புதன், 30 டிசம்பர், 2015

0131. உத்தியோகஸ்தர்கள் பகுதி = I

0131. உத்தியோகஸ்தர்கள் பகுதி = I

மேஷம் குடும்பாதிபதி சுக்கிரன் லாபஸ்தானத்தில் இருந்தாலும் அவர் இருப்பது
ராசிக்கு பாதகஸ்தானமாகும்.
குடும்பத்தில் நிம்மதி குறையலாம்.
கணவன் - மனைவி ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.
பிள்ளைகள் விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். 
மேஷம் உங்களின் உத்யோக ஸ்தானாதிபதி சனி 8ல் நீடிப்பதுடன்,
27.7.2017 முதல் 31.12.2017 வரை கேது உத்யோக ஸ்தானத்தில்
அமர்வதாலும் கூடுதலாக வேலை பார்க்க வேண்டியது வரும்.
அதிகாரிகளால் மதிக்கப்பட்டாலும் சக ஊழியர்களால் இடையூறுகளை
சமாளிக்க வேண்டியது வரும்.
மேஷம் சனி மூன்றாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தைப் பார்க்கிறார்.
வேலையில் என்னதான் பாடுபட்டாலும் திறமைகளை  வெளிபடுத்த
முடியாதபடி தடைகள் ஏற்படும்.
உங்கள் உழைப்பின் பாராட்டுகளை பிறர் தட்டிச் செல்வார்கள்.
எதிர்பாராத இடமாற்றங்களால்  குடும்பத்தை விட்டுப் பிரிய வேண்டியிருக்கும்;
அலைச்சல்களும் உண்டாகும்.
மேலதிகாரிகளிடம் நிதானமாகப் பேசுங்கள்.
அடிக்கடி உடல் பாதிப்பு  காரணமாக விடுப்பு எடுக்க வேண்டியிருக்கும்.
வரவேண்டிய நிலுவைத் தொகைகளும் இழுபறியாக இருக்கும்.
வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள  வேண்டியதிருக்கும். 
ரிஷபம் குடும்பாதிபதி புதன் லாபஸ்தானத்தில் நீச நிலையில் சஞ்சாரம் செய்தாலும்
அவரது ஸ்தானத்திற்கு கேந்திர பலம் பெறுகிறார்.
குடும்பத்தில் ஏதாவது வேண்டாத பிரச்னை தலை தூக்கலாம்.
உறவினர்கள் நண்பர்கள் பிள்ளைகள் என்று யாரிடமும் வீண் சண்டையை
உருவாக்கிக்கொள்ள வேண்டாம்.
சொத்து சம்பந்தமான விஷயங்கள் அனுகூலம் தரும்.
ரிஷபம் ஜென்ம ராசிக்கு பாக்கிய தொழில் ஜீவன ஸ்தானாதிபதியான சனி 7ல்
சஞ்சரிப்பதால் உத்தியோக ரீதியாக எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று
தடைகளுக்குப் பின் கிட்டும்.
ஆனால் நல்ல உழைப்பாற்றலால் எந்தப் பிரச்னையையும் சமாளித்து
திறமைகளை வெளிப்படுத்தி  உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப்
பெறுவீர்கள்.
உடன் பணி புரிபவர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால்,
வேலைபளு குறையும். 
ரிஷபம் உத்யோக ஸ்தானமான 10ம் வீட்டில் கேது அமர்வதால் 
சக ஊழியர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில்
சிக்குவீர்கள். 
மிதுனம் உங்கள் சஷ்டம-லாபாதிபதியான செவ்வாயின் அவிட்டம்
நட்சத்திரத்தில் கேதுபகவான்  செல்வதால் உத்யோகத்தில்
வேலைச்சுமை குறையும். 
உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.
உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் மேலதிகாரியை வியக்க
வைப்பீர்கள்.
சக ஊழியர்களில்  ஒருசிலர் இரட்டை வேடம் போடுவதையும் நீங்கள்
உணர்ந்து கொள்வீர்கள்.
மிதுனம் பத்தாம் வீட்டிற்கு குரு பார்வை கிடைத்திருப்பதால்
உத்யோகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மிதுனம் 2.9.2017 முதல் 31.12.2017 வரை உங்களின் உத்யோக ஸ்தானாதிபதி
குருபகவான் சாதகமாவதால் பணிகளை முடிப்பதிலிருந்த தேக்கநிலை மாறும்.
வேலைச்சுமையும் குறையும்.
உங்களை கசக்கிப் பிழிந்து, உருக்குலைய வைத்த மேலதிகாரி வேறிடத்திற்கு
மாற்றப்படுவார்.
சகஊழியர் களும் மதிக்கத் தொடங்குவார்கள். 
மிதுனம் குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால்
உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும்.      
மிதுனம் ஜென்ம ராசிக்கு சனி பகவான் 6ல் சஞ்சாரம் செய்வது அற்புதமான
அமைப்பாகும்.
பணிபுரிபவர்கள் எதிர்பாராத வகையில்  கௌரவமான பதவி உயர்வுகளைப்
பெற முடியும்.
தங்கள் திறமையால் மேலதிகாரிகளின் அபிமானத்துக்குப் பாத்திரமாவீர்கள்.
இதனால் இதுவரை  நிலுவையிலிருந்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு
எல்லாம் மனம் மகிழ கிட்டும்.
இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருப்பவர்கள்  மீண்டும்
சேருவதற்கான இடமாற்றம் கிடைக்கும்.
உடன் பணிபுரிவர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும்.
மிதுனம் உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் கேது நிற்பதால் உழைப்பிற்கேற்ற
அங்கீகாரம் இல்லையே என அவ்வப்போது வருத்தப்படுவீர்கள்.
ஆனாலும் மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.
ஒரு அதிகாரி உங்களுக்கு எதிராக இருந்தாலும் மற்றொரு அதிகாரி
உங்களுக்கு சாதகமாக இருப்பார்.
எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
அதிக சம்பளத்துடன் வேறு நல்ல நிறுவனத்திலிருந்தும் அழைப்பு வரும்.
சம்பள பாக்கி கைக்கு வரும்.
பதவி உயர்வையும் நீங்கள் எதிர்பார்க்கலாம்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக