0232. உத்தியோகஸ்தர்கள் பகுதி = II
கடகம் குடும்பாதிபதி சூரியன் ராசிக்கு பாக்கியஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.
அதே வேளையில் பாக்கியாதிபதி குரு குடும்ப ஸ்தானத்தில் இருக்கிறார்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபவிசேஷங்கள் கொண்டாட்டங்கள் இருக்கும்.
கணவன்-மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
குழந்தைகளால் மகிழ்ச்சி கிட்டும்.
பெரியோரால் அனுகூலம் உண்டாகும்.
சகோதரர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.
உறவினர்கள் ஆதரவு இருக்கும்.
கடகம் குரு 3ம் வீட்டில் நிற்பதால் அடுக்கடுக்கான வேலைகளால்
அவதிபடுவீர்கள்.
கடகம் உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 10-ல் செவ்வாயும் உலவுவதால்
பொறியியல், சட்டம், காவல், ராணுவம் போன்ற துறைகளைச்
சேர்ந்தவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும்.
திட, வீர, பராக்கிரமம் வெளிப்படும்.
கடகம் மூன்றிலுள்ள ராகு சகோதர, சகோதரிகளுக்கு வெளிநாட்டு
உத்யோகம் கிடைக்க உதவுவார்.
கடகம் பத்தாம் வீட்டிலுள்ள கேது அறிவாற்றலைப் பெருக்கி
உத்யோகத்தைச் சிறக்கச் செய்வார்.
கடகம் 2-ல் குரு பகவான். 6, 9-க்கு அதிபதி 2-ல் சஞ்சரிக்கும் பொழுது,
உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும்.
மேலதிகாரிகளின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்தபடியே சில நல்ல
வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்வீர்கள்.
கடகம் துலாம் ராசியில் செவ்வாய் சஞ்சரிக்கப் போகின்றார்.
5, 10-க்கு அதிபதி 4-ல் சஞ்சரிக்கும் நேரம் நல்ல நேரம் தான்.
உயர் பதவிகளுக்கு உங்கள் பெயர் பரிசீலனை செய்யப்படுவது கண்டு
மகிழ்ச்சி அடைவீர்கள்.
கடகம் 2-ல் குரு இருப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு
மேலதிகாரிகளின் ஆதரவோடு பதவி உயர்வு கிடைக்கும்.
கடகம் சூரியன் 9-ல் நுழைந்திருப்பதால் தந்தைக்கு வேலைச்சுமை
வந்துப் போகும்.
சிம்மம் குடும்பாதிபதி புதன் ராசிக்குள் மறைந்திருந்தாலும் ராசியைப் பார்க்கிறார்.
குடும்பத்தில் திருமணம் போன்ற சுபவிசேஷங்கள் நடக்கும்.
எல்லா வகையிலும் நன்மை ஏற்படும்.
கணவன்-மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும்.
பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பது ஆறுதலை தரும்.
நண்பர்களால் சில விஷயங்கள் சுமுகமாக நடந்து முடியும்.
சிம்மம் குரு ராசிக்குள் ஜென்ம குருவாக அமர்வதால் பொறுப்புகளும்,
வேலைச்சுமையும் அதிகரிக்கும்.
அதிகாரப் பதவியில் இருப்பவர்களை எதிர்ப்பீர்கள்.
துலாம் குடும்பஸ்தானத்தில் சனி இருக்கிறார். குடும்பாதிபதி செவ்வாய் சனிசாரம்
பெற்றிருக்கிறார்.
குடும்பத்தில் திடீர் பிரச்னை தலைதூக்கும்.
மிகவும் கவனமாக கையாண்டால் அது தீரும்.
கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம்.
பிள்ளைகள் உங்கள் ஆலோசனையை கேட்காமல் தன்னிச்சையாக முடிவு
எடுக்கலாம்.
உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.
துலாம் சிம்மம் குருபெயர்ச்சி அலுவலகத்தில் உங்களது நிர்வாகத்திறமை
வெளிப்படும் அதே நேரத்தில் மேலதிகாரிகளிடமும் ஒத்துப்போவது நல்லது.
எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வு கிட்டும்.
வங்கி, இன்சூரன்ஸ் துறையினருக்கு நல்ல முன்னேற்றம் உண்டு.
துலாம் ராகுபகவான் உங்கள் ராசிக்கு லாப வீட்டிற்குள் அமர்வதால்
உங்களுடைய திறமையை மேலும் அதிகரித்துக் கொள்ளும் முயற்சியில்
ஈடுபடுவீர்கள்.
சவாலான வேலைகளையும் சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள்.
அதிகாரிகளுக்கு பல ஆலோசனைகள் தருவீர்கள்.
துலாம் உங்கள் தன-சப்தமாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம்
நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால் உத்யோகத்தில் வேலையில்
ஆர்வம் பிறக்கும்.
துலாம் 6-ல் கேது நிற்பதால் உத்யோகத்தில் எவ்வளவு தான் உழைத்தாலும்
நல்ல பெயர் இருக்காது.
உங்களுடைய உழைப்பு மேலதிகாரியின் கவனத்திற்கு செல்லாமலேயே
இருக்கும்.
இடையில் இருக்கும் அதிகாரிகள் உங்களை பகடைக் காயாக
உருட்டுவார்கள்.
உங்களிடம் அதிக வேலை வாங்குவார்கள்.
ஆனால் மூத்த அதிகாரிகள் உங்களிடம் பாசமாக நடந்துக் கொள்வார்கள்.
துலாம் உத்யோகஸ்தானமான 10-ம் வீட்டிலேயே குருபகவான் நிற்பதால்
வேலை இழப்பும் ஏற்படும்.
துலாம் விருச்சிகம் சனி உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுடன்
கூடிய இடமாற்றம் இருக்கும்.
விருச்சிகம் குடும்பாதிபதி குரு சூரியனுடன் பரிவர்த்தனை பெற்று குடும்ப
ஸ்தானத்தைப் பார்க்கிறார்.
குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும்.
திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
சிலருக்கு புத்திரபாக்கியம் உண்டாகும்.
வாய்க்கு ருசியான உணவு உண்பீர்கள்.
கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துப் பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும்.
பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
நட்பு ரீதியில் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மையைத் தரும்.
விருச்சிகம் 1.1.2017 முதல் 26.7.2017 வரை ராகு 10ல் அமர்வதால் சின்னச்
சின்ன அலைகழிப்புகள் இருக்கும்.
மேலதிகாரியின் குறை, நிறைகளையெல்லாம் சுட்டிக்காட்ட வேண்டாம்.
சக ஊழியர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும்.
விரும்பத்தகாத இடமாற்றங்கள் வரும்.
சம்பள பாக்கி கைக்கு வரும்.
உங்கள் மீது சிலர் வழக்குத் தொடுக்க வாய்ப்பிருக்கிறது.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக