ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

MEGALA HOME CHANNEL #SHORTS

MEGALA HOME CHANNEL #SHORTS MEGALA HOME CHANNEL #SHORTS https://youtu.be/-yTbnR018kA Megala House Aathyanta Worship #Shorts https://youtu.be/rcYH7_Na1FA Saptha Kanniyar#Shorts https://youtu.be/PiRiy1Upsz4 Megala House Flute#Shorts https://youtu.be/7EvRmtnD_ZM Megala House Arugampull worship#Shorts https://youtu.be/dE4W4d7V7jU Megala House Varahi Worship#Shorts Part I https://youtu.be/FdG4AgJgmbY Megala House Banana flower worship#Shorts https://youtu.be/XRVKg3DBIhM Megala House Neem Oil Deepam#Shhorts https://youtu.be/wwerMmyJ9Vs Megala House Kula Deivam Worship#Shorts Part I https://youtu.be/F2-GT9-j3qM Megala House Vel Worship#shorts https://youtu.be/Z3K7zrqa9Yk Megala House Nandha Vilakku Deepam#Shorts https://youtu.be/ppLrY6B75Zo Megala House Dhosha Nivarthi Deepam#Shorts https://youtu.be/dbPRJ6OQimQ Megala House Kula Deivam Deepam #shorts https://youtu.be/pnSoqFtXN3c To drive away evil spirits at home#shorts https://youtu.be/m9uS-YmKL6Y Megala House Red Thiri Deepam #shorts https://youtu.be/lS_3VVUZnjo Megala House Varaha Worship#shorts https://youtu.be/VoXqu9p1n58 Megala House Pradakshina Worship#shorts https://youtu.be/pi4dBUJoIs0 Megala House Tail Worship#shorts https://youtu.be/kgJFaMn-J8A Megala House Kula Deivam Worship#Shorts Part II https://youtu.be/CUD1BYa34BI Megala House Ninaithathu Nadakka#Shorts https://youtu.be/b33LYaZwvpE Megala House Kula Deivam Worship#Shorts Part III https://youtu.be/OBADrX2E7xg Raaja Yogam#Shorts https://youtu.be/v7EjPKXet48 Megala House Dark Blue Thiri Deepam #shorts https://youtu.be/Hli16vxriJA Pura Nangal arivom#Shorts Part I https://youtu.be/cExLKw4Ps5E Pura Nangal arivom#Shorts Part II https://youtu.be/dXyov4Uvkrg Vinayagar Abhishekam#Shorts https://youtu.be/_wvQDnPG9X0 Megala House Varahi Worship#Shorts Part II https://youtu.be/5QEHOpMG-Kw மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : vijay4.11.2011@gmail.comக்கு அனுப்பவும். நன்றி, R.Megala Gopal.

MEGALA HOME CHANNEL Part I

MEGALA HOME CHANNEL Megala House Varahi Abhishekam Part II https://youtu.be/v3abLc-Uobo Megala House Saptha Kanniyar https://youtu.be/qANjx7FipkA Muppudathi amman kovil https://youtu.be/wONI1ZheLWA Megala House Vastu Puja https://youtu.be/o8H8c-2wudM Megala House Varahi Abhishekam Part I https://youtu.be/RNjELUjf1AU Megala House Sani Deepam https://youtu.be/iscStAaY6hc Megala House Maruthani Deepam https://youtu.be/h6SjWBkigvI Megala House Ganesh Chathurthi Poojai https://youtu.be/-ExVShY-dxg Megala House Kula Deivam Worship - Part 1 https://youtu.be/oARaZG82vc8 Black Magic https://youtu.be/LaMn3bpSynU HOW TO DOWNLOAD VIDEO Megala House Kunguma Archanai Worship https://youtu.be/5ph3ab_TV2w HOW TO DOWNLOAD VIDEO Megala House Varahi Abhishekam Part III https://youtu.be/aHANiIPwBTY HOW TO DOWNLOAD VIDEO The house the Lord desires https://youtu.be/lMfS9b6tWr4 HOW TO DOWNLOAD VIDEO 4000 Divyaprabandham https://youtu.be/t8PGEdBvUZY HOW TO DOWNLOAD VIDEO FLUTE https://youtu.be/9FTUX_gNLAU Sudarsana Perumal who lives a luminous life https://youtu.be/pf4Ic3SADSs HOW TO DOWNLOAD VIDEO Raghavendra mahimai https://youtu.be/AAE1JwxTpOc HOW TO DOWNLOAD VIDEO Civappu nira gaupinam https://youtu.be/zGUuGQz8_2M HOW TO DOWNLOAD VIDEO punniyam https://youtu.be/y4LzlODFWWw HOW TO DOWNLOAD VIDEO Megala House Macha Avatharam https://youtu.be/B5x-p6-VGaU HOW TO DOWNLOAD VIDEO The first three Alvars: Poikai, Bhutan and Payan https://youtu.be/QrwJBbtCASQ HOW TO DOWNLOAD VIDEO Tears https://youtu.be/qdXpe5s2qow மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megalahomechannel@gmail.comக்கு அனுப்பவும். நன்றி, R.Megala Gopal.

திங்கள், 6 செப்டம்பர், 2021

Yoga abroad

Yoga abroad வெளிநாடு யோகம் 9ம் அதிபதி சனி அமையப் பெற்ற நட்சத்திர அதிபதி சர ராசியாக அமையப் பெற்றால் வெளிநாடு செல்லக் கூடிய யோகம் உண்டாகும்.

12 th House in Horoscope

12ம் அதிபதி ஆட்சி ஜென்ம லக்னத்திற்கு 12ம் அதிபதி ஆட்சி பெற்றிருந்தால் பிறந்த ஊரில் பெயர், புகழுடன் வாழக் கூடிய அமைப்பு உண்டாகும்.

Mandi

Mandi மாந்தி மாந்தி நின்ற ராசிநாதனும் மாந்தியுடன் கூடிய கிரகங்களும் சனி போல கெடுப்பர். 4ல் நின்றால் இவர் பிறந்த காலத்தில் தாயார் மிகவும் துன்பப்பட்டிருப்பார்… பிற்காலத்தில்தான் அவருக்கு சுகம் உண்டு. இவருக்கு நிறைய அலைச்சல் உண்டாகும்… முறையான சுகம் கிடைப்பதில் தடங்கல் ,சொத்துக்களில் சிக்கல் காணப்படும்.

சனி, 15 ஜூன், 2019

குரு பலம் குறைவாலும்

அதிக சிரமத்தைச் சந்திப்பவர்கள், அதற்கு பரிகாரமாக

மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளியவர்களுக்கு தானம் செய்யவும்.
மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, கைகுட்டை உபயோகிப்பது, மஞ்சள் நிற பூக்களை அணிவது நல்லது. வெண் முல்லை மலர்களால் குருவுக்கு அர்ச்சனை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
நாடாளும் யோகம் ரிஷபம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகிய நான்கு ராசிகள் வியாழ வட்டம் என்றும் குரு வளையம் என்றும் அழைக்கப்படுகிறது. ஒருவர் பிறந்த ஜாதகத்தில் குரு பகவான் இந்த ராசிகளில் ஏதாவது ஒன்றில் இருந்தால் அவருக்கு பல யோக அம்சங்கள் கூடிவரும். ஏதாவது ஒரு தலைமைப் பொறுப்பில் இருப்பார். வங்கி, நிதித்துறை, நீதித்துறையில் உயர்ந்த பதவிகளை வகிக்கும் பாக்யம் ஏற்படும். சமூகத்தில் இவரின் சொல்லிற்கு ஒரு மதிப்பு இருக்கும். நாடாளும் யோகத்தையும் குரு பகவான் அருள்வார்.
லக்னாதிபதி யோகம் ஜென்ம லக்னத்திலிருந்து குரு பகவான் 6,7,8ல் சுக்கிரன் புதன் போன்ற சுப கிரகங்களின் சேர்க்கைப் பெற்றால் லக்னாதிபதி யோகம் உண்டாகிறது. இந்த யோக அமைப்பால் உயர்ந்த பதவி, சந்தோஷமான வாழ்வு, பெரிய மனிதர்களின் தொடர்பு, நீண்ட ஆயுள் போன்ற உன்னதமான நற்பலன்கள் உண்டாகும்.
கோடீஸ்வர யோகம், கோடீஸ்வரர் என்ற பட்டம் ஒருவருக்கு கிடைக்கிறது என்றால் அது குரு-கேது சேர்க்கை காரணமாக ஏற்பட்டது என்று ஆணித்தரமாக சொல்லலாம். நவகிரகங்களில் குருவிற்கும், கேதுவிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கேது ஞான மோட்சகாரகன்; குரு ஞானம், அறிவு, வேதம், தவம், மந்திரசித்தி போன்றவற்றிற்கு ஆதாரமானவர்.
கலைத்துறையில் யோகம் ஆன்மிக விஷயங்களில் ஈடுபாடு, கோயில் கட்டுதல், கும்பாபிஷேகம் செய்தல், பெரிய தர்ம ஸ்தாபனம் அமைக்கும் பாக்யத்தை ஏற்படுத்துவார். சங்கீதம், பாட்டு, இயல், இசை, திரைப்படத் துறையில் யோகத்தை தருவார். சிறந்த மருத்துவ நிபுணர்களை உருவாக்கும் வல்லமை குரு-கேதுவுக்கு உண்டு.
குரு - சந்திர யோகம்

யோகங்கள் பெரும்பாலும் சந்திரன் மூலம்தான் ஏற்படுகின்றன.
ஜாதகத்தில் சந்திரனுக்கு கேந்திரத்தில் அதாவது, ராசிக்கு 4, 7, 10 ஆகிய வீடுகளில் குரு இருந்தால் கெஜகேசரி யோகம்.
குருவுடன் புதன் சேர்ந்தால் வித்யா கெஜ கேசரி யோகம்.
இந்த அமைப்பு ஜாதகரை உச்சத்திற்குக் கொண்டு செல்லும்.
கல்வியில் பிரகாசிப்பார்கள்.
கல்வியில் சாதனை ஒருவரின் ஜாதகத்தில் குருவும்- சந்திரனும் ராசியில் சேர்ந்து இருந்தாலும் அல்லது ராசிக்கு 5, 9 ஆகிய இடங்களில் இருந்தாலும் குரு - சந்திர யோகம் உண்டாகிறது. இதன் மூலம் உயர்ந்த கல்வி, சாதனை படைக்கும் ஆற்றல் ஏற்படும்.
சந்திராதிபதி யோகம் ஜாதகத்தில் சந்திரனிலிருந்து 6,7,8ல் குரு,சுக்கிரன், புதன் போன்ற சுப கிரகங்கள் அமையப் பெற்றிருந்தால் சந்திராதிபதி யோகம் உண்டாகிறது. இதனால் மனமகிழ்ச்சி சத்துரு தொல்லையின்றி இருந்தல், உயர்ந்த பதவி, தீர்க்காயுள், நல்ல மனோதிடம், பெயர், புகழ் செல்வம், செல்வாக்கு போன்ற யாவும் சிறப்பாக அமையும்.
வசுமதி யோகம் ஒருவரின் ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ குரு பகவான் 3,6,10,11 ஆகிய இடங்களில் சுக்கிர புதன் சேர்க்கை பெற்றிருந்தால் வசுமதி யோகம் உண்டாகிறது. இந்த யோகத்தால் ஜாதகர் தன் சொந்த முயற்சியால் முன்னேறுவார். செல்வம், செல்வாக்கு யாவும் சிறப்பாக அமையும்.
சண்டாள யோகம், ஜாதகத்தில் குரு, ராகு சேர்க்கை பெற்றிருப்பது (அ) ராகுவை குரு பார்ப்பதனால் இந்த யோகம் உண்டாகும். இதனால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். இந்த யோகம் அமையப் பெற்றால் வாழ்வின் திடீர் உயர்வையும் எதிர்பாராத தனவரவையும் உண்டாக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பும், நட்பும் உண்டாகி மகிழ்ச்சி அளிக்கும்.
