0130. வியாபாரிகள் பகுதி = I
மேஷம் 1.1.2017 முதல் 14.12.2017 வரை அஷ்டமத்துச் சனி
தொடர்வதால் வேலையாட்கள் அடிக்கடி விடுப்பில் செல்வார்கள்.
பல நாட்கள் நீங்களே தொழிலாளியாகவும், முதலாளியாகவும்
இறங்கி வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
புதிய வேலையாட்களை பணியில் அமர்த்தும்போது விசாரித்துச் சேர்ப்பது
நல்லது.
அவர்களுக்கு அதிகத்தொகை முன்பணமாக தர வேண்டாம்.
வாடிக்கையாளர்களுடன் போராட வேண்டி வரும்.
பங்குதாரர்களில் சிலர் தங்களது பங்கை கேட்டு தொந்தரவு தருவார்கள்.
யாருக்கும் கடன் தர வேண்டாம்.
மற்றவர்கள் பேச்சைக் கேட்டு பெரிய முதலீடுகள் போட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள்.
இருப்பதை வைத்து லாபம் ஈட்டப் பாருங்கள்.
வேலையாட்களுக்கு அதிக சம்பளம் கொடுத்தும், சலுகைகள் கொடுத்தும் எந்த
பிரயோஜனமும் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள்.
தொழில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும்.
ஏஜென்சி, மார்க்கெட்டிங், கமிஷன், ரியல் எஸ்டேட், மூலிகை வகைகளால்
லாபமடைவீர்கள்.
சிலர் வழக்குத் தொடரவும் வாய்ப்பிருக்கிறது.
மேஷம் தொழில் ஸ்தானத்தில் பஞ்சம, பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி
சூரியன் அமர அவரை ராசிநாதன் பார்க்கிறார்.
பகை வீட்டில் சூரியன் இருப்பதால் வியாபாரம் சுமாராக நடக்கும்.
பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும்.
ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு நீங்கும்.
மேஷம் உங்கள் ராசிநாதனும்-அஷ்டமாதிபதியுமான செவ்வாயின்
அவிட்டம் நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால் வியாபாரத்தில்
முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனத்துடன் புது
ஒப்பந்தம் செய்வீர்கள்.
இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களை கவருவீர்கள்.
மேஷம் லாப ஸ்தானத்தில் குருவின் பார்வை பதிவதால் தொட்டது
துலங்கும்.
வியாபாரம் சீராக இருக்கும்.
ரிஷபம் உங்கள் ராசிக்கு 2-ல் புதனும்; சுக்கிரனும், 10-ல் கேதுவும் உலவுவது
நல்லது.
வியாபாரம் பெருகும்.
ரிஷபம் உங்கள் விரயாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில்
கேதுபகவான் செல்வதால் வியாபாரம் சுமாராக இருக்கும்.
சரக்குகள் கொள்முதல் செய்யும்போது கவனம் தேவை.
சந்தை வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப்பெற போராட
வேண்டியது வரும்.
ரிஷபம் புதன் 12-ம் இடம் மாறுவதால் வியாபாரிகள் விழிப்புடன்
செயல்படுவது நல்லது.
மிதுனம் உங்கள் சஷ்டம-லாபாதிபதியான செவ்வாயின் அவிட்டம்
நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால் வியாபார ரகசியங்கள்
யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து
அதற்கேற்ப செயல்படுவீர்கள்.
பழைய வாடிக்கையாளர்களும் தேடி வருவார்கள்.
பாக்கிகளை வசூல் செய்ய புதிய ஆட்களை நியமனம் செய்வீர்கள்.
கடகம் உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 10-ல் செவ்வாயும் உலவுவதால்
வியாபாரிகள் அகலக்கால் வைக்க வேண்டாம்.
கடகம் அஷ்டம ஸ்தானமான எட்டாம் இடத்தை குரு பார்ப்பதால்
வியாபாரம் அமோகமாக நடக்கும்.
சிம்மம் ஜன்ம ராசியில் குரு இருந்தாலும் அவரது பார்வை 5, 7, 9-ம்
இடங்களுக்குப் பதிவதால் நலம் உண்டாகும்.
வியாபாரிகளுக்கு அளவோடு லாபம் கிடைத்துவரும்.
சிம்மம் சப்தம ஸ்தானத்தை குரு பார்ப்பதால் வியாபாரம் விருத்தியாகும்.
போட்டிகள் நீங்கும்.
பணத் தேவைகள் பூர்த்தியாகும்.
வங்கியில் இருந்து உதவிகள் கிடைக்கும்.
சிம்மம் 1.1.2017 முதல் 14.12.2017 வரை அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால்
வேலையாட்கள் முரண்டு பிடிப்பார்கள்.
அவர்களிடம் வேலை வாங்குவதற்குள் அவர்களை எதிர்பார்க்காமல் நாமே
அந்த வேலையை செய்து விடலாம் என்று முடிவெடுப்பீர்கள்.
தொழில் போட்டி அதிகமாகும்.
அரசு சம்பந்தப்பட்ட டென்டர்கள், கான்ட்ராக்ட் விஷயத்தில் கவனமாக
செயல்படுங்கள்.
உங்கள் ரசனைக்கேற்ப கடையை விரிவுபடுத்தி, அழகுபடுத்துவீர்கள்.
உணவு, போர்டிங், லாட்ஜிங், லெதர், மளிகை வகைகளால்
ஆதாயமடைவீர்கள்.
பங்குதாரர்களால் பிரச்னைகள் வெடிக்கும்.
கன்னி ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தை குரு பார்ப்பதால் வியாபாரம்
லாபகரமாக நடக்கும்.
கன்னி புதன் 8-ம் இடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு வெளிச்சமான
பாதை தெரியவரும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக