புதன், 10 பிப்ரவரி, 2016

0187. நண்பர்கள்

0187. நண்பர்கள்

மேஷம் சிம்மத்தில் குரு பகவான் 5–ல் சஞ்சரித்து உங்கள் ராசியைப்
பார்க்கப் போகிறார்.
குரு வக்ர இயக்கத்திலே தான் வந்து பார்க்கப் போகிறார்.
வக்ர இயக்கத்தில் குரு இருந்தாலும் கூட உங்கள் ராசியைப்
பொறுத்தவரை 12–க்கு அதிபதியாகவும் குரு விளங்குவதால்
புதிய நண்பர்களின் அறிமுகம் இனிய பலன்களை ஏராளமாகக்
கொடுக்கப் போகின்றது. 
மிதுனம் சூரியன் 6-ல் நிற்பதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள்.
மிதுனம் ஆறாம் வீட்டிலுள்ள சுக்கிரனால் நண்பர்களுடன் நல்ல
முறையில் நட்பு நிலவும்.
மிதுனம் ராசிநாதன் புதன் உங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதால்
நண்பர்களுடன் இருந்த விரிசல்கள் விலகும்.
கடகம் ஆறாம் வீடு பலம் பெற்றிருப்பதால் நண்பர்களின் உதவி
கிடைக்கும்.
கடகம் புதன் 6-ல் மறைந்திருப்பதால் நண்பர்களுடன் பகைமை
வந்துச் செல்லும்.
கடகம் உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் ராகு, 4-ல் சுக்கிரன், 6-ல்
சூரியனும் புதனும் உலவுவதால் நண்பர்களும் நலம் புரிவார்கள்.
கடகம் ஆறில் புதன் - நண்பர்கள் உதவுவார்கள்.
கடகம் குரு பகவான் ஆறாம் வீட்டைப் பார்ப்பதால் நண்பர்கள் குரு
ஸ்தானத்தில் இருந்து உதவுவார்கள். 
கடகம் கன்னி ராசிக்கு குரு பகவான் அதிசாரமாகச் செல்கிறார்.
அதன் பார்வை 7, 9, 11 ஆகிய இடங்களில் பதிகின்றது.
நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
சிம்மம் குரு ராசிக்குள் ஜென்ம குருவாக அமர்வதால் திடீரென்று
அறிமுகமாகி உங்களை அதிகம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும்
புது நண்பர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
கன்னி சனி 3-ம் வீட்டிலும், சூரியன் 6-ல் அமர்ந்திருப்பதால் எதிர்த்தவர்கள்
நண்பர்களாவார்கள்.
துலாம் உங்களுடைய ராசிநாதன் சுக்ரன் உங்கள் ராசியைப் பார்த்துக்
கொண்டிருக்கும் போது நண்பர்களுடன் இருந்து வந்த உரசல்
போக்கு நீங்கும்.
பழைய நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள்.
துலாம் கேது 6-ம் வீட்டில் வலுவாக நிற்பதால் நண்பர்கள்
வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக