சனி, 12 டிசம்பர், 2015

0109. உடல் நிலை பாதிப்பு - இன்ஃபெக்ஷன்

0109. உடல் நிலை பாதிப்பு - இன்ஃபெக்ஷன்

மேஷம் ராசிநாதன் செவ்வாய் 6-ல் நின்றாலும் ராகுவுடன்
சேர்ந்திருப்பதால் அலர்ஜி, இன்பெக்ஷன், வரட்டு இருமல் வந்துப் போகும்.
மேஷம் ராசிநாதன் செவ்வாய், சனியுடன் சம்பந்தப்பட்டு பலவீனமடைவதால் 
ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவு ஏற்படும். 
எனவே இரும்புச் சத்து அதிகமுள்ள காய், கனி, கீரை வகைகளை உணவில்
அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மேஷம் அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் யூரினரி இன்பெக்ஷன்,
வாயுக் கோளாறால் நெஞ்சு எரிச்சல் வந்துப் போகும்.
மேஷம் பாக்யாதிபதியும் விரயாதிபதியுமான குரு, ராசிக்கு 6ம் வீட்டில் மறைந்து
சகட குருவாக அமர்வதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை ஏற்படும்.
ரிஷபம் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் ராகுபகவான் செல்வதால் ரத்தத்தில்
ஹீமோகுளோபின் குறைதல், தோலில் நமைச்சல் வந்துபோகும்.
ரிஷபம் ராசிநாதன் சுக்ரன் ஆட்சிப் பெற்று ராசிக்கு 6-ல் மறைந்திருப்பதால்
அலர்ஜி, இன்பெக்ஷன், சளித் தொந்தரவு வீண் டென்ஷன்,காய்ச்சல்,
சளித் தொந்தரவு, தொண்டைப் புகைச்சல் வந்துப் போகும்.
கடகம் சூரியன் ராசிக்குள் நுழைவதால் கண் எரிச்சல் வந்துப் போகும்.
சிம்மம் ஜென்ம ராசியிலேயே ராகு அமர்வதால் ரத்தத்தில் சர்க்கரையின்
அளவையும் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
தொற்று, அலர்ஜி, வயிற்று உப்புசம், வாய்ப்புண், ஹார்மோன்
பிரச்னைகள் வந்து நீங்கும்.
சிம்மம் குரு ராசிக்குள் ஜென்ம குருவாக அமர்வதால் பெரிய நோய்
இருப்பதாக பயம் வரும். .
சிம்மம் 2-இல் நிற்கும் ராகுவுடன் செவ்வாயும் நிற்பதால் கண் எரிச்சல்,
கண் பார்வைக் கோளாறு வரக் கூடும்.
செரிமானக் கோளாறு வந்து நீங்கும்.
காலில் அடிப்படக் கூடும்.
சிம்மம் உங்கள் சஷ்டம-சப்தமாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான
அனுஷம் நட்சத்திரத்தில் செல்வதால் ரத்த சோகை, தலைச்சுற்றல், பைல்ஸ்,
மூச்சுப் பிடிப்பு வரக்கூடும்.
கன்னி உங்கள் ராசியிலேயே செவ்வாயும், ராகுவும் நிற்பதால்
உஷ்ணக் கட்டி, இரத்த சோகை வரக்கூடும்.
இரத்தத்தில் இரும்புச் சத்துகள் குறைய வாய்ப்பிருக்கிறது.
பச்சை கீரை, காய், கனி வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக்
கொள்ளுங்கள்.
விஷப் பூச்சிகளான தேள், பூரான் கடிக்க வாய்ப்பிருக்கிறது.
கவனம் தேவை.
சிறுசிறு நெருப்புக் காயங்கள் ஏற்படும்.
கண் வலி, வீண் செலவுகள் வந்துப் போகும்.
துலாம் உங்களுடைய ராசியை சந்திரன் பார்த்துக் கொண்டேயிருப்பதால்
அலர்ஜி, இன்பென்ஷனிலிருந்து விடுபடுவீர்கள்.
துலாம் சனிபகவான் 8ம் வீட்டை பார்ப்பதால் நோய் இருப்பதை போன்ற பயம்
வந்து நீங்கும்.
மகரம் சனிபகவான் ராசியைப் பார்ப்பதால் இன்ஃபெக்ஷன், செரிமானக்
கோளாறு வந்து நீங்கும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக