திங்கள், 18 ஜனவரி, 2016

0169. செவ்வாய் சனியுடன் சேர்ந்திருப்பதால்

0169. செவ்வாய் சனியுடன் சேர்ந்திருப்பதால்

மேஷம் ராசிநாதன் செவ்வாய் 8-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால்
சனியுடன் நிற்பதால் ஏமாற்றம், வீண் டென்ஷன், முன்கோபம், யூரினரி
இன்பெக்ஷன், அலர்ஜி, இரத்த அழுத்தம், சகோதர வகையில் சச்சரவுகள்
வந்துப் போகும்.
வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.
தோலில் நமைச்சல், வீண் அலைச்சல்கள் வந்து செல்லும். 
ரிஷபம் 7ல் நிற்கும் சனியுடன் செவ்வாய் சேர்ந்திருப்பதால் மனைவிக்கு
ரத்த சோகை, தைராய்டு பிரச்னை, சமைக்கும்போது சிறுசிறு நெருப்புக்
காயங்கள் வந்து செல்லும்.
மிதுனம் செவ்வாயும், சனியும் 6-ல் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிர்பார்ப்புகள்
எளிதாக முடியும்.
வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.
வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்பொழுது நிறைவேறும்.
குழந்தை பாக்யம் கிடைக்கும்.
மகளின் கோபம் குறையும்.
மகனின் அலட்சியப் போக்கு மாறும்.
உடன்பிறந்தவர்கள் வலிய வந்து உதவுவார்கள்.
வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.
கடகம் உங்கள் செவ்வாய் 5-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால்
சனியும் 5-ல் நிற்பதால் மனஉளைச்சல், வீண் குழப்பம், எதிர்காலம்
பற்றிய பயம் வந்துச் செல்லும்.
மகன்/மகளுடன் வாக்குவாதம் வேண்டாம்.
கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்த பொருட்களை சுமக்க வேண்டாம்.
வாகனத்தை வேகமாக இயக்க வேண்டாம்.
சிம்மம் நாலில் செவ்வாயுடன் சனி.
செவ்வாய் வீடு வாங்க வைப்பார்.
சனி இருப்பதால் சற்று அலைந்து திரிந்து வாங்கப் போகிறீர்கள்.
துலாம் இரண்டில் செவ்வாயுடன் சனி இருப்பதால் நீங்கள் கோபமாயும்
பேசுவீர்கள்.
நிதானமாகவும் பேசுவீர்கள்.
கன்னி சனியும், செவ்வாயும் வலுவாக 3ம் வீட்டில் நிற்பதால்
பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.
பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
சகோதர வகையில் நன்மை உண்டாகும்.
எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும்.
அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிட்டும்.
சிறுக சிறுக சேமித்து வைத்ததில் புறநகர் பகுதியிலாவது ஒரு கால்
கிரவுண்டு வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள்.
உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
ஷேர் லாபம் தரும்.
வேற்றுமொழி, இனத்தவர்களால் ஆதாயம் உண்டாகும்.
அயல்நாட்டிலிருக்கும் நண்பர்களால் உதவிகள் உண்டு.
விருச்சிகம் ராசிநாதன் ராசியிலேயே ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால்
சனியுடன் சேர்ந்து நிற்பதால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு
குறையக்கூடும்.
எனவே, இரும்புச் சத்து, நார்ச் சத்துள்ள காய், கனிகளை உணவில்
சேர்த்துக் கொள்ளுங்கள்.
சாலைகளை கவனமாகக் கடந்து செல்லுங்கள்.
சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும்.
ஹார்மோன் பிரச்னை, மூச்சுப் பிடிப்பு, அடி வயிற்றில் வலி
வந்துப் போகும்.
மகரம் செவ்வாயும், ராசிநாதன் சனியும் லாப வீட்டில் தொடர்வதால்
சகோதரருக்கு வேலை அமையும்.
வெகு நாள் கனவாக இருந்த ஆசை இப்போது நிறைவேறும்.
சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.
தொழிலதிபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
எங்குச் சென்றாலும் முதல் மரியாதைக் கிடைக்கும்.
இழுபறியாக இருந்த அரசு காரியங்கள் முடியும்.
சிறுக சிறுக சேமித்து வைத்ததில் புறநகர் பகுதியிலாவது ஒரு கால்
கிரவுண்டு வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள்.
குழந்தை பாக்யம் கிடைக்கும்.
பிள்ளைகளின் கலைத் திறனை கண்டறிந்து வெளிக் கொணர்வீர்கள்.
புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும்.
கும்பம் செவ்வாயும், சனியும் ராசிக்கு 10-ல் நிற்பதால் கௌரவப்
பதவி தேடி வரும்.
இளைய சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும்.
வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.
புறநகர் பகுதியில் அரை கிரவுண்டாவது இடம் வாங்க வேண்டுமென்று
முயற்சி செய்வீர்கள்.
மீனம் சனியும், செவ்வாயும் 9ம் வீட்டில் நிற்பதால் உடன்பிறந்தவர்கள்
ஒத்தாசையாக இருப்பார்கள்.
வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும்.
வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.
புது வேலை கிடைக்கும்.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் உங்களை இணைத்துக் கொள்வீர்கள்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக