செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

0191. சூரியன் கேதுவுடன் சேர்ந்திருப்பதால்

0191. சூரியன் கேதுவுடன் சேர்ந்திருப்பதால்

மிதுனம் கேதுவும், சூரியனும் 9-ம் வீட்டில் நிற்பதால் அரசு
விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.
வீண் டென்ஷன், வேலைச்சுமை, தந்தையாருடன் மோதல்கள்
வரக்கூடும்.
கடகம் சூரியனும், கேதுவும் 8-ல் தொடர்வதால் அலைச்சல்,
பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறு, உஷ்ணத்தால் அடிவயிற்றில்
வலி வந்துச் செல்லும்.
அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை தாமதமின்றி
செலுத்தப்பாருங்கள்.
வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள்.
துலாம் ராசிக்கு 5-ல் கேதுவும், சூரியனும் நிற்பதால் கூடாப்பழக்க
வழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்க்கப்பாருங்கள்.
யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம்.
பிள்ளைகளின் முரட்டுத் தனத்தை அன்பால் மாற்றுங்கள்.
கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
அரசாங்க அதிகாரிகளை பகைத்து கொள்ளாதீர்கள்.
பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள்.
தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள்.
பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் வந்துப் போகும்.
கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த
மருந்தும் உட்கொள்ள வேண்டாம்.
பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.
தனுசு உங்களுடைய ராசிக்கு 4-ம் வீட்டில் சூரியன் கேதுவுடன் சேர்ந்து
கிரகண தோஷமடைந்திருப்பதால் தந்தையாருக்கு சளித் தொந்தரவு,
நெஞ்சு வலி வந்துப் போகும்.
தனுசு சூரியனும், கேதுவும் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால்
தைரியம் கூடும்.
சில புதிய முடிவுகள் எடுப்பீர்கள்.
கட்டிட வேலைகளை தொடங்குவீர்கள்.
கல்யாண நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.
பூர்வீக சொத்து கைக்கு வரும்.
அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருப்பவர்களின் அறிமுகம்
கிடைக்கும்.
அரசால் அனுகூலம் உண்டு.
வழக்கு சாதகமாக திரும்பும்.
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த உறவினர், நண்பர்களை சந்தித்து
மகிழ்வீர்கள்.
சிலருக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும்.
பழைய வாகனத்தை மாற்றுவீர்கள்.
வேற்றுமதத்தவர்கள், மாநிலத்தவர்களால் உதவிகள் உண்டு.
கும்பம் ராசிக்குள் கேது நிற்பதுடன், சூரியனும் அமர்ந்திருப்பதால் வேனல்
கட்டி, மாதவிடாய்க் கோளாறு, அடிவயிற்றில் வலி வந்து நீங்கும்.
உணவில் காய், கனிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
வேலைச்சுமை அதிகரிக்கும்.
பயன்படுத்த முடியாமல் போன நல்ல வாய்ப்புகளை நினைத்து
கலங்குவீர்கள்.
உடல் உஷ்ணம் அதிகரிக்கும்.
கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
கொஞ்சம் சிக்கனமாக இருங்கள்.
யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம்.
தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும்.
நேரம் ஒதுக்கி யோகா, தியானம் செய்வது நல்லது.
மீனம் உங்கள் ராசிக்கு 12-ல் சூரியனும், கேதுவும் அமர்ந்திருப்பதால்
வீண் டென்ஷன், திடீர் பயணம், தூக்கமின்மை வந்துப் போகும்.
அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக