செவ்வாய், 5 ஜனவரி, 2016

0147. வியாபாரிகள் பகுதி = II

0147. வியாபாரிகள் பகுதி = II

துலாம் புண்ணிய பஞ்சம ஸ்தானத்தை குரு பார்ப்பதால் வியாபாரம்
சாதகமாக இருக்கும்.
புதிய ஏஜென்சிகள் எடுப்பீர்கள்.
புதிய கிளைகள் தொடங்கும் யோகம் உள்ளது.
துலாம் 6-ல் கேது நிற்பதால் வியாபாரத்தில் கடையை விரிவுப்படுத்துவீர்கள்.
பண உதவியும் கிட்டும்.
பழைய பாக்கிகளை இங்கிதமாகப் பேசி வசூலிப்பீர்கள்.
வியாபாரம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
பங்குதாரர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும்.
செல்வாக்குமிக்கவர்கள் பங்குதாரர்களாக வந்து சேருவார்கள்.
ஏற்றுமதி-இறக்குமதி, உணவு, எலக்ட்ரானிக்ஸ், கன்ஸ்டக்ஷன்,
ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயமடைவீர்கள்.
புதிய வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும்.
தொந்தரவு தந்த அனுபவமில்ல வேலையாட்களை நீக்கிவிட்டு
நல்லவர்களை பணியில் அமர்த்துவீர்கள்.
பற்று வரவு உயரும்.
புதுக் கிளைகள் தொடங்குவீர்கள்.
துலாம் உங்கள் தன-சப்தமாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம்
நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால் வியாபாரத்தில் சில
நுணுக்கங்களையும்  தெரிந்து கொள்வீர்கள்.
பங்குதாரரால் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்வீர்கள்.
தள்ளிப் போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
வாடிக்கையாளர்களின்  எண்ணிக்கை அதிகமாகும்.
துலாம் ராகுபகவான் உங்கள் ராசிக்கு லாப வீட்டிற்குள் அமர்வதால்
அனுபவ அறிவால் லாபம் ஈட்டுவீர்கள்.
அதிரடியாக சில சலுகைகளை அறிவிப்பீர்கள்.
வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து  கொண்டு அதற்கேற்ப
புதுத் துறையில் முதலீடு செய்வீர்கள்.
நல்ல வேலையாட்கள் அமைவார்கள்.
வியாபார சங்கத்தில் முக்கிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
சிலர் சொந்த இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள்.     
விருச்சிகம் புதன் 6-ம் இடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு முன்னேற்றமான
பாதை புலப்படும்.
விருச்சிகம் வியாபாரத்தில் தொழில் ஸ்தானத்தில் ராகு அமர்வதால்
சின்னச் சின்ன நஷ்டங்கள் வந்து போகும்.
எதிர்பார்த்த ஆடர் தாமதமாக வரும்.
வேலையாட்களை பணியில் அமர்த்தும் போது விசாரித்து சேர்ப்பது
நல்லது.
விருச்சிகம் லாபத்தைக் குறிக்கும் பதினோராம் வீட்டிற்கு சந்திரன்
வருகிறார்.
குளிர்ச்சியான பொருட்களை வைத்து வியாபாரம் செய்பவர்கள் அதிக
லாபம் பெறப் போகிறீர்கள்
விருச்சிகம் விரய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் வியாபாரம்
ஸ்திரமாக இருக்கும்.
வங்கியில் இருந்து உதவிகள் கிடைக்கும்.
கடையை விரிவுபடுத்துவீர்கள்.
விருச்சிகம் 1.1.2017 முதல் 14.12.2017 வரை ஜென்மச் சனி தொடர்வதால்
புது தொழில் தொடங்கும் முயற்சிகள், பெரிய முதலீடுகள் வேண்டாம்.
போட்டிகளை சமாளிக்க புது திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள்.
வேலையாட்களுக்காக எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும், அதிக
சலுகைகள் தந்தாலும் எந்த பிரயோஜனமும் இல்லையே என
ஆதங்கப்பட்டுக் கொள்வீர்கள்.
வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த முடியாமல் திணறுவீர்கள்.
தனுசு சனிபகவான் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் வியாபாரத்தில் சில
சூட்சுமங்களையும், ரகசியங்களையும் தெரிந்து கொண்டு அதற்கேற்ப
லாபம் ஈட்டுவீர்கள்.
வேலையாட்களை அவர்கள்  போக்கிலே விட்டுப் பிடிப்பது நல்லது.
கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் மனங்கோணாமல் நடத்துங்கள்.
அனுபவமில்லாத புதுத் துறையில் கால்பதிக்க வேண்டாம். 
அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையே செலுத்தப்பாருங்கள்.
மூலிகை, செங்கல் சூளை, போடிங், லாஜிங், வாகன உதிரி பாகங்களால் 
ஆதாயமடைவீர்கள்.
தனுசு உங்களுடைய ராசிக்கு 9-வது வீட்டில் குரு உணவு பண்ட
வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த  தனலாபம் கிடைக்கும்.
கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்வோரருக்குமிகுந்த
கவனம் தேவை.
ஜவுளி வியாபாரிகளுக்கு அலைச்சல் அதிகரித்தாலும் நல்ல
முன்னேற்றம் உண்டு.
தனுசு உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 6-ல் புதனும் 9-ல் குருவும் உலவுவது
சிறப்பாகும்.
வியாபாரம் பெருகும்.
தனுசு உங்களுடைய ராசிக்கு 4-ம் வீட்டில் கேது நிற்கும் போது
வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு.
கமிஷன், புரோக்கரேஜ், ஸ்டேஷனரி வகைகளால் லாபம் வரும்.
புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள்.
பழைய வாடிக்கையாளர்களும் தேடி வருவார்கள்.
புகழ் பெற்ற மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்திற்கு கடையை
மாற்றுவீர்கள்.
ஏற்றுமதி, இறக்குமதி, உணவு வகைகளாலும் ஆதாயமடைவீர்கள்.
புதிய பங்குதாரர்களை சேர்ப்பீர்கள்.
பழைய பங்குதாரர்களுடன் இருந்த மோதல்கள் குறையும்.
தனுசு ஆதாய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் வியாபாரம்
அமோகமாக நடக்கும்.
பொருளாதார ஏற்றம் உண்டு.
யார் பணமாவது உங்கள் கையில் புரண்டு கொண்டேஇருக்கும்.
மகரம் ராசிநாதன் பதினொன்றாம் வீட்டில் இருப்பதால் சுய
முயற்சியில் லாபம் பார்ப்பீர்கள். 
மகரம் பன்னிரெண்டாம் வீட்டையும், உங்கள் ராசிநாதன்
சனியையும் குரு பார்ப்பதால் வியாபாரம் அமோகமாக இருக்கும்.
புதிய முயற்சிகள் பலன் தரும்.
மகரம் தொழில் ஸ்தானமான 10ம் இடத்தில் குரு 2.9.2017 முதல் 31.12.2017 வரை
அமர்வதால் பெரியளவில் யாருக்கும் கடன் தர வேண்டாம்.
அனுபவமிக்க வேலையாட்கள் திடீரென்று பணியை விட்டு விலகுவார்கள்.
வாடிக்கையாளர்களின் கருத்தைக் கேட்டு கடையை இடமாற்றம் செய்வீர்கள்.
கும்பம் உங்கள் ராசியை குரு பார்ப்பதால் வியாபாரம் ஸ்திரமாக இருக்கும்.
பெரிய கான்ட்ராக்ட்கள் எடுப்பீர்கள்.
வேலையாட்களால் செலவுகள் இருக்கும்.
புதிய கிளைகள் தொடங்குவீர்கள்.
வங்கியில் இருந்து உதவிகள் கிடைக்கும்.
மீனம் விரய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் வியாபாரம் உச்சமடையும்.
புதிய ஏஜென்சிகள் எடுப்பீர்கள்.
வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள்.
போட்டிகள் நீங்கும்.
பணப்புழக்கம் அதிகரிக்கும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக