திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.
கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.
வியாபாரத்தில் சில நுணுக்கங்களையும்  தெரிந்து கொள்வீர்கள்.
பங்குதாரரால் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்வீர்கள்.
தள்ளிப் போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
வாடிக்கையாளர்களின்  எண்ணிக்கை அதிகமாகும்.
உத்யோகத்தில் வேலையில் ஆர்வம் பிறக்கும்.
துலாம் உங்கள் தைரிய ஸ்தானாதிபதியும் - சஷ்டமாதிபதியுமான
குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால்
மற்றவர்களை நம்பி இருக்காமல் தன் முயற்சியால் என்ன முடிகிறதோ
அதைச் செய்து முன்னேறுவோம் என்ற முடிவுக்கு வருவீர்கள். 
மனோபலம் கூடும்.
துலாம் ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால்
அவ்வப்போது ஒருவித வெறுமையை உணருவீர்கள்.
குடும்பத்தில் சலசலப்புகள் வரும்.
வெளியூருக்குச் செல்லும்  போது வீட்டை சரியாக பூட்டிச் செல்லவும்.
சமையல் வாயு கசியக் கூடும்.
கவனம் தேவை.
தங்க நகைகளை இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம். 
யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட்டு பணம் வாங்கித் தர வேண்டாம். 
துலாம் உங்களின் லாபாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் முதல்
பாதத்தில் ராகுபகவான் செல்வதால் வசதி, வாய்ப்புகள் பெருகும்.
எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும்.
மனைவி வழியில் உங்களைப் பற்றிய இமேஜ் ஒருபடி  உயரும்.
அறிஞர்கள், நண்பர்கள் சிலரின் கருத்துகளை கேட்டு அதன்படி நடந்து
கொள்வீர்கள்.
துலாம் ராகுபகவான் உங்கள் ராசிநாதனும்-அஷ்டமாதிபதியுமான 
சுக்கிரனின் பூரம் நட்சத்திரத்தில் செல்வதால் அரைகுறையாக நின்ற
வேலைகள் முடிவடையும். 
தனுசு புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால்
பொருள் இழப்பு, வீண் டென்ஷன்,  முன்கோபம், தோலில் நமைச்சல்,
நரம்புக் கோளாறு வந்து நீங்கும்.
உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும்.
நீங்கள் சாதாரணமாகப் பேசுவதைக் கூட  சிலர் தவறாகப் புரிந்து
கொள்வார்கள். 
தனுசு உங்கள் சப்தம-ஜீவனாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில்
சனிபகவான் செல்வதால் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும்.
உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு.
மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு  உயரும்.  
தனுசு சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால்
அவ்வப்போது பலவீனமாக இருப்பதாக நினைப்பீர்கள்.
உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும்.
பழைய கசப்பான  சம்பவங்களை நினைவுக் கூர்ந்து குடும்பத்தில்
உள்ளவர்களை வசைப்பாடிக் கொண்டிருக்காதீர்கள்.
குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள்.
தனுசு உங்கள் தன-சேவகாதிபதியான சனிபகவான் தன் சுய
நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் சவால்களில் வெற்றி
பெறுவீர்கள்.
சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும்.
நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீடு வாங்குவீர்கள். 
தனுசு குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து
செல்வதால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். 
தோற்றுவிடுவோமோ என்ற ஒரு அவநம்பிக்கையும் வந்து போகும்.
அலர்ஜி, இன்பெக்ஷன் வரக்கூடும்.
மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட  வேண்டாம். 
தனுசு உங்கள் ராசிக்கு 11ம் வீடான துலாம் ராசி விசாகம்
நட்சத்திரம் 3ம் பாதத்தில் சனி செல்வதால் நினைத்த காரியம்
நிறைவேறும்.
சபைகளில் மதிக்கப்படுவீர்கள்.
அரசால் அனுகூலம் உண்டு.
தனுசு உங்கள் ராசிநாதன் சுகாதிபதி குருவின் சாரத்தில் விசாகம்
நட்சத்திரம் 4ம் பாதம் விருச்சிக ராசி 12ம் வீட்டில் சனி செல்வதால்
அழகு, ஆரோக்யம் கூடும்.
குடும்பத்தில் நிம்மதி  உண்டு.
பணவரவு உண்டு.
அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள்.
தாயாரின் உடல் நலம் சீராகும். 

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக