0233. வீடு வாங்கும் யோகம் பகுதி = II
துலாம் செவ்வாய் 2-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் வீடு வாங்கும்
யோகம் உண்டாகும்.
துலாம் உங்களுடைய ராசிநாதன் சுக்ரன் உங்கள் ராசியைப் பார்த்துக்
கொண்டிருக்கும் போது சிலர் வீடு மாற வேண்டுமென்ற முடிவிற்கு
வருவீர்கள்.
விருச்சிகம் ராசிநாதன் செவ்வாய் ஆட்சி பெற்று உங்கள் ராசியிலேயே
அமர்வதால் வீடு வாங்க முன் பணம் தருவீர்கள்.
விருச்சிகம் நாலில் சுக்கிரன் அழகிய வீடுவாங்க வைப்பார்.
அல்லது உங்கள் தாயார் வீடு வாங்கலாம்.
விருச்சிகம் குரு உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில்
வீடு வாங்கும் அமைப்பு உருவாகும்.
தனுசு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் செவ்வாய் வலுவாக
அமர்ந்திருப்பதால் புதிதாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.
தனுசு உங்கள் தன-சேவகாதிபதியான சனிபகவான் தன் சுய
நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் நகர எல்லையை ஒட்டியுள்ள
பகுதியில் வீடு வாங்குவீர்கள்.
தனுசு உங்கள் ராசிநாதன் சுகாதிபதி குருவின் சாரத்தில் விசாகம்
நட்சத்திரம் 4ம் பாதம் விருச்சிக ராசி 12ம் வீட்டில் சனி செல்வதால்
அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள்.
தனுசு செவ்வாய் 12-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் புதிதாக வீடு
வாங்குவீர்கள்.
மகரம் உங்கள் ராசிநாதன் சனிபகவானும் 11-ம் இடத்திலேயே
தொடர்வதால் வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை
நிறைவேறும்.
மகரம் அஷ்டம குருவாக சஞ்சரிக்கும் குரு பகவான் எதிர்பார்த்த
இடங்களிலிருந்து கடன் கிடைத்து வீடு வாங்கும் யோகமும் உண்டாகும்.
கும்பம் செவ்வாய் 8-ல் மறைந்திருப்பதால் வீடு சம்பந்தப்பட்ட
முக்கியமான பத்திரங்கள், ஆவணங்களையெல்லாம் பாதுகாத்து
வையுங்கள்.
மீனம் ராகு வலுவாக 6-ல் அமர்ந்திருப்பதால் வீட்டைப் புதுப்பிக்க
திட்டமிடுவீர்கள்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக