சனி, 12 டிசம்பர், 2015

0110. சுக்கிர பலம் திசை

0110. சுக்கிர பலம் திசை

சுக்கிர திசை மொத்தம் 20 வருடங்கள் நடைபெறும்.
சுக்கிரதிசை வந்தாலே செல்வங்கள் கொழிக்கும் என்பது மக்களின் பொதுவான கருத்தாக உள்ளது.
ஆனால் அது தவறாகும்.
சுக்கிரன் ஒருவரின் ஜெனன கால ஜாதகத்தில் பலம் பெற்று அமைந்திருந்தால் மட்டுமே அத்திசைக்கான நற்பலன்களை பெற முடியும்.

சுக்கிர திசை சுக்கிரபுக்தி
சுக்கிர திசையில் சுக்கிர புக்தியானது 3வருடங்கள் 4மாதங்கள் நடைபெறும். 

சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம், சொந்த வீடு கட்டும் யோகம், ஆடை ஆபரண மற்றும் ஆடம்பர பொருட்களின் சேர்க்கை, திருமண சுபகாரியம் நடைபெறும் அமைப்பு, புத்திர பாக்கியம், பகைவரை வெல்லும் வலிமை, கலை, இசைத்துறைகளில் நாட்டம், உறவினர்களால் அனுகூலம் போன்ற நற்பலன்கள் உண்டாகும்.

சுக்கிர திசை சூரிய புக்தி
சுக்கிர திசையில் சூரிய புக்தியானது 1வருடம் நடைபெறும்.

சூரியன் பலம் பெற்றிருந்தால் பகைவரை வெல்லும் வலிமை, அரசு வழியில் அனுகூலங்கள் வெளியூர்  வெளி நாடுகளுக்கு சென்று சம்பாதிக்கும் யோகம், ஆடை ஆபரண சேர்க்கை, தாராள தன வரவு தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளால் அனுகூலம் சமுதாயத்தில் பெயர் புகழ் அமையும் யோகம். அரசியலில் ஈடுபாடு, வீடு மனை சேரும் யோகம் உண்டாகும்.

சுக்கிரதிசை சந்திர புக்தி
சுக்கிர திசையில் சந்திர புக்தி 1வருடம் 8மாதம் நடைபெறும். 

சந்திரன் பலம் பெற்றிருந்தால் பெண்களால் யோகம். ஜலத் தொடர்புடையவைகளால் அனுகூலம் வெளியூர்  வெளிநாட்டு பயணங்களால் லாபம்  தாய் வழியில் மேன்மை, ஆடை ஆபரணம், வண்டி வாகன சேர்க்கை, பெண் குழந்தை பிறக்கும் யோகம் கணவன் மனைவியிடையே ஒற்றும¬ ஏற்படும்.
நினைத்தது நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும்.

சுக்கிர திசையில் செவ்வாய் புக்தி
சுக்கிர திசையில் செவ்வாய் புக்தியானது 1வருடம் 2 மாதங்கள் நடைபெறும். 

செவ்வாய் பலம் பெற்றிருந்தால் இழந்த வீடு மனை சொத்துக்கள் திரும்ப கைக்கு கிடைக்கும்.
லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
பகைவர்களை வெல்லும் தைரியம், துணிவு, வீரம் விவேகம் யாவும் உண்டாகும்.
அரசு வழியில் அனுகூலமும் நல்ல நிர்வாகத் திறனும் உண்டாகும்.

சுக்கிர திசையில் ராகுபுக்தி
சுக்கிர திசையில் ராகுபுக்தி 3வருடங்கள் நடைபெறும். 

ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் சுகபோக வாழ்க்கை, பகைவரை வெல்லும் ஆற்றல் குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும் அமைப்பு, அரசு வழியில் அனுகூலம், எதிர்பாராத தனவரவுகள் வெளியூர் பயணங்களால் சம்பாதிக்கும் யோகம் போன்ற அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

சுக்கிர திசை குருபுக்தி
சுக்கிர திசையில் குருபுக்தியானது 2 வருடம் 8மாதங்கள் நடைபெறும். 

குருபகவான் பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில் சுபிட்சம் மகிழ்ச்சி, திருமண சுப காரியங்கள் நடைபெறும் அமைப்பு, எடுக்கும்  காரியங்களில் வெற்றி, அரசு வழியில் ஆதரவுகள், மற்றவர்களுக்கு உபதேசிக்கும் அமைப்பு, பகைவர்களை அழிக்கும் ஆற்றல் ஆன்மீகத்தில் ஈடுபாடு ஏற்படும்.

சுக்கிர திசையில் சனிபுக்தி
சுக்கிர திசையில் சனிபுக்தியானது 3வருடம் 2மாதம் நடைபெறும்.  

சனி பலம் பெற்றிருந்தால் இரும்பு சம்மந்தப்பட்ட தொழிலில் மேன்மை, அரசு வழியில் அனுகூலம்.
வண்டி வாகனம் அசையா சொத்துக்கள் சேரும் யோகம், நிறைய வேலையாட்களை வைத்து வேலை வாங்கும் அமைப்பு போன்ற அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

சுக்கிர திசையில் புதன் புக்தி
சுக்கிர திசையில் புதன் புக்தியானது 2வருடம் 10மாதம் நடைபெறும். 

புதன் பலம் பெற்றிருந்தால் கணக்கு, கம்பியூட்டர் துறையில் ஈடுபாடு உண்டாகும்.
தொழில் வியாபார நிலையில் முன்னேற்றம் ஆடை ஆபரண, வண்டி வாகன சேர்க்கை, பலருக்கு ஆலோசனை கூறும் அமைப்பு, அறிவாற்றல் பேச்சாற்றல், ஞாபக சக்தி கணக்கு துறைகளில் ஈடுபாடு தான தரும காரியங்கள் செய்ய கூடிய வாய்ப்பு அமையும்.
நினைத்து நிறைவேறும். பகைவர்களை வெல்லும் ஆற்றல், தாய் மாமன் வழியல் முன்னேற்றம் உண்டாகும்.

சுக்கிர திசையில் கேது புக்தி
சுக்கிர திசையில் கேது புக்தியானது 1வருடம் 2மாதங்கள் நடைபெறும்.

கேது நின்ற வீட்டதிபதி பலம் இழந்திருந்தால் தீர்த்த யாத்திரைகளுக்கு செல்லும் வாய்ப்பு, ஆன்மீக தெய்வீக காரியங்கள் ஈடுபாடு, ஆடை ஆபரண சேர்க்கை, ஆலய தரிசனங்கள், தெய்வ பக்தி, பகைவரை வெல்லும் ஆற்றல் உண்டாகும்.
தாராள தனவரவும் கிட்டும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

1 கருத்து:

  1. எனக்கு துலாம் லக்னத்தில் சனி வக்ரம். இப்போது சுக்ர திசை ஆரம்பம். மிதுனத்தில் சுக்ரனுடன் ராகு உள்ளார். ரிஷபத்தில் சூரியன் செவ்வாய் அஸ்தங்கமாகி உள்ளனர். வேலை இல்லை இப்போது. நடக்கும் திசையில் எந்த துறையில் சேர்ந்தால் வேலை நீடிக்கும் மேலும் திருமணமும் தள்ளிப் போகிறது. வயது 38 எனக்கு

    பதிலளிநீக்கு