சகடையோகம், சந்திரனுக்கு 6,8,12ல் குரு மறைவு பெற்றால் சகடை யோகம் உண்டாகிறது. இந்த யோகம் அமையப் பெற்றால் வாழ்க்கை வண்டி சக்கரம் போல ஏற்றத் தாழ்வுகள் உடையதாக இருக்கும். ஆனால் குரு அமையப் பெற்றிருக்கும் வீடு சுபர் வீடாக இருந்தால் பெரிய கெடுதிகள் எதுவும் ஏற்படாது.
குரு மங்கள யோகம், ஒருவரின் குரு செவ்வாய்க்கு கேந்திரத்தில் அமையப் பெறுவது. குருவுக்கு கேந்திரமாகிய 4,7,10ல் செவ்வாய் அமைந்திருந்தால் குரு மங்கள யோகம் உண்டாகிறது. இதனால் பூமி, வீடு, வாகனம் போன்றவை சேரும் யோகம். இந்த யோகம் அமைந்த ஜாதகருக்கு வீடு, மனை நிலபுலன்களால் ஜாதகருக்கு அனுகூலமான பலன்கள் ஏற்படும்.
ஹம்ச யோகம், ஒருவரின் ஜாதகத்தில் குரு ஆட்சியோ, உச்சமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானத்தில் அமையப் பெறுவது. இதனால் நீண்ட ஆயுள், சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை உயரும் அமைப்பு, செல்வம், செல்வாக்கு போன்ற யாவும் சிறப்பாக அமையும்.
கஜகேசரி யோகம் ஒருவர் ஜாதகத்தில் சந்திரனுக்கு கேந்திரமாகிய 4,7,10ல் குரு காணப்பட்டால் கஜகேசரி யோகம் உண்டாகிறது. கஜம் என்றால் யானை கேசரி என்றால் சிங்கம். பல யானைகளுக்கு மத்தியில் வாழக்கூடிய சிங்கம் போன்ற வலிமை இந்த யோகத்தால் உண்டாகும். நீண்ட ஆயுள் புகழ், செல்வம், செல்வாக்கு, உற்றார், உறவினர்களின் ஆதரவுகள் எடுக்கும் காரியங்களில் வெற்றி, போன்ற உன்னதமான நற்பலன்கள் அமையும். அரசியலில் உயர்ந்த பதவிகளை வகிக்க கூடிய யோகம் உண்டாகும்.
ராஜயோக பலன் குரு-கேது சேர்க்கை, பார்வை, சாரபரிவர்த்தனை, ஒருவருக்கொருவர் கேந்திரம், கோணம் என சம்பந்தப்பட்டு இருந்தால் உயர்ந்த பதவி, அந்தஸ்து, அதிகாரம் கிடைக்கும். குருவும்-கேதுவும் சேர்ந்து இருந்து, குருவிற்கு ஒன்பதாம் வீட்டில் புதனும் சுக்கிரனும் இருந்தாலும் அல்லது இருவரில் ஒருவர் இருந்தாலும் அந்த ஜாதகர் அவரவர் பூர்வ கர்ம பிராப்தத்திற்கு ஏற்ப மிகப்பெரிய ராஜயோக பலன்களை அனுபவிப்பார்.

ஜாதகத்தில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு?

ஜாதகத்தில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு?

ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் ஒவ்வொரு விதமான கிரக அமைப்புக்கள். மூலம், பார்வை, சேர்க்கை, ஆட்சி, உச்சம், மூலத் திரிகோணம். பஞ்ச மகாபுருஷ யோகம், பலவகையான ராஜ யோகங்கள் உள்ளன. இந்த வகையான யோகங்கள் சுபயோகம், சுப கத்திரி யோகம், பாப கத்திரி யோகம் என பல பிரிவுகள் இருக்கின்றன. இதில் இந்த நீசபங்க ராஜயோகம் என்பது மிகவும் பிரபலமான யோகமாகும். இது அனுபவபூர்வமாகவும் மிகச்சரியாக பலன் தருகிறது.

எல்லா கிரகங்களும் ஒவ்வொரு வீட்டில் நீச்சம் அடையும். நீச்சம் பெற்ற கிரகம் நீச்ச தன்மையிலேயே இருந்தால் அந்த கிரகத்தின் மூலம் நமக்கு கிடைக்கும் பலன்கள் ஒரு 20 சதவிகிதம்கூட கிடைக்காது. அதேநேரத்தில் அந்தக் கிரகத்திற்கு நீச்ச பங்கம் ஏற்பட்டு இருந்தால் மிகப்பெரிய ராஜயோகத்தை கொடுத்துவிடும்.

சூரியன் துலா ராசியில் நீசம் அடையும்.

சந்திரன் விருச்சிக ராசியில் நீசம்.
குரு மகர ராசியில் நீசம்.
புதன் மீன ராசியில் நீசம்.
சுக்கிரன் கன்னி ராசியில் நீசம்.
சனி மேஷ ராசியில் நீசம்.
செவ்வாய் கடக ராசியில் நீசம்.

நீச கிரகம் எப்போது ராஜயோகம் கொடுக்கும்?

நீசன் நின்ற ராசிக்குடையவன் ஆட்சி, உச்சம் பெற்றால் நீசபங்க ராஜயோகம்.
நீச கிரகம் பரிவர்த்தனையில் இருந்தால் நீசபங்க ராஜயோகம்.
நீச்ச கிரகம் வர்க்கோத்தமம் அடைந்தால் நீசபங்க ராஜயோகம்.
நீச கிரகம் சந்திரனுக்கு கேந்திரத்தில் இருந்தால் நீசபங்க ராஜயோகம்.
நீச கிரகத்தை இன்னொரு நீச்ச கிரகம் பார்ப்பது நீசபங்க
ராஜயோகம்.

நீச கிரகம் நவாம்ச சக்கரத்தில் உச்சம், ஆட்சி பெற்றால் நீசபங்க ராஜயோகம்.
நீச கிரகம் வக்கிரமாக இருந்தால் நீச பங்க ராஜயோகம்.

வியாழன், 8 நவம்பர், 2018

0268. அமிர்தாதி யோகங்கள்

0268. அமிர்தாதி யோகங்கள்

யோகம் என்றால் சேர்க்கை என்று பொருள்.
நட்சத்திரங்கள் மற்றும் கிழமைகளின் சேர்க்கையால் நான்கு விதமான யோகங்கள் உண்டாகின்றன.
அவைகளுக்கு அமிர்தாதியோகங்கள் என்று பெயர்.

தினசரி உண்டாகும், அமிர்தயோகம், சித்தயோகம், சுபயோகம், மரணயோகம், நாசயோகம், ப்ரபலாரிஷ்டயோகம் என்பவை. இவற்றில் அமிர்தயோகம் சித்தயோகம், சுபயோகம் ஆகியவை நல்லவை.
நாச யோகம், மரணயோகம் ப்ரபலாரிஷ்ட யோகம் ஆகியவை நல்லவையல்ல.
இவை தினந்தோறும் நட்சத்திரமும் கிழமையும் கூடும் போது ஏற்படுபவை.

அமிர்தாதி யோக அட்டவணையை கவனித்துப்பார்த்தால் ஒரு விசயம் கண்ணில்படும்.
அதாவது புனர்பூசம்,பூரம்,ஸ்வாதி,உத்திரட்டாதி ஆகிய நான்கு நட்சத்திரங்கள் எந்த கிழமையோடு சேர்ந்து வந்தாலும் மரண யோகமோ,பிரபலாரிஷ்ட யோகமோ உண்டாவதில்லை.
எனவே இந்த நான்கு நட்சத்திரங்களில் பிறந்தவர்களுடன் தொடர்பு ஏற்படும் காலங்களில் அனைத்து காரியங்களும் சித்தியாகும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

புதன், 5 செப்டம்பர், 2018

0267. கோமதி சக்கரம்

0267. கோமதி சக்கரம்

ஆன்மிக வளங்களை தாங்கி நிற்கக்கூடிய பொருட்களில், நம்மால் அதிகம் அறியப்படாத பொருளாக ‘கோமதி சக்கரம்’ இருக்கிறது.
இது சங்கு போன்ற ஒரு வகை சிறிய கல் ஆகும்.

கோமதி சக்கரத்தை, நாக சக்கர மோதிரமாக செய்து, சர்ப்ப தோஷம் விலக பயன்படுத்துகிறார்கள்.
அதாவது அதன் சுழியானது பாம்பு தனது உடலை சுற்றி வைத்திருப்பது போன்ற தோற்றத்தில் இருப்பது கவனிக்கத்தக்கது.
ராகு தசையால் பாதிக்கப்பட்டவர்கள் கோமதி சக்கரத்துடன் கோமேதக கல்லையும் சேர்த்து வைத்து வீட்டில் வழிபட்டு வரலாம்.

கேதுவின் தசையானது ஜாதக ரீதியாக பாதிப்பை தரும் அமைப்பில் இருந்தால், அந்த நபர் கோமதி சக்கரத்துடன், வைடூரிய கல்லை வைத்து வீட்டில் வழிபட்டு வரலாம்.
தங்களது ஜாதகங்களில் கால சர்ப்ப தோஷம் மற்றும் சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் கோமதி சக்கர வழிபாட்டை செய்து வருவது நல்லது.

கோமதி சக்கரம் செல்வ பெருக்கத்தை தொழில் பெருக்கத்தை உண்டாக்கும்.
நிம்மதியைக் கொடுக்கும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

செவ்வாய், 4 செப்டம்பர், 2018

0266. பித்ரு தோஷம்

0266. பித்ரு தோஷம்

நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம்.
அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும்.

தீய விளைவுகள்

திருமணம் நடக்காது அல்லது மிகவும் தாமதமாக நடக்கும்.
விவாகரத்து ஏற்படலாம்
தம்பதியினரிடையே அன்னியோன்னியம் இருக்காது
குழந்தைப் பாக்கியம் இருக்காது
கடுமையான உடல் உபாதைகள் ஏற்படும்.
மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும்.
பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு
கலப்புத் திரும ணம் நடக்கவும், பெற்றோருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு.

ஜாதகத்தில் கண்டறிவது எப்படி?

ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகு வுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு.
ஜாதகத்தில், லக்னத்துக்கு 1, 5, 7, 9 முதலான இடங்களில் இராகு அல்லது கேது இருந்தால் நீங்கள் பிதுர்தோஷத்துடன் பிறந்துள்ளதாக அர்த்தம்.

இராமபிரான் இந்து ஆன்மீகம் 0110. பித்ரு பூஜை

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

0265. சங்கு தீபம்

0265. சங்கு தீபம்

செவ்வாய் தோஷம், தோஷங்களில் மிக உயர்ந்த தோஷமான
பிரம்மஹத்தி தோஷத்தை விரட்டும் ஆற்றல், வலம்புரி
சங்குக்கு மட்டுமே உண்டு.

வீட்டில் வலம்புரி சங்கு வைத்து வழிபட்டால், மற்றவர்களுக்கு
உதவும் அளவுக்கு நம் பொருளாதார நிலை உயரும்.
செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் வலம்புரி சங்கு தீபம் வழிபட்டு
வந்தால் எல்லா தோஷங்களும் நீங்கி விடும்.

கண்திருஷ்டி, பகைவர்களின் நீசச் செயல் எதுவுமே பலனிழந்து போகும்.
கடன் பிரச்சினை நீங்கும்.
வாஸ்து தோஷங்கள் யாவும் விலகும்.

வலம்புரிச் சங்கு தீபம் செய்பவர்களின் பிரம்மதோஷம் விலகி விடும்.
வாஸ்து தோஷம்
அதிகக் கடன் வாங்கியவர்கள்
பில்லி சூன்யங்கள், ஏவல்கள் நெருங்காது. ஓடிவிடும்.

இராமபிரான் இந்து ஆன்மீகம் 0109. சங்கு தீபம்

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.